Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (119)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-119

னந்தமென்பது, மனதின் தாகம். ஞானி, ஆற்றுநீரைப் பருகி தாகம் தனிபவர்போல், தன்னையறிந்து பேரின்பம் கொள்கிறார்.

Advertisment

கள்ளுண்பவனும், காமுகனும் கடல்நீரைப் பருகி, தாகம் மிகுத்தவர் போல் தன்னை மறந்து சிற்றின்பத்தை சுகிக்கிறார். தன்னையறிதலும் இன்பம்; தன்னை மறத்தலும் இன்பம்தான் என்றாலும் எதிலும் கட்டுப்பட்டு, அடிமையாகுதல் துன்பமே. விடுதலையே இன்பம். மனோகார கனான சந்திரனுடன் ஞானகாரகன் கேது சேரும் ஜாதகர் யோகியாகவும், ராகு இணையும்போது, போகியாகவும் மாறுகிறார் கள். ராகு அதிர்ஷ்டத் தைத் தருபவராகவும், கேது அனுபவத்தைத் தருபவராகவும் இருக்கிறார் கள் என்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து பிரசன்னம் பார்க்க வந்தவரின் ஆடையும் ஆபரணமும் மகிழ்ச்சி யைக

னந்தமென்பது, மனதின் தாகம். ஞானி, ஆற்றுநீரைப் பருகி தாகம் தனிபவர்போல், தன்னையறிந்து பேரின்பம் கொள்கிறார்.

Advertisment

கள்ளுண்பவனும், காமுகனும் கடல்நீரைப் பருகி, தாகம் மிகுத்தவர் போல் தன்னை மறந்து சிற்றின்பத்தை சுகிக்கிறார். தன்னையறிதலும் இன்பம்; தன்னை மறத்தலும் இன்பம்தான் என்றாலும் எதிலும் கட்டுப்பட்டு, அடிமையாகுதல் துன்பமே. விடுதலையே இன்பம். மனோகார கனான சந்திரனுடன் ஞானகாரகன் கேது சேரும் ஜாதகர் யோகியாகவும், ராகு இணையும்போது, போகியாகவும் மாறுகிறார் கள். ராகு அதிர்ஷ்டத் தைத் தருபவராகவும், கேது அனுபவத்தைத் தருபவராகவும் இருக்கிறார் கள் என்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து பிரசன்னம் பார்க்க வந்தவரின் ஆடையும் ஆபரணமும் மகிழ்ச்சி யைக் காட்டினாலும், முகம் மட்டும் சோக சித்திரத்தை வரைந்தது. தான் திரைப்படத் துறையில் இருப்பதாகவும், தன்னிடம் அளவுகடந்த செல்வமிருந்தும், மன அமைதியில்லை; அதற்கான காரணத்தையறியவே, பிரசன்னம் பார்க்க வந்ததாகவும் தெரிவித்தார். நெல்லுவாயில் பகவதியைத் தொழுது, பிரசன்னத்தைத் தொடங்கினார், கிருஷ்ணன் நம்பூதிரி.

KJ

சோழி லக்னம், திருவாதிரை இரண்டில் அமைந்தது. பதினொன்றாமிடத் தில் அமர்ந்த ராகு வெற்றி, புகழ், பணம், செல்வம் ஆகியவற்றையும், அவர் சார்ந்த, திரைப்படத் துறையையும் காட்டியது. ஐந்தில் கேது- சந்திரனுடன் இணைந்து அவருடைய, தீய பழக்கங்களையும், மன நிம்மதி இழப்பின் காரணத்தையும் தெளிவாக்கியது. விதியை மாற்றும் வல்லமைகொண்ட பிரம்மாவின் தலையெழுத்தையே மாற்றிய, திருபட்டூர் சென்று, ஜனன ஜாத கத்தை வைத்து வழிபட்டால், மனம் தெளிவாகுமென்ற பரிகாரம் சொல்லப் பட்டது. பரிகாரம் பலனளித்தது. விடியலை நோக்கியிருந்த பறவை விடுதலை பெற்றதுபோல் மனவேதனை அகன்றது.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

வர்ம சாத்திரத்தில் சொல்லப்படும் வர்மப் புள்ளிகளைப்போல், ஒவ்வொறு ஜாதகத்திலும் நூற்றியெட்டு பாதங்களிலுள்ள ஒரு குறிப்பிட்ட பாகை, உச்சகட்ட நிகழ்வுகளைத் தரும் புள்ளி யாக அமைகிறது. பாவ, கிரக, நவாம்சங்களையும், அதன் உயிரோட்டமான பாகைகளையும் ஆராய்ந்து, பலன்களைக் காண்பதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு.

படுவர்மம் பன்னிரண்டுபோல், அதி முக்கிய பாகைகளும், தொடுவர்மம் தொன்னூற்றாறுபோல் முக்கிய பாகைகளும் அமையும். இந்த புள்ளிகளை கோட்சாரத்தில் கிரகங்களும், ஜாதகரின் தசாபுக்தியும் கடக்கும்போது வாழ்வில் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. திருமணம், புத்திரபாக்கியம், எதிர்பாராத புகழ், வருமானம், தீரா நோய், மாரகம் போன்றவற்றை அதி முக்கிய பாகைகளைக் கடக்கும் ஜீவ கிரகமே தோற்றுவிக்குமென்பதே, கேரள ஜோதிடர்களின் கருத்து.

நோய் நீங்குமா?

கேள்வி: என் மனைவி, கடந்த ஒரு மாதமாக, வாத நோயால் அவதிப்படுகிறார். மருத்துவம் பார்த்தும் பயனில்லை. நோய் நீங்குமா? பரிகாரம் உண்டா?

-ஸ்ரீதரன் -பெங்களூரு.

(எண்- 49, ஹஸ்தம்- 1, நட்சத்திராதிபதி- சந்திரன், ராசியாதிபதி- புதன்.)

* சோழி லக்னத்திற்கு அதிபதியாகிய புதன், எட்டாமிடத்திலிருப்பது, மருத்துவர்களால் காரணம் அறியமுடியாத நோயால் பாதிக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

* நட்சத்திர அதிபதியாகிய சந்திரன் பூரணமாக தன் சுய சாரத்திலிருப்பதால் நோய் விரைவில் குணமடையும் என்ற ஆறுதலைத் தருகிறது.

* ஆறில் சனி இருப்பதால் நோயை எதிர்த்துப் போராடும் வலிமையுண்டு.

* பிரசன்ன லக்னம், உபய ராசியில் அமைவதால், 54 நாட்களில் நோயாளி, நலம்பெறுவார்.

* குருவின் பார்வை, சந்திரன், சோழி லக்னத்தில் பதிவதால் பரிகாரத்தால் பலன் கிடைக்கும்.

* கேது இரண்டிலிருப்பதால், நோயாளி யின் ஆயுளுக்கு பாதகமில்லை என்பது உறுதி.

பரிகாரம்

* செவ்வாயன்று அதிகாலை, தண்டீஸ்வரத்தில் அருள்பாலிக்கும், தண்டீஸ் வரரை வணங்கினால், ஆபத்து நீங்கும்.

* வைதீஸ்வரன் கோவிலுக்குச் சென்று முத்துக்குமார ஸ்வாமிக்கு பூஜை செய்தால், நோய் தீரும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala280423
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe