Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (78)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-78

"பகல்வெல்லும் கூகையைக் காக்கை' என்று தொடங்கும் திருக்குறளில் பொதிந் திருக்கும் "பஞ்ச பட்சி' சாஸ்திரத்தின் சூட்சுமத்தைக்கண்டு வியந்தார் கிருஷ்ணன் நம்பூதிரி. "பறவை அறிந்தவரைப் பகைத் துக் கொள்ளாதே' என்னும் பழமொழி யும் நினைவுக்கு வந்தது. காலமறிதலின் முக்கியத்துவம் புரிந்தது. யுத்த பிரசன் னத்தில் கிரகங்களின் கால பலத்தையும் கணக்கிடவேண்டிய தன் அவசியத்தை உணர்ந்தார். கடலில் தரைதட்டிய ஓடம் போல் கலையிழந்து, கவலையுடன் பிரசன் னம் பார்க்க வந்தார் ஒரு இளைஞர். தான் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் தொழி லில் வெற்றிபெறமுடியவில்லை என்னும் வருத்ததைத் தெரிவித்தார். உப்பு விற்கப் போனால் மழை வருகிறது. பஞ்சு விற்கப் போனால், காற்றடிக்கிறது என்பதே அவரின் ஆதங்கம். நெட்டூரி பகவதி அம்மனைத் தொழுது

"பகல்வெல்லும் கூகையைக் காக்கை' என்று தொடங்கும் திருக்குறளில் பொதிந் திருக்கும் "பஞ்ச பட்சி' சாஸ்திரத்தின் சூட்சுமத்தைக்கண்டு வியந்தார் கிருஷ்ணன் நம்பூதிரி. "பறவை அறிந்தவரைப் பகைத் துக் கொள்ளாதே' என்னும் பழமொழி யும் நினைவுக்கு வந்தது. காலமறிதலின் முக்கியத்துவம் புரிந்தது. யுத்த பிரசன் னத்தில் கிரகங்களின் கால பலத்தையும் கணக்கிடவேண்டிய தன் அவசியத்தை உணர்ந்தார். கடலில் தரைதட்டிய ஓடம் போல் கலையிழந்து, கவலையுடன் பிரசன் னம் பார்க்க வந்தார் ஒரு இளைஞர். தான் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் தொழி லில் வெற்றிபெறமுடியவில்லை என்னும் வருத்ததைத் தெரிவித்தார். உப்பு விற்கப் போனால் மழை வருகிறது. பஞ்சு விற்கப் போனால், காற்றடிக்கிறது என்பதே அவரின் ஆதங்கம். நெட்டூரி பகவதி அம்மனைத் தொழுது பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

சோழி லக்னத்தின் ஆறாம் பாவத்தையும், பத்தாம் பாவத் தையும் ஆராய்ந்தார். வெற்றியைச் சுட்டிக்காட்டும் மூன்றாம் பாவத் தின் தொடர்பு வலுப்பெற்றாலும், சனி பகவானின் பார்வையால் பாதகமடைந்தது. சோழி லக்னம் அமைந்த உத்திர நட்சத்திரத் தின் பட்சியாகிய காகம், அமர பட்சத்து பகல், ஞாயிறு, ஐந்தாம் ஜாமத்தில் உறக்கத்திலிருந்தது. கோட்சாரத்தில் சனிபகவான் வக்ர கதியில் சஞ்சரிக்கும்போது நிலைமை சீராகும் என்னும் பலன் கிடைத்தது. உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் செய்தால் தோஷம் விலகுமென்ற பரிகாரமும் சொல்லப்பட்டது. எதிர்பார்த்ததுபோல் பிரசன்னம் பார்க்க வந்தவர் தொழிலில் வெற்றியடைந்தார்.

ff

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

காலக்கணிதத்தில் மிக முக்கியமானது ஹோரைகள். ஹோரை என்பது ஒவ்வொரு கிரகத்துக்கு முரிய ஒரு மணி நேரமாகும். நவகிரகங்களில் ராகு- கேது நீங்கலாக மீதம் இருக்கக்கூடிய ஏழு கிரகங்களும் தினமும் தங்களுடைய ஆதிக்கத்தைச் செலுத்தும் காலமே அந்தந்த கிரகத்தின் ஹோரையாக அறியப்படுகிறது. கால ஹோரைக் கணிதத்தையும் பிரசன்ன ஆரூடத்தில் பொருத்திப் பார்ப்பதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. பொதுவாக புதன்- குரு- சுக்கிரன்- சந்திரன் (வளர்பிறை) ஆகிய ஹோரைகளில் நல்ல காரியங்கள் தொடங்கலாம். அரசு சம்பந்தப்பட்ட காரியங் கள், வழக்கு தொடர்பான விஷயங்களுக்கு சூரிய ஹோரையில் பிரசன்னம் பார்க்கப் பட்டால், அந்த பிரசன்னம் நல்ல முடிவைத் தரும். ஆனால் சூரிய ஹோரையில் நோய், ஆயுள் பற்றிய பிரசன்னம் அமைந்தால், மிருத்யு தோஷமுண்டு என்பதையறியலாம். பிரசன்னம் பார்க்கப்படும் ஹோரையைக் கொண்டும் பலன் அறியலா மென்பதே கேரள ஜோதிடர் களின் கருத்து.

தோல் நோய் குணமாகுமா?

கேள்வி: நான் இரண் டாண்டுகளாக தோல் நோயால் அவதிப்படுகிறேன். மருத்துவ சிகிச்சைகளால் பலனில்லை. என் நோய் தீருமா? அதற்குப் பரிகாரம் உண்டா?

-ஸ்ரீதரன், சென்னை.

(எண்-9; கிருத்திகை-1; நட்சத்திராதிபதி- சூரியன்; ராசியாதிபதி- செவ்வாய்.)

● சோழி லக்னத்தில் சூரியனுடன் புதனும் ராகுவும் இணைந்திருப்பது, தோல் நோயைக் குறிக்கிறது. புதனும் ராகுவும் ஒரே நவாம்சத்தில் சேர்ந்திருப்பது தோல் நோயின் கடுமையைக் காட்டுகிறது.

Advertisment

dd

● சோழி லக்னத்தில் புதனும் ராகுவும் சேர்ந்ததால் நோயால் முகம் பாதிக்கப் பட்டிருக்கும். பிரசன்ன லக்னத்திற்கு எட்டா மிடமாகவும் அமைந்ததால், மருத்துவர்களால் தீர்க்கமுடியாத நோயாகவே இருக்கும்.

● பாதக ஸ்தானமாகிய கும்பத்தில் சுக்கிரனும் செவ்வாயும் இணைவது, முக அழகைக் கெடுப்பதாக உள்ளது.

● கர்மவினையால் வந்த சர்ப்பதோஷமே இந்த நோய்க்குக் காரணமானது.

● சோழி லக்னத்திற்கு பத்தாம் வீட்டில் சனி, சந்திரன் சேர்க்கை, முன்ஜென்ம வினைப்பயனால் ஏற்பட்ட மன சங்கடத்தைக் காட்டுகிறது.

● ஒன்பதாமதிபதியாகிய குரு, பன்னிரண்டாம் வீட்டி லிருப்பது தேவகோப லட்சணமானது.

பரிகாரம்

பறவைகளுக்கு தானியங்களைக் கொடுப்ப தால் நோய் தீரும். கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், ஆலத்தியூர் அருகிலுள்ள திரிப்பிரங்கோடில் அமைந்திருக்கும் கருடன் கோவிலில் பரிகாரபூஜை செய்தால் தோல் நோய் நீங்கும். வைத்தீஸ்வரன் கோவிலில் முத்துக்குமார ஸ்வாமியை வழிபட்டால், முன்ஜென்ம பாவம் நீங்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala220722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe