Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (76)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-76

கோழி கூவியதால் பொழுது விடிய வில்லை; தாமரை மலர்வதால் சூரியன் உதிப்பதில்லை. விதி போகும் வழியே மதி போகும். மனித முயற்சிகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருமேயல்லாது, மாற்றங் களை உருவாக்காது. ஜனன ஜாதகத்தின் கொடுப்பினையே பலன்களை நிர்ணயம் செய்யும். இந்த ஜோதிடத்தின் அடிப்படையை ஆராய்ந்துகொண்டிருந்தார் கிருஷ்ணன் நம்பூதிரி. கவலையால் கலைந்த முகத்துடன் பிரசன்னம் பார்க்க வந்தார் ஒரு நடுத்தர வயதுக்காரர். தன் மகளுக்குத் திருமணத் தடையுள்ளதாகவும், நிச்சயதார்த்தத்துடன் நின்றுவிடுவதாகவும் தெரிவித்தார். தோஷம் நீங்குவதற்கு பரிகாரத்தையறியவே பிரசன்னம் பார்க்கவந்ததாகத் தெரிவித்தார். தொட்டிப்பால் பகவதியம்மனைத் தொழுது பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன

கோழி கூவியதால் பொழுது விடிய வில்லை; தாமரை மலர்வதால் சூரியன் உதிப்பதில்லை. விதி போகும் வழியே மதி போகும். மனித முயற்சிகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருமேயல்லாது, மாற்றங் களை உருவாக்காது. ஜனன ஜாதகத்தின் கொடுப்பினையே பலன்களை நிர்ணயம் செய்யும். இந்த ஜோதிடத்தின் அடிப்படையை ஆராய்ந்துகொண்டிருந்தார் கிருஷ்ணன் நம்பூதிரி. கவலையால் கலைந்த முகத்துடன் பிரசன்னம் பார்க்க வந்தார் ஒரு நடுத்தர வயதுக்காரர். தன் மகளுக்குத் திருமணத் தடையுள்ளதாகவும், நிச்சயதார்த்தத்துடன் நின்றுவிடுவதாகவும் தெரிவித்தார். தோஷம் நீங்குவதற்கு பரிகாரத்தையறியவே பிரசன்னம் பார்க்கவந்ததாகத் தெரிவித்தார். தொட்டிப்பால் பகவதியம்மனைத் தொழுது பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

பிரசன்ன லக்னத்தில் சுக்கிரன் இருந்து, ஏழாம் வீட்டில் சனி இருப்பதால் திருமணம் தாமதமாகிறது. புனர்பூ தோஷமும் காட்டப்படுவதால், திருமணத்தடை உறுதியாகிறது. குருவின் கோட்சார நிலையைக்கொண்டு பார்க்கும்போது, இன்னும் ஓராண்டு கழித்துத் தடை நீங்குமென்பது தெளிவானது. தசாபுக்தியும் கோட்சாரமும் சாதகமாக அமைந்தால்தான் எந்த நிகழுவும் நடந்தேறும். காலத்தால் மட்டுமே கனியும் கனிந்துவருமென்று அறிவுறுத்தப்பட்டது. பொறுமையே சிறந்த பரிகாரமென்பதை உணர்ந்து, பலன் பெற்றார் பிரசன்னம் பார்க்க வந்தவர்.

Advertisment

aa

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

பஞ்சபூதங்களுக்கும், கிரக, பாவ காரகங் களுக்கும் உள்ள தொடர்பைக் கொண்டு மருத்துவ ஜோதி டத்தை ஆராய்வதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. வாயுவில் சப்தத்தோடு ஸ்பரிசமும் இருக்கிறது. நெருப்புக்கு ஸ்பரிசத் தோடு ரூபமும் இருக்கிறது. நீருக்கு ஸ்பரிசம், ரூபம், ரசம் (சுவை) என்பதும் உள்ளது. மண்ணுக்கு கூடுதலாக மணமும் உள்ளது. ஆகாயத்தில் அனைத்தும் அடங்கும். இதில், உடல்- நிலம், உயிர்- ஆகாயம், தசவாயுக்கள்- காற்று, ரத்தம்- நீர், ரத்ததிலுள்ள வெப்பம்- நெருப்பு. வாதம், பித்தம், சிலேஷ்மம் எனும் திரிதோஷங்களின் மாறுபாடும், பஞ்சபூதங்களின் இயக்கமுமே ஒரு ஜாதகரின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்குமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

மூதாதையர் சொத்து கிடைக்குமா?

கேள்வி: எங்கள் குடும்பத்திற்குச் சேர வேண்டிய மூதாதையர் சொத்தில் சில பிரச்சினைகளால் வில்லங்கம் ஏற்பட்டுள் ளது. நீதிமன்ற நிலுவையிலுள்ள வழக்கில் வெற்றிகிடைக்குமா? அதற்குப் பரிகாரம் உண்டா?

-ராதாகிருஷ்ணன், திருவள்ளூர்.

(எண்-7; பரணி-3; நட்சத்திராதிபதி- சுக்கிரன்; ராசியாதிபதி- செவ்வாய்.)

* சோழி லக்னத்தின் அதிபதியாகிய செவ்வாயின் பார்வை நான்காமிடத்தில் விழுவதால் அனுகூலமான பலனே காணப்படுகிறது.

* பூமி காரகனாகிய செவ்வாய் ஆட்சிபலம் பெற்று லக்னத்திலிருப்பதால், எல்லா தடைகளையும் சமாளிக்கமுடியும்.

* லக்னம் விழுந்த நட்சத்திராதிபதியாகிய சுக்கிரனும் ஆட்சி வீட்டிலிருப்பதால் சாதகமான பலன் உண்டாகும்.

* ஒன்பது மற்றும் பன்னிரண்டாம் அதிபதியாகிய குருபகவானின் ஐந்தாம் பார்வையும் லக்னத் திற்கு நான்கில் விழுவதால், மூதாதையர் சொத்து கிடைக் கும் வாய்ப்பு அதிகம்.

* லக்னம் அமையும் பரணி மூன்றாம் பாதம் நவாம்சத்தில் துலா ராசியில் அமைவதால், நீதிமன்றத்திலிருக்கும் வழக்கின் தீர்ப்பில் காலதாமதம் உண்டாகும்.

* ஏழில் கேது இருப்பதால் உறவினருடன் பிரச்சினையும் பிரிவும் உண்டாகும்..

* குருபகவான் மேஷ ராசியில் சஞ்சரிக் கும் காலத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பரிகாரம்

சனிக்கிழமைகளில் நவகிரக சந்நிதியில், சனிபகவானுக்கு கருப்பு எள்கலந்த விளக் கெண்ணெய் தீபத்தையேற்றி, சனி பகவானுக்குரிய மந்திரங்களை கூறி வழி பட்டுவரவேண்டும் ஆஞ்சனேயர் கோவிலுக் குச் சென்று இரண்டு நெய்தீபங்கள் ஏற்றி, ஆஞ்சனேயரைப் போற்றும் "அனுமன் சாலீஸா'வைப் படித்துவந்தால் அனுகூல மான பலன் கிடைக்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala080722
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe