Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (80)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-80

ளமையின் இடிபாடுகளுக்கி டையே சிக்கித் தவிப்பதே முதுமையின் அனுபவம். வேகம் இருக்கும்போது விவேகம் இருப்பதில்லை. விவேகம் வந்தபின் வேகம் இருப்பதில்லை. கிருஷ்ணன் நம்பூதிரியின் சிந்தனைக் கேற்றாற்போல் ஒருவர் பிரசன்னம் பார்க்க வந்தார். பிரசன்னம் கேட்க வந்தவரின் முகத்தில், தேவைக்கதிகமான சோகம் தேங்கிக் கிடந்தது. தான் இளமையில் தவறான நட்பால், பொறுப் பற்றுப் போனதாகவும், வருந்தித் திருந்தியபோது வாய்ப்புகள் நழுவிப் போய்விட்டதாகவும் தெரிவித்தார்.

Advertisment

அவர் கொட்டியது வார்த்தைகளல்ல; வாக்குமூலம். தனக்கு, இனியாவது நல்ல வாழ்க்கை கிடைக்குமா என்பதை அறிந்துகொள்ளவே வந்திருந்தார். செங்கனூர் பகவதியைத் தொழுது பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

சோழி லக்ன

ளமையின் இடிபாடுகளுக்கி டையே சிக்கித் தவிப்பதே முதுமையின் அனுபவம். வேகம் இருக்கும்போது விவேகம் இருப்பதில்லை. விவேகம் வந்தபின் வேகம் இருப்பதில்லை. கிருஷ்ணன் நம்பூதிரியின் சிந்தனைக் கேற்றாற்போல் ஒருவர் பிரசன்னம் பார்க்க வந்தார். பிரசன்னம் கேட்க வந்தவரின் முகத்தில், தேவைக்கதிகமான சோகம் தேங்கிக் கிடந்தது. தான் இளமையில் தவறான நட்பால், பொறுப் பற்றுப் போனதாகவும், வருந்தித் திருந்தியபோது வாய்ப்புகள் நழுவிப் போய்விட்டதாகவும் தெரிவித்தார்.

Advertisment

அவர் கொட்டியது வார்த்தைகளல்ல; வாக்குமூலம். தனக்கு, இனியாவது நல்ல வாழ்க்கை கிடைக்குமா என்பதை அறிந்துகொள்ளவே வந்திருந்தார். செங்கனூர் பகவதியைத் தொழுது பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

சோழி லக்னத்திற்கு பாக்கியாதிபதி யாகிய சுக்கிரன் மறைந்திருந்தது வறுமையைக் காட்டியது. இரண்டாமிடத்தில் மாந்தி இருந்ததால், தீய பழக்கங்களுக்கு ஆளானவர் என்பதும் உறுதியானது.

மறுவாழ்வு தரும் புனர்பூசத்து நான்காம் பாதத்தில் குருவும் சந்திரனும் இணைந் திருந்ததால், பிரசன்னம் பார்க்க வந்தவ ரின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியுண் டாகும் என்ற ஆறுதல் கிடைத்தது.

விருத்தாசலத்தில் அருள்புரியும் விருத்த கிரீஸ்வரரை பௌர்ணமியில் வழி பட்டால், புதுவாழ்வு கிடைக்குமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. மயிலை யில் மறுஜென்மம் பெற்ற பூம்பாவை போல், பிரசன்னம் பார்க்க வந்தவ ரின் வாழ்க்கையில் பரிகாரம் விளக் கேற்றியது.

kj

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒரு ஜாதகத்தில் கிரகசேர்க்கைப் பலன்களைக் காண்பது மிகமிக முக்கியம். ஒரே ராசியில் இருக்கும் இரண்டு கிரகங்கள், ஒன்றோடொன்று இணைந்து செயல்படுமென்றா லும், ஒரே நட்சத்திர பாதத்திற் குள் ஏற்படும் சேர்க்கையே வலுவானது. பாகை முறையில் துல்லியமாகக் கணித்து கிரக இணைவுகளைக் காண்பதே கேரள ஜோதிடத் தின் சிறப்பு. குரு, சந்திரன், புதன் சேர்ந்து எங்கிருந்தாலும் நல்ல அழகும் ஆயுளும் செல்வமும் கிடைக்கும். சூரியனும் சுக்கிர னும் சேர நல்ல மனைவி அமைவாள். ஏழாம் பாவத்தில், சனி, ராகு, செவ்வாய் போன்ற கிரகங்கள் இணைந் தால் நல்ல திருமண வாழ்க்கை அமைவது கடினம். சுக்கிரன், சந்திரன், புதன் ஆகியோர் சேர தீய பழக்கங்கள் உண்டாகு மென்பதே கேரள ஜோதிடர் களின் கருத்து.

காணாமல் போனவர் வீடு திரும்புவாரா?

கேள்வி: நான்கு மாதங் களுக்குமுன் என் கணவர் திடீரென்று காணாமல் போய்விட்டார். அதற்கான காரணத்தை அறியமுடியுமா? அவர் வீடு திரும்புவதற்குப் பரிகாரம் உண்டா?

-திருமதி செல்வராணி, வேலூர்.

(எண்-27; புனர்பூசம்-3; நட்சத்திராதிபதி- குரு; ராசியாதிபதி- புதன்.)

● சோழி லக்னத்தில், பன்னிரண்டாம் வீட்டோனாகிய சுக்கிரன் அமர்வது, காணாமல் போனவரின் பலவீனமான மனதைக் காட்டுகிறது.

● சோழி லக்னத்திற்கு இரண்டாம் வீட்டோன் பன்னிரண்டிலிருப்பதால், சொத்துப் பிரச்சினையும், மூத்த சகோதர ரால் ஏற்பட்ட தொல்லையுமே, காணாமல் போனவர் தலைமறைவாக இருப்பதற்குக் காரணம்.

● சனிபகவான் அஷ்டமத்தில் அமர்ந்து ஆட்சிபெறுவதால், அல்லல் படவேண்டிய காலகட்டத் தைக் கடந்துகொண்டிருக்கி றார்.

● சோழி லக்னத் திற்கு பத்தாம் வீட்டில் குரு தனித்திருப்பது அவதியைத் தரும். குருபகவான் தனித்திருந் தால் முயற்சியில் தடைகள் அதிகரிக்கும்.

● செவ்வாய், ராகு கூட் டணி நெருப்பு ராசியான மேஷ ராசியில் இணைந்துள்ளது. இது காணாமல் போனவருக்கு சில ஆபத்துக்களை உருவாக்கும்.

● பதினொன்றாமிடத்து ராகுவால் மூத்த சகோதரர்களுடன் சுமுகமான உறவானது ஏற்படாது.

● ஆறாமதிபதி பதினொன்றில் இருப்ப தால், காணாமல் போனவர் வீடு திரும்புவார்.

பரிகாரம்

திங்கட்கிழமைதோறும் விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி அர்ச்சனை செய்துவந்தால் மன அமைதி கிடைக்கும். தினம் அதிகாலையில் எழுந்ததும் தெற்கு நோக்கி நின்று பாதிக்கப்பட்ட நபரின் பெயரை பதினோரு முறை சொல்லிவர விரைவில் தீர்வு கிடைக்கும். வியாழக் கிழமைகளில் அனுமனுக்கு பானகத்தை நிவேதனம் செய்து மனமுருக வழிபட்டால், காணாமல் போனவர் வீடு திரும்புவார்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala050822
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe