சக்கரவாகப் பறவை, ஆகாயத்தில் பிறந்து, மறையும். அவை பூமியைத் தொடுவதில்லை. அன்னப் பறவை சேற்றில் இருந்தாலும், அதன் வெண்மை நிறம் மாறுவதில்லை. தீயி-ருந்து, தீயைப் பிரித்தாலும், தீயின் அளவு குறைவதில்லை. அதுபோல், எந்த புலன் உணர்வும் இல்லாமல் பிறக்கும் குழந்தைகள், ஞானிகளின் அவதாரம். ஞானிகளை பூவுலகின் கர்மப் பலன்கள் பற்றுவதில்லை என்பதே, கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து.
பிரசன்னம் பார்க்க வந்தவரின் முகத்தில் தெய்வீகக் கருணையும், கவலையும் படர்ந்திருந்தன. தனக்குப் பிறந்த மகனுக்கு, ஐந்து வயதாகியும், மூளை வளர்ச்சி யில்லை; இதற்குக் காரணம், பெற்றோரின் கர்மப் பலனா? என்பதையறியவே, பிரசன்னம் பார்க்க வந்ததாகத் தெரிவித்தார். ஆழியூர் பகவதியைத் தொழுது பிரசன்னத் தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.
சோழி லக்னம், ஸ்வாதி நட்சத்திரத்தில் அமைந்தது.
சுக்கிரன், சனி, கேது, திரிகோணத்தில் அமைந்து தவ யோகத்தைக் காட்டியது. மாந்திக்கு, மூன்றிலும், ஆறிலும், சுபர்கள் அமர்ந்து, சாது யோகத்தைக் காட்டியது. சந்திரன் பன்னிரண்டி-ருந்து, மனமெனும், கர்ம பந்தம் விரயமானதைக் காட்டியது. பிறந்திருப்பது ஞானதேகம் முக்தியாகி, கர்மதேகம் நீங்காத மகான் என்பது, தெளிவானது. பிரசன்னம் பார்க்க வந்தவருக்கு, இந்த உண்மைத் தெளிவாக்கப்பட்டது. அந்த மகான் வாழும்வரை தொண்டுசெய்வதே, பெற்றோருக்குக் கிடைத்த வரம் என்பதும் எடுத்துரைக்கப்பட்டது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
நீண்டநாட்களாக நோய்வாய்ப்பட்டவருக்கு, சிகிச்சைக்குரிய காலத்தைக் கண்டறிந்து, நோய் தீர்ப்பதே, கேரள ஜோதிடத்தின் சிறப்பு. ஒருவரது ஜென்ம நட்சத்திரத்துக்கு 3, 5, 7-ஆவது நட்சத்திரங்கள் இருக்கும் நாட்களில் நோய் ஏற்பட்டால், நோய் தீருவது கடினம். நீண்டநாள் நோய்வாய்ப்பட்ட ஒருவர் தனது சிகிச்சையை ஆரம்பிக்க ஏற்ற நட்சத்திரங்கள்- அஸ்வினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி ஆகிய பதினாறு நட்சத்திரங்கள். உக்ர யோகமுள்ள நாட்களில் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் நோய் குணமாகும். சில நட்சத்திரங்கள்- திதிகள் இணையும் நாள் உக்ரயோகம்கூடிய தினமாகும்.
1. ரோகிணி (திருதியை, நவமி); 2. உத்திரம் (சதுர்த்தி); 3. திருவோணம் (பஞ்சமி); 4. மிருகசீரிடம் (சஷ்டி); 5. ரேவதி (சப்தமி); 6. கிருத்திகை (நவமி); 7. பூசம் (தசமி); 8. அனுஷம் (துவாதசி, திருதியை); 9. கிருத்திகை மற்றும் மகம் (திரயோதசி); திதி, நட்சத்திரம், நாள், நேத்ரம், ஜீவன், ஹோரைகளை பரிசீ-த்து, சிகிச்சை செய்தால், நோய் தீருமென்பதே, கேரள ஜோதிடர்களின் கருத்து.
திருமண வாழ்வில் பிரச்சினை தீருமா?
கேள்வி: எனக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. சமீபகாலமாக, என் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரியும் மன நிலைக்கு வந்துவிட்டோம், திருமண வாழ்வில் பிரச்சினை தீருமா?
(எண்- 58; ஸ்வாதி- 2; நட்சத்திராதிபதி- ராகு, ராசியாதிபதி- சுக்கிரன்.)
* சோழி லக்னத்தில் கேதுவும், ஏழில் ராகுவும் அமைவது சர்ப தோஷத்தைக் காட்டுகிறது..
* களத்திர காரகனாகிய சுக்கிரன், எட்டாமிடத் தொடர்புகொண்டு, பன்னிரண்டில் நீசமடைவது, திருமண வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினையைத் தெளிவாக்குகிறது.
* ஏழாமிடத்து அதிபதியாகிய செவ்வாய் எட்டிலிருப்பது, திருமண வாழ்வில் மறைமுக பிரச்சினை இருப்பதை சுட்டிக்காட்டியது.
* சோழி லக்னத்தின் பாதகாதிபதியும், பனிரண்டில் இருப்பதால், கணவன்- மனைவிக்குள் ஏற்பட்ட அந்தரங்கமான பிரச்சினையால் வந்த விளைவாகும்.
* மேஷத்தில் குரு வரும் காலத்தில், பிரச்சினை முடிவுக்கு வரும்.
பரிகாரம்
தஞ்சாவூர், திருமங்கலக்குடி பிராணநாதேசுவரர் கோவிலுக்குச் சென்று, மங்களாம்பிகை அம்மனை தரிசிக்க, குடும்பப் பிரச்சினை தீரும்.
(தொடரும்)
செல்: 63819 58636