Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (127)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-127

ண்ணுக்குத் தெரியாமல் மண்ணில் மறைந்திருக்கும் வேர்தான் மரத்தை உறுதியாக நிற்கவைக்கிறது. கர்மாவின் வேர்தான், வாழ்க்கைக்கு அடித்தளமாகிறதென்பதே, கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து. வருத்தத்தால் கருத்த முகமும், கண்ணீர் மழையுமாக பிரசன்னம் பார்க்க வந்தவர், ஒரு நடு வயதுக்காரர். தன் மகனுக்கு ஐந்து வயதாகியும், அவன் மழலைச் சொல்லைக் கேட்கமுடியவில்லை என்று கூறி வருந்தினார். அதற்கான காரணத்தை அறியவே பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். எடப்பல்லி பகவதியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

சோழி லக்னத்தின் இரண்டாம் பாவம், ஊமை ராசியில் அமைந்து, இரண்டாம் பாவாதிபதியும் ஊமை ராசியிலிருந்தது. வாக்கு காரகனாகிய செவ்வாயும் நீசத்திலிர

ண்ணுக்குத் தெரியாமல் மண்ணில் மறைந்திருக்கும் வேர்தான் மரத்தை உறுதியாக நிற்கவைக்கிறது. கர்மாவின் வேர்தான், வாழ்க்கைக்கு அடித்தளமாகிறதென்பதே, கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து. வருத்தத்தால் கருத்த முகமும், கண்ணீர் மழையுமாக பிரசன்னம் பார்க்க வந்தவர், ஒரு நடு வயதுக்காரர். தன் மகனுக்கு ஐந்து வயதாகியும், அவன் மழலைச் சொல்லைக் கேட்கமுடியவில்லை என்று கூறி வருந்தினார். அதற்கான காரணத்தை அறியவே பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். எடப்பல்லி பகவதியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

சோழி லக்னத்தின் இரண்டாம் பாவம், ஊமை ராசியில் அமைந்து, இரண்டாம் பாவாதிபதியும் ஊமை ராசியிலிருந்தது. வாக்கு காரகனாகிய செவ்வாயும் நீசத்திலிருந்தது. பித்ரு காரகனாகிய சூரியன், ராகுவுடன் இணைந்து, ஒன்பதாம் வீட்டிலிருந்தது. பித்ரு தோஷத்தின் பாதிப்பே, பிரச்சினைக்குக் காரணம் என்பதை அறியமுடிந்தது. முறையாகச் செய்யப் படும் பித்ரு பூஜையால், ஜாதகத்தி லுள்ள எல்லா தோஷங்களையும் அகற்றிவிட முடியும். திருப்புல்லானி சென்று தில ஹோமம் செய்து, ஆதிஜெகன்னாதப் பெருமாளை வழிபடவேண்டும். பின்னர், மேல்வெண்பாக்கம் சென்று, லட்சுமி நரசிம்மரை வணங்கினால், தோஷம் தீரு மென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரத் தால் பலன் கிடைத்தது.

dd

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

கிரகங்களின் குணம், அவற்றின் இருப்பிடத்திற்கேற்ப மாறும். கிரகங்களின் குணங்களையும் அந்த கிரகத்தின் இருப் பிடத்தால் வரும் குணத்தையும் இணைத்து பலன் காண்பதே, கேரள ஜோதிடத்தின் சிறப்பு.

ஒருவர், தன் எஜமானரிடம் பழகும்போது ஒருவித போக்கையும், தன்னிடம் பணியாற்று பவர்களிடம் வேறுவிதமான போக்கையும் கையாள்வதுபோல், கிரகங்களின் குணம், அவற்றின் இருப்பிடத்திற்கேற்ப மாறும்.

செவ்வாயும், சனியும் பார்வை பரிவர்தனை பெற்றால், வாழ்க்கையில் பூகம்பம் போன்ற விளைவுகளை உண்டாக்கி, தீய பலன்களே நிகழுமென்று சொல்வது வழக்கம். எல்லா கிரங்களுக்கும் ஏழாம் பார்வையுண்டு. மேஷ லக்னக்காரருக்கு, கடகத்தில் சனியும், மகரத்தில் செவ்வாயும் இருந்தால், ஏழாம் பார்வையின் பரிவர்தனை உண்டாகும். இதன் பலன் ஜாதகர், பாதுகாப்புத் துறையில், அதிகார மான பதவியில் இருப்பார் என்பதே. இதன் காரணம், பத்தாமதிபதியாகிய சனி, ஏழாம் பார்வையால் லக்னாதிபதியைப் பார்பதும். லக்னாதிபதியாகிய செவ்வாய், உச்சத்தில் நின்று பத்தாமதிபதியைப் பார்ப்பதும், நல்ல அதிகாரமான பதவியைத் தரும். இதுவே, மாறி அமைந்தால் வாழ்க்கையில் போராட்டம் அதிகமாகும். போர்முனையில் வாழ்க்கை அமையும் என்பதற்கும், வாழ்க் கையே போராட்டமாயிருக் கும் என்பதற்கும், அதிக வேறுபாடுகள் உள்ளன என்பதே, கேரள ஜோதிடர்களின் கருத்து.

Advertisment

kj

வெளி நாட்டில் வேலை கிடைக்குமா?

கேள்வி: நான் பொறியியல் பட்டதாரி. எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்குமா?

(எண்- 17; மிருகசிரீடம்- 1; நட்சத்திராதி பதி- செவ்வாய்; ராசியாதிபதி- சுக்கிரன்.)

* சோழி லக்னத்தின் நட்சத்திராதிபதி ஒன்பதில் உச்சம்பெறுவது நீண்டதூரப் பயணத்தைக் குறிக்கிறது.

* ஒன்பதாமிடத்தில், சனிபகவான் ஆட்சியிலிருப்ப தும் வெளிநாட்டுப் பயணத் திற்கு சாதகமானதாகவே அமை கிறது.

* தனம், வருமானத்தைக் குறிக்கும் இரண்டு, ஆறு, பத்தாம் வீட்டு அதிபதிகள், ஒன்பது மற்றும் பத்தாமிடத்துடன் தொடர்பிலிருப்பது தூரதேசத்தில் பணம் சம்பதிப்பதைக் காட்டுகிறது.

* வெளிநாட்டுப் பயனத்தைக் குறிக்கும் ராகு பன்னிரன்டில் சஞ்சரிக்கும் காலத்தில் எண்ணம் ஈடேறும்.

* பத்தில் இருக்கும் குரு, பதினொன்றா மிடத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வாய்ப்பு கனிந்து வரும்.

* பத்தாமிடத்தில் அமைந்த குரு, இரண்டாமிடத்தைப் பார்பதால், செல்வமும், செல்வாக்கும் நிறைந்த வாழ்க்கை அமையும்.

பரிகாரம்

* சுசீந்திரம் ஸ்ரீ இராம பக்த அனுமனை வழிபட்டால் விரைவில், கடல் தாண்டி வெளி நாடு செல்லும் யோகம் உண்டாகும்.

(தொடரும்)

bala230623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe