Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (132)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-132

பிறப்பில், கொண்டுவர முடியாததும் இறப்பில் கொண்டு செல்ல முடியாததுமான செல்வம், இன்ப, துன்பங்களுக்கு காரண மாகாது. செல்வந்தன், கொள்ளை யர்களை எண்ணி அச்சமுறுகிறான்.

Advertisment

ஏழையோ நாளை வரப் போகும் பசியை நினைத்து கவலை கொள்கிறான். அச்சமும் அதனால் வரும் கவலையுமே தோல்வியையும் துன்பத்தையும் தரும். சோர்ந்த முகமும், சோபையிழந்த கண்களு மாக, ஒரு இளைஞர் பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். தான் முயற்சி யால் பெரும் பொருள் ஈட்டியும் மனதில் மகிழ்ச்சி ஏற்பட வில்லை.

Advertisment

மாறாக அச்சமே குடிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அதன் காரணத்தையறியவே பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். ஆழியூர் பகவதியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கினார். கிருஷ்ணன் நம்பூதிரி

பிறப்பில், கொண்டுவர முடியாததும் இறப்பில் கொண்டு செல்ல முடியாததுமான செல்வம், இன்ப, துன்பங்களுக்கு காரண மாகாது. செல்வந்தன், கொள்ளை யர்களை எண்ணி அச்சமுறுகிறான்.

Advertisment

ஏழையோ நாளை வரப் போகும் பசியை நினைத்து கவலை கொள்கிறான். அச்சமும் அதனால் வரும் கவலையுமே தோல்வியையும் துன்பத்தையும் தரும். சோர்ந்த முகமும், சோபையிழந்த கண்களு மாக, ஒரு இளைஞர் பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். தான் முயற்சி யால் பெரும் பொருள் ஈட்டியும் மனதில் மகிழ்ச்சி ஏற்பட வில்லை.

Advertisment

மாறாக அச்சமே குடிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அதன் காரணத்தையறியவே பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். ஆழியூர் பகவதியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கினார். கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னத்தில், சூரியன், ராகுவின் பிடியிலும், ஏழாமிடத்தில் சந்திரன், கேதுவின் தொடர்பிலும் சிக்கியிருந்தது. மூன்றாமிடம் வலுவிழந்து, செவ்வாயும் பாதகத்திலிருந்ததால், தைரியம் குறைந் ததை அறியமுடிந்தது. தன ஸ்தானங்கள் வலுப்பெற்றாலும் மகிழ்ச்சியைக் குறிக்கும், காமத்திரிகோணமாகிய, மூன்று, ஏழு, பதினோராமிடங்கள் வலுவிழந்ததால் தடுமாற்றமும், கவலையும் சூழ்ந்தன. தைரிய லட்சுமியின் கருணையைப் பெறாதவரை வாழ்வில் மகிழ்ச்சி பெருகாது என்ற உண்மை எடுத்துரைக்கப்பட்டது. சோளிங்க ருக்கு சென்று, லட்சுமி நரசிம்மரை வெள்ளிக் கிழமைகளில் வழிபட்டால், அச்சமும் கவலையும் தீருமென்ற பரிகாரம் சொல்லப் பட்டது. பரிகாரம் செய்ததால், பிரசன்னம் பார்க்க வந்தவரின் வாழ்வில், வசந்தம் அடியெடுத்து வைத்தது.

d

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

கிரகங்களின் வலிமையையும் குண, தோஷங்களையும் ஆராய்ந்து அஸ்தமனம், வக்ரம், அதிசாரம் போன்ற கதிகளையும் கணக்கிட்டுப் பலன் சொல்வதே, கேரள ஜோதிடத்தின் சிறப்பு. ஒரு ஜாதகத்தில் வக்ரகதியில் அமையும் கிரகம் தான் தர வேண்டிய பலனுக்கு எதிர்மறையான பலன் களையே தரும். வக்ரகதியில் இயங்கும் சுப கிரகங்கள் அசுப பலன்களையும் அசுப கிரகங் கள் சுப பலன்களையும் தரும். உதாரணத்திற்கு புத்திரகாரகனாகிய குரு வக்ரகதியிலிருந்தால் புத்திர பாக்கியத்தைக் கெடுக்கும். குருவின் வீட்டின் பாதக ஸ்தானாதிபதியாகிய புதன் வக்ரகதியிலிருந் தால் புத்திர பாக்கியத்தைக் கொடுக்கும். லக்னத்திற்கு, இரண்டாமிடத்தில் ஆட்சி பெற்ற வக்ர குரு இருந்தால், தனலாபம் தராமல், மாரகத்திற்கு ஒப்பான கண்டத்தைத் தருவார். கோட்சாரத்திலும், ஒரு கிரகம், நேர்கதியில் சஞ்சரிக்கும்போது தரும் பலனை, வக்ரகதி சஞ்சாரத்தில் எதிர் மறையாகவே தருமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

குழந்தை பாக்கியம் உண்டா?

கேள்வி: எனக்கு திருமணமாகி ஐந்தாண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும், குழந்தை பாக்கியம் கிடைக்க வில்லை. என் மனைவிக்கு இருமுறை கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது. குழந்தைப் பேறு பெறுவதற்கு பரிகாரம் உண்டா?

(எண்- 73; மூலம்- 1; ராசியாதிபதி- குரு; நட்சத்திராதிபதி- கேது.)

* சோழி லக்னத்தின் ஒன்பதாமதிபதியாகிய சூரியன், பாதகஸ்தானத்திலிருக்கிறது.

* புத்திர ஸ்தானாதிபதியா கிய செவ்வாய் நீசத்திலுள்ளதால், புத்திர பாக்கியத்தில் தடையுள் ளதை அறியமுடிகிறது. ஐந்தாமதிபதி. எட்டிலிருப்பதும் புத்திர பாக்கியத் திலுள்ள குறையைக் காட்டு கிறது.

* எட்டாமதிபதி ஆறிலிருப்பதால் ஆரோக்கிய குறைபாடே புத்திர பாக்கிய தடைக் குக் காரணமாகிறது.

* சனிபகவானின் பார்வை, ஐந்தாமிடத்தில் விழுவதும், சந்தான பாக்கியத்தில் தடையைக் காட்டுகிறது.

* புத்திர காரகனாக்கிய குருவும் ராகுவும் இணைந்து ஐந்திலிருப்பதால் செயற்கை கருத்தரிப்பு முறையின்மூலம் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு. ஐந்தாமிடம், ராகுவின் பாதிப்பிலிருப்பதால், பரிகாரத்தால் மட்டுமே பலன் உண்டாகும்.

பரிகாரம்

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள, திருக்கருகாவூர், கர்ப்ப ரட்சகாம்பிகையை வழிபட்டால், புத்திர தோஷம் தீரும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala280723
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe