Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (131)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-131

ரு அரசன் நாட்டின் நிதி, நிர்வாகம் செய்வதில் இரஜோ குணத்தையும் (ஆசை), புலவர்களுக்கு புரவலனாக இருக்கும்போது சத்துவக் குணத்தையும் (கருணை), கள்வர்களை தண்டிக்கும்போது, தமோ குணத்தையும் (கோபம்)காட்டுகி றான். வாதம், பித்தம், சிலேஷ்மம், சமநிலை தவறினால், உடல்நலம் கெடுவதுபோல், முக்குணங்களும் சமநிலை இழந்தால், மனதின் ஆரோக்கியம் கெடும். இந்த மூன்றில் எந்த குணம் மேலோங்கியிருக்கிறது என்பதே முக்கியம்.ஒரு ஜாதகரின், மனமும் குணமும் அவருடைய ஜனன காலத்து கிரகங்களின் அமைப்பால் உருவாக்கப்படுகின்றன என்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து. கூதிர் காலத்தில் இலைகள் கூம்பி உதிர்ந்ததுபோல் கலை இழந்த முகத்துடன் பிரசன்னம் பார்க்கவந்தவர் ஒரு இளைஞர். இனம்பு

ரு அரசன் நாட்டின் நிதி, நிர்வாகம் செய்வதில் இரஜோ குணத்தையும் (ஆசை), புலவர்களுக்கு புரவலனாக இருக்கும்போது சத்துவக் குணத்தையும் (கருணை), கள்வர்களை தண்டிக்கும்போது, தமோ குணத்தையும் (கோபம்)காட்டுகி றான். வாதம், பித்தம், சிலேஷ்மம், சமநிலை தவறினால், உடல்நலம் கெடுவதுபோல், முக்குணங்களும் சமநிலை இழந்தால், மனதின் ஆரோக்கியம் கெடும். இந்த மூன்றில் எந்த குணம் மேலோங்கியிருக்கிறது என்பதே முக்கியம்.ஒரு ஜாதகரின், மனமும் குணமும் அவருடைய ஜனன காலத்து கிரகங்களின் அமைப்பால் உருவாக்கப்படுகின்றன என்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து. கூதிர் காலத்தில் இலைகள் கூம்பி உதிர்ந்ததுபோல் கலை இழந்த முகத்துடன் பிரசன்னம் பார்க்கவந்தவர் ஒரு இளைஞர். இனம்புரியாத அச்சமும், காரணமில்லாத கோபமும், தன் மனதை வாட்டுவதாகத் தெரிவித்தார். பிரசன்னத்தினால் பரிகாரம் அறியவே வந்திருந்தார். இரிங்கோல காவு துர்கையை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.சோழி லக்னம் விருச்சிகத்தில் கேட்டை நான்கில் அமைந்தது. லக்னத்தில் சந்திரன் நீசமாகி சனியுடன் கூடியிருந்தது. சத்துவ குணத்தோன் தமோ குண காரகனோடு இணைவதே குழப்பத்தை உண்டாக்கும். ஐந்தாமதிபதியாகிய குருபகவான் மகரத்தில் நீசம் புகுந்தார். மனம் புத்தியின் கட்டுப்பாட்டில் இல்லையென்பது புலனானது.

Advertisment

ss

எண் குணத்தானாக விளங்கும் குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடாசலபதியை புரட்டாசி மாதத்தில் வழிபட்டால் மனகுழப்பம் தீரும் என்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரம் பலனளித்தது. மனமெனும் மதயானை புத்தியெனும் அங்குசத்தால் கட்டுண்டது.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

நாம் சுவாசிக்கும் காற்று உடலின் நூற்றியெட்டு வர்மப் புள்ளிகளில் தங்கித்தான் வெளியேறுகிறது. இந்த நூற்றியெட்டு புள்ளிகளும் உயிரோட்டம் உடையவை. வர்ம சாத்திரத்தில் சொல்லபடும் வர்ம புள்ளிகள்போல் ஒவ்வொறு ஜாதகத்திலும் நூற்றியெட்டு நட்சத்திர பாதங்களிலுள்ள ஒரு குறிப்பிட்ட பாகை உச்சக்கட்ட நிகழ்வு களைத்தரும் புள்ளியாக அமைகிறது. இந்த பாகைகளைக் கண்டறிந்து காலக்கணிதம் செய்வதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு.

Advertisment

இதில் படுவர்மம் பன்னிரண்டு போல் அதிக முக்கிய பாகை களும் தொடு வர்மம் தொண்ணூற்றி யாறுபோல் முக்கிய பாகைகளும் அமையும்.இந்த புள்ளிகளை கோட்சாரத்தில் கிரகங்களும் ஜாதகரின் தசா-புக்தியும் கடக்கும் போது வாழ்வில் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. திருமணம், புத்திர பாக்கியம், எதிர்பாராத புகழ், வருமானம், தீரா நோய், மாரகம் போன்றவற்றை அதிக முக்கிய பாகைகளைக் கடக்கும் ஜீவனுள்ள கிரகமே தோற்றுவிக்கும் என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

முதலீடு திரும்ப வருமா?

கேள்வி: அதிக வட்டி தொகைக்கு ஆசைப்பட்டு ஒரு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தேன். தற்போது அந்த நிதி நிறுவனம் முடங்கிவிட்டது. நான் செய்த முதலீடு திரும்பவருமா? பரிகாரம் உண்டா?

(எண்- 45; உத்திரம்- 1; ராசி- நட்சத்திராதிபதி -சூரியன்.)

ப் சோழி லக்னத்தின் அதிபதியும், நட்சத்திர அதிபதியாகிய சூரியன், பாதகஸ்தானத்திலிருக்கிறது.

ப் தன ஸ்தானாதிபதியாகிய புதனும், பாதகத்திலிருப்பது, வருவாயில் ஏற்பட்ட முடக்கத் தைக் காட்டுகிறது.

ப் முதலீட்டைக் குறிக்கும், பன்னிரண்டாம் வீட்டு அதிபதியாகிய சந்திரன், நீசத்திலிருக்கிறது.

ப் சோழி லக்னத்தில் அமையும், சனிபகவானின் பார்வை, முதலீட் டைத் திரும்பப் பெறுவதிலுள்ள தாமதத்தைக் குறிக்கிறது. குருவும் ராகுவும் இணைந்து ஒன்பதி லிருப்பதால் எதிர்பாராத மாற்றத் தால், முதலீடு, திரும்ப கிடைக்க வாய்ப்புண்டு. இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

பரிகாரம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்திலுள்ள உக்தவேதீஸ்வரர் ஆலய, தேரடி விநாயகரை வழிபட்டால், முதலீட்டை திரும்ப பெறும் வாய்ப்பு உருவாகும்

(தொடரும்)

செல்: 63819 58636

bala210723
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe