Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (82)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-82

திரவனும் திங்களும் மேகத்தில் மறைந்த காலத்திலும், நாழிகைக் கணக்கர் அயர்ந்த காலத்திலும் மலர்ப் போதுகள் பொழுதைத் தம் மலர்ச்சியால் அறிவிக்கத் தவறுவதில்லை. இயற்கையின் அசைவுகளைக்கொண்டு நம் முன்னோர்கள் உருவாக்கிய காலக் கணிதம், அந்நியர்களால் அழிந்துவிட்டது. காலணிக்கேற்ப கால்களை வெட்டிக்கொண்ட கதையானது.

Advertisment

நொடி வேறு; வினாடி வேறு. இரண்டையும் ஒன்றென்று எண்ணியதால் பிழை உண்டானது. பஞ்சாங்க கணணத்தின் வேறுபாடுகளைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்த கிருஷ்ணன் நம்பூதிரிக்கு காலதேவதை உதவினாள்.

சந்தேகமே தேகம் எடுத்து வந்ததுபோல், குழப்பத்துடன

திரவனும் திங்களும் மேகத்தில் மறைந்த காலத்திலும், நாழிகைக் கணக்கர் அயர்ந்த காலத்திலும் மலர்ப் போதுகள் பொழுதைத் தம் மலர்ச்சியால் அறிவிக்கத் தவறுவதில்லை. இயற்கையின் அசைவுகளைக்கொண்டு நம் முன்னோர்கள் உருவாக்கிய காலக் கணிதம், அந்நியர்களால் அழிந்துவிட்டது. காலணிக்கேற்ப கால்களை வெட்டிக்கொண்ட கதையானது.

Advertisment

நொடி வேறு; வினாடி வேறு. இரண்டையும் ஒன்றென்று எண்ணியதால் பிழை உண்டானது. பஞ்சாங்க கணணத்தின் வேறுபாடுகளைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்த கிருஷ்ணன் நம்பூதிரிக்கு காலதேவதை உதவினாள்.

சந்தேகமே தேகம் எடுத்து வந்ததுபோல், குழப்பத்துடன் பிரசன்னம் பார்க்க வந்தார் ஒரு இளைஞர். நட்சத்திர சந்தியில் பிறந்ததால் தனது ஜென்ம நட்சத்திரம் அஸ்வினியா- பரணியா என்பதே அவர் தடுமாற்றத்திற்குக் காரணமானது. மலையாளப்புழா பகவதியை வணங்கிய கிருஷ்ணன் நம்பூதிரி நஷ்ட ஜாதகக் கணிதத்தைத் தொடங்கினார்.

aa

Advertisment

சோழி லக்னம், பிரசன்ன லக்னம், சந்திரா லக்னம் ஆகிய மூன்றும் சுக்கிரனின் தொடர்பில் இருந்ததாலும், சுக்கிரன் சந்திரனின் நட்சத்திரத்தில் இருந்ததாலும் பிரசன்னம் பார்க்க வந்தவர் பரணி நட்சத்திரத்தை சேர்ந்தவர் என்பது உறுதியானது. ஜாதகமில்லாதவருக்கும் நஷ்ட ஜாதகக் கணிதத்தின்மூலம் ஜனன ஜாதகத்தைக் கணிக்கலாமென்ற உண்மை பிரசன்னம் பார்க்கவந்தவரை உணர்ச்சியில் உறையவைத்தது.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

பிரசன்ன ஆரூடத்தில், ஆரூடம் கேட்பவரின் கேள்வி எதைப்பற்றியது என்ற பரிசீலனையே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. ஆரூட லக்னத்தின் கேந்திரத்தில் சூரியனும் செவ்வாயும் வலுப்பெற்றால், கேள்வி தாதுப்பொருள் பற்றியது. புதனும் சனியும் கேந்திரத்தில் வலுப்பெற்றால் கேள்வி மூலப்பொருள் தொடர்பானது.

குருவும் சுக்கிரனும் பலமாயிருந்தால் ஜீவப்பொருள் பற்றிய கேள்வி என்பதை உறுதிசெய்துகொள்ளலாம். ஆரூட லக்னாதி பதிக்கும், சந்திரனுக்குமுள்ள தொடர்பே பிரசன்ன ஆரூடத்தின் கேள்வியை நிர்ணயிக்கும் என்பதே கேரள ஜோதிடர் களின் கருத்து.

காணாமல்போன பொருள் திரும்பக் கிடைக்குமா?

கேள்வி: சென்ற மாதம் என் இரு சக்கர வாகனம் காணாமல் போய்விட்டது. அது திரும்பக் கிடைக்குமா? அதற்குப் பரிகாரம் உண்டா?

-ஜெயலட்சுமி, சேலம்.

(எண்-39; மகம்-3; நட்சத்திராதிபதி- கேது; ராசியாதிபதி- சூரியன்.) ப் சோழி லக்னம் மக நட்சத்திரத்தில் அமைந்து, அதன் அதிபதியாகிய கேது நான்கில் அமர்வது வாகனம் தொலைந்து போனதைக் குறிக்கிறது.

* சோழி லக்னாதிபதி எட்டில் மறைந்து, ஆறு, எட்டுக்குடையவன் ஆட்சி பெற்று, லக்னத்தின் பாதக ஸ்தானத்தில் இரண்டாமதிபதி இருந்தால், பொருள் தொலை தல் போன்ற தொல்லை உண்டாகும்.

* நான்காமதிபதி ஏழி-ருப்பதால் தொலைந்த வாகனம் திரும்பக் கிடைக்கும்.

* சூரியன் கார்த்திகை முதல் பாதத்தில், மேஷ ராசியில் சஞ்சாரிக்கும் காலத்தில் தொலைந்த பொருள் பழுதடைந்த நிலையில் கிடைக்கும்.

* பதினொன்றாமதிபதி ஒன்பதாம் வீட்டி-ருப்பது சாதகமானது.

* ஆறில் சனிபகவான் இருப்பதால் வாகனத்தைத் திருடிச்சென்றவர் விரைவில் பிடிபடுவார்.

பரிகாரம்

* சென்னை- தாம்பரம் அருகேயுள்ள ரத்னமங்கலத்தில் அருள்புரியும் அரைக்காசு அம்மனை வழிபட்டால் இழந்த பொருள் கிடைக்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala190822
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe