Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (135)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-135

கோடைகாலத்து மழையை நம்பி, விதைத்த வன், விதை நெல் வீணாவது போல் கனியும்வரை காத்திருக்காமல் துவர்க்கும் காயை உண்டவன் வருந்துவதுபோல் காலம் கனியும்வரை காத்திருக்காதவன் செய்யும் முயற்சி, விழலுக்கு இரைத்த நீர்போல் வீணாகும். பொறுமையே சிறந்த பிரார்த்தனை என்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து. அவசர அவசரமாக பிரசன்னம் பார்க்க வந்தவரின் உடல்மொழியே அவருடைய பொறுமையில் வெறுமையைக் காட்டியது. தான் பங்குசந்தை தொடர்புடைய தொழிலில் இருப்பதாகவும் தன் முடிவுகள் தவறாவதால் பெருத்த நஷ்டமடைவதாகவும் கூறி வருந்தினார். பிரசன்னத்தின்மூலம், அதன்காரணத்தையும் அதற்கான பரிகாரத்தையும் அறிய விரும்பினார். சூரக்கோடு பகவதியை வணங்கி பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்ன

கோடைகாலத்து மழையை நம்பி, விதைத்த வன், விதை நெல் வீணாவது போல் கனியும்வரை காத்திருக்காமல் துவர்க்கும் காயை உண்டவன் வருந்துவதுபோல் காலம் கனியும்வரை காத்திருக்காதவன் செய்யும் முயற்சி, விழலுக்கு இரைத்த நீர்போல் வீணாகும். பொறுமையே சிறந்த பிரார்த்தனை என்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து. அவசர அவசரமாக பிரசன்னம் பார்க்க வந்தவரின் உடல்மொழியே அவருடைய பொறுமையில் வெறுமையைக் காட்டியது. தான் பங்குசந்தை தொடர்புடைய தொழிலில் இருப்பதாகவும் தன் முடிவுகள் தவறாவதால் பெருத்த நஷ்டமடைவதாகவும் கூறி வருந்தினார். பிரசன்னத்தின்மூலம், அதன்காரணத்தையும் அதற்கான பரிகாரத்தையும் அறிய விரும்பினார். சூரக்கோடு பகவதியை வணங்கி பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னம், சிம்ம ராசி, மக நட்சத்திரத்திலமைந்தது. பத்தாமிடமாகிய ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சிபெற்று, பிரசன்னம் பார்க்க வந்தவரின் பங்குச்சந்தை தொடர்பை உறுதிசெய்தது. பன்னிரண்டில் சனிபகவானும், சந்திரனும் அமர்ந்து புனர் பூதோஷத்தை உருவாக்கி மன நிம்மதியை கெடுத்து பதற்றத்தைக் கூட்டியது.கொடுத்துக் கெடுக் கும் ராகுவும் கெடுத்துக் கொடுக்கும் கேதுவும் சாதகமாக இல்லை. திருகாளஹஸ்தி சென்று பரிகார பூஜை செய்தபின் சிவனுக்கு தாரா பாத்திரத்தை உபய கைங்கரியமாக செய்தால், மனநிம்மதியும், வெற்றியும் கிடைக்கு மென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரம் பலளித்தது. பங்கு சந்தை எனும் பரமபத விளையாட்டில், பாம்பினால் இறங்கியவர், ஏணியில் ஏறினார்.

Advertisment

ss

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒரு பாவம் மற்ற பாவத்தோடு கொள்ளும் தொடர்பைக்கொண்டு பலன் கணிக்கும் முறை பாவத்தில் பாவமாகும். இதில் கிரக காரகம் பாவகாரகம் ஆகிய இரண்டையும் இணைத்து பலன் காண்பதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. கேள்விக் குரிய பாவத்தையே லக்னமாகக்கொண்டு மற்ற பாவங்களை ஆராய்வது பாவகாரக முறையாகும். கேள்விக்குரிய பாவாதிபதியும் காரகனும் அமருமிடத்தையே லக்னமாகக் கொண்டு மற்ற பாவங்களை ஆராய்வது கிரக காரக முறையாகும். உதாரணத்திற்கு குழந்தை பாக்கியம் பற்றி அறிய லக்னத்திற்கு ஐந்தாம் பாவத்தை ஆராயவேண்டும். ஐந்தாம் வீட்டிற்கு ஐந்தாமிடமான ஒன்பதாமிடத்தை யும் சேர்த்து ஆராயவேண்டும். ஐந்தாமிடம் இடம் குழந்தை ஒன்பதாமிடம் பாக்கிய ஸ்தானம். குழந்தைகளின் கல்வி பற்றி அறிய புதனுக்கும் ஐந்தாமிடத்திற்குமுள்ள தொடர்பை ஆராயவேண்டும்.

ஒருவருக்கு நோய் மற்றும் கடன் தீருமா? என்ற கேள்விக்கு ஆறாமிடத்திற்கு ஆறாமிடமாகிய பதினோராமிடத்தின் வலிமையை அறியவேண்டும். தசா நாதன், புக்திநாதன் அந்தரநாதன் இருப்பிடத்தை லக்னமாகக்கொண்டு ஆராய்ந்தால் தசாபுக்தி அந்தர பலன்களை அறியலாமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

கணவர் உயிர் பிழைப்பாரா?

கேள்வி- என் கணவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவர் உயிர் பிழைப்பாரா? பரிகாரம் உண்டா? (எண்- 14; ரோகிணி- 2; ராசியாதிபதி- சுக்கிரன்; நட்சத்திராதிபதி- சந்திரன்.)

* சோழி லக்னத்தின் அதிபதி ரோக ஸ்தானமாகிய ஆறாமிடத்தில் ஆட்சி பெறுவதால் நோயின் கடுமையை உணரமுடிகிறது.

* பிரசன்ன கால லக்னத்திற்கு ஆறில் செவ்வாய் அமர்வதும் ஆரோக்கிய குறைபாட்டை குறிக்கிறது.

* சுகஸ்தானாதிபதியும் இதய காரகனாகிய சூரியன் ஆறாமிடத்தில் நீசம் பெறுவதால் இதய நோயால் ஏற்பட்ட வேதனையைத் தெளிவாக்குகிறது.

* ஆறாமிடத்தில் கேதுவும் பன்னிரண்டில் ராகுவும் இருப்பதால் இழுபறி நிலையே நீடிக்கிறது.

* சோழி லக்னத்திற்கு பாதகத்தில் பிரசன்ன லக்னம் அமைவதால் மருத்துவ சிகிச்சையால் சில பின்விளைவுகள் உண்டாகும்.

* பதினோராமிடத்தில் குரு ஆட்சியில் இருப்பதால் ஆயுளுக்கு ஆபத்தில்லை.

* ஏழாமதிபதி இரண்டாமிடத்திலிருப்பதால், போராட்டத்திற்கு பின், நோய் நீங்கும்.

* பரிகாரத்தால் ஆபத்து நீங்கும்.

பரிகாரம்

* திருமங்கலங்குடியில் அருள்பாலிக்கும் பிராண நாதேஸ்வரரை வழிபட்டால் மாங்கல்ய தோஷம் நீங்கிகணவர் நீண்ட ஆயுள் பெறுவார்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala180823
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe