Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (125)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-125

புகழும் அமைதியும் எதிரெதிர் இலக்குகள். புகழ் வேண்டுவோருக்கு அமைதி கிடைப்பதில்லை. அமைதியாக வாழ விரும்பு வோருக்கு, புகழ் என்பது எட்டாதக் கனியாகும். அசை யாத அடிமரமும், காற்றுக் கேற்ப அசைந்துகொடுக்கும். கிளைகளும் உள்ள மரங்களே நெடுநாள் வாழும். உறுதியான கொள்கையும், காலத்திற்கு ஏற்றாற்போல் செயலை மாற்றிக்கொள்பவர்கள் மட் டுமே புகழுடன், ஓரளவாவது அமைதியைப் பெறுவர் என்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் அனுபவம்.

Advertisment

கனவுத் தொழிற்சாலையாகிய திரையுலகில், வெற்றிக் கொடி கட்டிவாழும், கதாநாயகன், பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். தனக்கு வாழ்க்கையில் எல்லாம் கிடைத்தது. ஆனாலும், நல்ல வாழ்க்கை கிடைக்கவில்லை என்று கூறி வருந்தினார். மன அ

புகழும் அமைதியும் எதிரெதிர் இலக்குகள். புகழ் வேண்டுவோருக்கு அமைதி கிடைப்பதில்லை. அமைதியாக வாழ விரும்பு வோருக்கு, புகழ் என்பது எட்டாதக் கனியாகும். அசை யாத அடிமரமும், காற்றுக் கேற்ப அசைந்துகொடுக்கும். கிளைகளும் உள்ள மரங்களே நெடுநாள் வாழும். உறுதியான கொள்கையும், காலத்திற்கு ஏற்றாற்போல் செயலை மாற்றிக்கொள்பவர்கள் மட் டுமே புகழுடன், ஓரளவாவது அமைதியைப் பெறுவர் என்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் அனுபவம்.

Advertisment

கனவுத் தொழிற்சாலையாகிய திரையுலகில், வெற்றிக் கொடி கட்டிவாழும், கதாநாயகன், பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். தனக்கு வாழ்க்கையில் எல்லாம் கிடைத்தது. ஆனாலும், நல்ல வாழ்க்கை கிடைக்கவில்லை என்று கூறி வருந்தினார். மன அமைதிதேடி, பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். பேரூர்காவு துர்க்கையம் மனைத் தொழுது, பிரசன்னத் தைத் துவக்கினார் கிருஷ் ணன் நம்பூதிரி. சோழி லக்னத்திற்கு, எட்டாமிடத்தில், மனோ காரகனாகிய சந்திரன் ராகுவின் தொடர்பிலிருந் தது. ஐந்தாமதிபதி எட்டிலிருந்த தால், உறவினரின் நம்பிக்கை துரோகத்தால் ஏற்பட்ட பாதிப்பு தெரிந்தது. அதிகாரம் மற்றும் செல்வாக்கைக் குறிக்கும் பத்தமிடம் வலுத்து, மன அமைதியைக் காட்டும் நான்காமிடம் பலம் குறைந்திருந்தது. பிரசன்னம், புகழ் ஏணியின் உச்சத்தைக் காட்டினாலும், அமைதியில்லாத வாழ்க்கையின் அவலம் தெரிந்தது. வள்ளிமலை முருகனை தரிசித்தால் கவலை பறந்தோடும் என்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரத்தால் மன அமைதி கிடைத்தது.

kj

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

கிரகங்களின் கால பலத்தை பஞ்சபூத தத்துவத்தின் அடிப்படையில் கணக்கிடுவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்களாகிய கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவை பஞ்சபூதங்களைக் குறிப்பவை. கிழமை- பிருதிவி (நிலம்), திதி- அப்பு (நீர்), நட்சத்திரம்- தேயு (நெருப்பு), யோகம் வாயு (காற்று), கரணம்- வெளி (ஆகாயம்). வளர்பிறை, தேய்பிறையில் கிரகங்களின் வலிமையும், தன்மையும் மாறும். நட்சத்திராதிபதி, நாளின் அதிபதி, நடப்பு லக்னத்தின் அதிபதி, ஹோரா அதிபதி போன்ற ஆளும் கிரகங்களின் வலிமையையும், காரகத்தையும், கணக்கில்கொண்டே, பலங்களை அறியவேண்டும். தின பலம், பட்ச பலம், வருட பலம், மாத பலம், வார பலம், ஹோரா பலம், அயன பலம், யுத்த பலம் ஆகிய எல்லா வலிமையையும், கருத்தில்கொண்டே, கிரகங்களின் பலத்தைக் கணக்கிடவேண்டுமென்பதே, கேரள ஜோதிடர்களின் கருத்து.

களவுபோன பொருள் கிடைக்குமா? கேள்வி: கடந்த மாதம், என் வீட்டில் வெள்ளி விளக்கு களவு போய்விட்டது. அது திரும்பக் கிடைக்குமா?

-தனசேகரன், திருவள்ளூர்.

(எண்- 68; அனுஷம்- 4; நட்சத்திராதி பதி- சனி; ராசியாதிபதி- செவ்வாய்.)

* சோழி லக்னத்தின் நட்சத்திராதி பதியும், நாங்காம் வீட்டின் அதிபதியுமாக சனி பகவான் அமைவதால், வேலை யாட்கள் மூலமாக திருடப்பட்டிருப்பது தெளிவாகிறது.

ff* ஆறாமிடத்தில் குரு, ராகுவுடன் கூடி யிருப்பதால், திருடியவர், வேற்று மதத்தைச் சார்ந்தவர் என்பதையும் அறியமுடிகிறது.

* சோழி லக்னத்திற்கு எட்டா மிடத்தில், வெள்ளிக்கு காரகனாகிய சுக்கிரன் இருப்பதால், தொலைந்த பொருள் வெள்ளியாலானது என்பதும் உறுதியாகிறது.

* கேது பன்னிரண்டில் இருப்பதால், திரு டப்பட்ட பொருள் பூஜையறையிலிருந்த பொருள் என்ற உண்மை புலனாகிறது.

* சனிபகவான் ஆறாமிடத்தைப் பார்வை யிடுவது, சாதகமான அமைப் பில்லை.

* பாதக ஸ்தானத்தில் செவ்வாய் நீசமடைவதால், புகார் கொடுப்பதால் பயனில்லை. திருடியவரே மனம் திருந்தி பொருளைத் திரும்பத் தர வாய்ப்புள்ளது.

பரிகாரம்

சென்னை- தாம்பரத்துக்கு அருகி லுள்ள ரத்னமங்கலத்தில் அருள்பாலிக் கும், அரைக்காசு அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபட்டால், திருடப்பட்ட பொருள் திரும்பக் கிடைக்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala090623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe