Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (139)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-139

ற்றங்கரையில் வளரும் மரம், ஆற்று நீரால் செழுமையாக வளரும்.

அதே ஆற்றின் மண் அரிப் பால், வேரறுந்து வீழும். விளக்கிற்கு ஒளி தரும் நெருப்பு, வீட்டையும் எரிக் கும். சிலருக்கு யோகா திபதியே, பாதகாதிபதியாகவும் மாறு வாரென்பதே உண்மை.

Advertisment

பிரசன்னம் பார்க்க வந்தவரின் முகத்தில் பிரகாசம் குறைந்திருந்தது. தான் அரசாங்க கட்டுமானப் பணிகளில் ஒப்பந்ததாரராக தொழில் செய்ததாகத் தெரிவித்தார். எதிர்பாராத அரசாங்க மாற்றத்தால், கோடீஸ்வரராக இருந்த வர், இப்போது தெருக் கோடிக்கு வந்து விட்டதாகக் கூறி வருந்தினார்.

Advertisment

தன்னுடைய தொழில் மறுபடியும் வள மாகுமா? அதற்குப் பரிகாரம் உண்டா என்பதே, அவர் கேள்வி. நெல்லிக்காட்டு பகவதியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கினார், கிருஷ்ணன்

ற்றங்கரையில் வளரும் மரம், ஆற்று நீரால் செழுமையாக வளரும்.

அதே ஆற்றின் மண் அரிப் பால், வேரறுந்து வீழும். விளக்கிற்கு ஒளி தரும் நெருப்பு, வீட்டையும் எரிக் கும். சிலருக்கு யோகா திபதியே, பாதகாதிபதியாகவும் மாறு வாரென்பதே உண்மை.

Advertisment

பிரசன்னம் பார்க்க வந்தவரின் முகத்தில் பிரகாசம் குறைந்திருந்தது. தான் அரசாங்க கட்டுமானப் பணிகளில் ஒப்பந்ததாரராக தொழில் செய்ததாகத் தெரிவித்தார். எதிர்பாராத அரசாங்க மாற்றத்தால், கோடீஸ்வரராக இருந்த வர், இப்போது தெருக் கோடிக்கு வந்து விட்டதாகக் கூறி வருந்தினார்.

Advertisment

தன்னுடைய தொழில் மறுபடியும் வள மாகுமா? அதற்குப் பரிகாரம் உண்டா என்பதே, அவர் கேள்வி. நெல்லிக்காட்டு பகவதியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கினார், கிருஷ்ணன் நம்பூதிரி.

சோழி லக்னம், மிருகசீரிடம் முதல் பாதத் தில் ரிஷப ராசியில் அமைந்தது. ஒன்பதா மிடத்தில் சனியும், செவ்வாயும் அமர்ந்திருந் தன. ரிஷப ராசிக்கு, சனிபகவான் பாக்கியாதி பதியானாலும், பாதகாதிபதியாகவும் செயல்படுவார். தர்ம கர்மாதிபதி யோகத்தால், சனிபகவான் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினாலும், சில பாதகங்களையும் தருவார். குச்சனூர் சனி பகவான் கோவிலுக்குச் சென்று பரிகார பூஜைகள் செய்தால், வாழ்க்கை வளமாகும் என்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரத்தால், தொழிலில் ஏற்பட்ட தடை விலகியது.

kk

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

கேரளலி ஜோதிடத்தில், மருத்துவ நாடியடிப்படையில் நட்சத்திரங்கள் பிரிக்கபடு கின்றன. வாதநாடி, பித்தநாடி,

சிலேத்துமநாடி ஆகிய மூன்று நாடி ப்பிரிவுகளில், இருப் பதியேழு நட்சத்திரங்களும் அடங்கும். பொதுவாக, இந்த நாடிகளின் பொருத்தம், திருமணப் பொருத் தத்தில் மட்டுமே பார்க்கப்படுகிறது. மருத்துவ ஜோதிடத்திலும் இதன்பயன் அதிகம் உள்ளது. மூன்று நாடிகளின் சமநிலை மாறுபாடே நோய்க்குறியை உண்டாக்கும்.

வாத நாடி

அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தி ரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட் டாதி.

பித்த நாடி

பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்ரட்டாதி.

சிலேத்தும நாடி

கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி.

நவகிரகங்களுக்கும், திரிதோஷங்கள் உண்டு.

வாத நாடி- குரு, புதன், சனி, ராகு.

பித்த நாடி- சூரியன், செவ்வாய், கேது.

சிலேத்தும நாடி- சந்திரன், சுக்கிரன். ஒரு ஜாதகத்தில் ஆறாம் பாவத்துடன் தொடர்பிலிருக்கும் நட்சத்திரமும், கிரகங்களும், நோய்க்குறியைக் காட்டும். தசாபுக்தி, கோட்சார மாற்றங்களால் ஆரோக் கிய ஸ்தானமாகிய ஐந்தாம் பாவம் முக்குண தோஷங்களால் பாதிக்கபடும்போது, நோய் உண்டாகிறது என்பதே, கேரள ஜோதிடர் களின் கருத்து. .

கண்நோய் நீங்குமா?

கேள்வி: நான் ஐந்து வருடங்களாக கண் நோயால் அவதிப்படு கிறேன். பார்வையை இழந்து விட்டேன். இதுவரை எடுத்துக்கொண்ட மருத்துவ சிகிச்சையும் பலனளிக்கவில்லை. என் கண் பார்வையை மீண்டும் பெறுவதற்குப் பரிகாரம் உண்டா?

(எண்- 19; மிருகசீரிடம்- 2; ராசியாதிபதி- புதன்; நட்சத்திராதிபதி- செவ்வாய்)

* பிரசன்ன லக்னத்திற்கு, இரண்டா மிடத்தில், பிரசன்ன கால லக்னம் அமைந்து, கண் நோய் தொடர்பான பிரச் சினையைக் காட்டுகிறது.

* இரண்டாமிடத்தில் நீச செவ்வாய் அமர்வது, கண் நோயின் தீவிரத்தை உறுதி செய்கிறது.

* பன்னிரண்டாமிடத்தில், கண்ணுக்குக் காரகர்களாகிய சூரியனும், சந்திரனும் கூடியிருப்பது, கண் பார்வை இழப்பைக் குறிக்கிறது.

* இரண்டாமிடமாகிய கடகத்திற்கு பாதக ஸ்தானமாகிய ரிஷபத்தில், சூரிய சந்திரர் இருப்பதால், சிகிச்சை பலனளிக்க வில்லை.

* நேத்திர ஸ்தானங்களாகிய, இரண் டாமிடமும், பன்னிரண்டாமிடமும் பாதிக்கப்பட்டுள்ளதால், பரிகாரத்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.

பரிகாரம்

சமயபுரம் சென்று,மாரியம்மனுக்கு "கண் மலர்' நேர்த்திக் கடன் செய்தால் கண்ணில் வந்த பாதிப்பு நீங்கும். ஸ்ரீ காளஹஸ்தி- பக்த கண்ணப்பர் கோவிலுக்குச் சென்று வழிபட்டால்,இழந்த கண் பார்வையைப் பெறலாம்.

தொடரும்)

செல்: 63819 58636

bala150923
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe