Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (79)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-79

நெய்தல் நிலத்துக் கடலோடிகள், காற்றை இனம்கண்டு பாய்மரத்தை மாற்றிக்கட்டித் தங்கள் பயணத்தை வேகப்படுத்துவார்கள்.

Advertisment

அதேபோல் ஒரு ஜாதகத் தின் உபஜெய ஸ்தானங்களில் சாதகமானதைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெறலாம். காற்றடிக்கும் திசையை மாற்ற முடியாததுபோல் விதியின் போக்கையும் மாற்றமுடியாது. அடிக்கும் காற்றை அதிர்ஷ்டக் காற்றாய் மாற்றுவதே ஜோதிடப் பரிகாரம். கிருஷ்ணன் நம்பூதிரியின் இந்த ஆழ்ந்த சிந்தனையைக் கலைத்தது பிரசன்னம் பார்க்க வந்தவரின் செருமல். தான் ஒரு விளையாட்டு வீரரென்றும், தனக்குத் தகுதியிருந்தும் முன்னேற முடியவில்லையென்ற பொருமலையும் வெளிக் காட்டினார். கண்ணம்புழா பகவதியம்மனைத் தொழுது பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

சோழி லக்னத்தின்

சோழி லக்னத்தின் மூன்று, ஆறு, பதினொன் றாம் வீடுகளை ஆராய்ந்தார். சோழி லக்னம் சிம்மமாக அமைந்து, ஆறாமதிபதி ஆட்சி, உச்சம் பெற்றிருப்பதால், ஜாதகர் அரிய பல சாதனைகள் செய்வார் என்பது உறுதி. ஆனாலும், "வீர கேந்திரம்' என்று குறிப்பிடப்படும் மூன்று, ஆறு, ஒன்பது, பன்னிரண்டாம் இடங்களின் ஒருங்கிணைப்பு குறைவதால், வெற்றி பின்தங்கியது. ஜாதகரின் அவநம்பிக்கையே தோல்விக்குக் காரணம் என்பது தெரிவிக்கப்பட்டது.

தைரிய ஸ்தானமாகிய மூன்றாம் வீடும், தைரியத்திற்குக் காரகனாகிய செவ்வாயும் வலுப்பெற்றால் வெற்றி நிச்சயமென்று தெரிந்தது. வெற்றிவேல் முருகனை திருசெந்தூர் சென்று தரிசித்து, சத்ரு சம்ஹார பூஜைசெய்தால் தடைகள் விலகுமென்று பரிகாரம் கூறப்பட்டது.

Advertisment

kj

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

பிரசன்ன ஆரூடத்தின் பதினாங்கு அங்கங்களில் "ஸ்வராயு' எனும் மூச்சு ஜோதிடமும் ஒன்று. சுவாசப் பரிசீலனைமூலம் பிரசன்ன ஆரூடம் பார்ப்பதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. இடகலை (இடது நாசி), பிங்கலை (வலது நாசி) ஆகியவற்றில் ஓடும் சரமானது, ஒவ்வொன்றிலும் ஐந்து நாழிகை கால அளவில் ஓடும். இதில் பிரித்வி (நிலம்) ஒன்றரை நாழிகையும், அப்பு (நீர்) ஒன்றேகால் நாழிகையும், தேயு (நெருப்பு) ஒரு நாழிகையும், வாயு (காற்று) முக்கால் நாழிகையும், வான் (ஆகாயம்) அரை நாழிகையும் அமையும். சர கர்த்தாவின் (ஜோதிடர்) சரம் ஓடும் பக்கம் பூரணம் என்றும், சரம் ஓடாத பக்கம் சூன்யம் என்றும் அறியப்படும். பிரசன்னம் பார்க்கவந்தவர் பூரணத்தில் நிற்க, எண்ணிய எண்ணம் ஈடேறும். சூன்யத்தில் நிற்க நடவாமல் போகுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

நடுக்குவாத நோய் தீருமா?

கேள்வி: நான் சில மாதங்களாக நடுக்குவாத நோயால்(Parkinson's disease) அவதிப்படுகிறேன். மருத்துவ சிகிச்சைகளால் பலனில்லை. என் நோய் தீருமா? அதற்குப் பரிகாரம் உண்டா?

-செந்தில்நாதன், சென்னை.

(எண்-40; மகம்-4; நட்சத்திராதிபதி- கேது; ராசியாதிபதி- சூரியன்.)

● சோழி லக்னத்தின் அறுபத்து நான்காவது நவாம்சத்தில் லக்னாதி பதியாகிய சூரியன் அமைவது நோயின் கடுமையைக் காட்டுகிறது.

● புதன் மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றுக்கு ஆதிபத்தியம் வகிக்கிறார். புதன் பலவீனமாக எட்டாமிடத்தி-ருப்பதால் உடல்ரீதியாக சில கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.

● புதன் நீசமாகவும், ஆறாமதிபதி யாகிய சனிபகவானின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் நரம்புத் தளர்ச்சி, நடுக்குவாதம் போன்ற உடல் உபாதைகள் உண்டானது தெளிவாகிறது. நோயைக் கட்டுப்படுத்த முடியுமே அல்லாமல் குணமாக்குவது கடினம்.

● சோழி லக்னத் திற்கு ஆறாம் வீட்டில் கிரக யுத்தம் உள்ளது, நோயால் ஏற்பட்ட மன சங்கடத்தைக் காட்டுகிறது.

● குருபகவானின் பார்வை சோழி லக்னத்தில் பதிவதால், பரிகாரத்தால் ஓரளவு பலனுண்டாகும்.

பரிகாரம்

நவரத்தினங்களில் புதனுக்கு உகந்த பச்சைக்கல் மோதிரம் அணிவது நோயைக் கட்டுப்படுத்தும். புதன்கிழமை களில் பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபடுவது நல்ல பரிகாரமாகும். திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்குச் சென்று வணங்க லாம். மதுரை சென்று மீனாட்சி, சோமசுந்தரேஸ்வரரையும் வழிபட்டு வந்தால் நரம்புக் கோளாறுகள் குறையும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala290722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe