Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (118)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-118

வீரனுக்கு புல்லும் ஆயுதமாகவே தெரியும். சிற்பி எல்லா கல்லையும் சிலையாகவே காண்பான். குயவனுக்கு மண்ணெல்லாம் மண்பாண்டமே.

Advertisment

அவரவர் மனதிற்கேற்ற தொழில் அமைந்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெறமுடியும். அதனாலேயே மனதைக் குறிக்கும் நான்காம் பாவத்திற்கு ஏழாம் பாவமாகவே பத்தாம் பாவம் அமைந்துள்ளது என்பதே கிருஷ்ணன் நம்பூதியின் கருத்து.

கவலையில் துவண்ட முகத்துடன் பிரசன்னம் பார்க்க வந்தவர் ஒரு நடு வயதுக்காரர். தான் பல தொழில்கள் செய்தும் முன்னேறமுடியவில்லையென்று கூறி வருந்தி னார். எந்தத் தொழிலில் ஈடுபட்டால் வெற்றி பெறலாமென்று அறியவே பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். சால பகவதியைத் தொழுது பிரசன்னத் தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

பிரசன்ன லக்னம் பூரம் முதல்

வீரனுக்கு புல்லும் ஆயுதமாகவே தெரியும். சிற்பி எல்லா கல்லையும் சிலையாகவே காண்பான். குயவனுக்கு மண்ணெல்லாம் மண்பாண்டமே.

Advertisment

அவரவர் மனதிற்கேற்ற தொழில் அமைந்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெறமுடியும். அதனாலேயே மனதைக் குறிக்கும் நான்காம் பாவத்திற்கு ஏழாம் பாவமாகவே பத்தாம் பாவம் அமைந்துள்ளது என்பதே கிருஷ்ணன் நம்பூதியின் கருத்து.

கவலையில் துவண்ட முகத்துடன் பிரசன்னம் பார்க்க வந்தவர் ஒரு நடு வயதுக்காரர். தான் பல தொழில்கள் செய்தும் முன்னேறமுடியவில்லையென்று கூறி வருந்தி னார். எந்தத் தொழிலில் ஈடுபட்டால் வெற்றி பெறலாமென்று அறியவே பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். சால பகவதியைத் தொழுது பிரசன்னத் தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

பிரசன்ன லக்னம் பூரம் முதல் பாதத்தில் அமைந்தது. சிம்ம ராசிக்குரிய ரஜோ குணத்தைக் காட்டும் தொழிலே வெற்றி தருமென்பது உறுதியானது. பத்தாமிடமாகிய ரிஷபமும் நிதி நிறுவனத்தைக் காட்டுவதால் பங்குச் சந்தை வட்டித் தொழில் செய்தால் லாபம் கிடைக்குமென்பதே தெளிவாகத் தெரிந்தது. லக்ஷ்மி தந்திரத்தில் கூறியவாறு ஸ்ரீ விஷ்வக் சேனரை வழிபாட்டபின், பெருமாளையும், ஸ்ரீ தேவித் தாயாரையும், வியாழன், மாலை நேரத்தில், குபேர வேளையில் பூஜைசெய்தால் தொழில் சிறக்குமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பிரசன்னம் பார்க்க வந்தவர் செய்த பரிகாரம் பலனளித்தது. தொழில் செழித்தது. செல்வம் கொழித்தது.

Advertisment

kj

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

தசாபுக்திகளின் கால நிர்ணயமே வாழ்வின் நிகழ்வுகளுக்கு அடிப்படையென் றாலும், கோட்சாரத்தில் ஜனன காலத்து சந்திரனைக் கடக்கும் கிரகங்களும், தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கிரக சஞ்சார பலன்களையும் இணைத்துப் பலன் காண்பதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு.

ஜனன காலத்து சந்திரனை சூரியன் கடக்கும் காலத்தில் வாழ்க்கையில் நல்ல மாறுதலும் முன்னேற்றமும் கைகூடும். புதன், கடக்கும் காலத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். கல்வியில் நாட்டம் உண்டாகும். செவ்வாய் கடக்கும் காலத்தில் தாயாருக்கு ஆரோக்கிய குறைவு, சொத்துப் பிரச்சினை போன்றவையே பலனாகும். சுக்கிரன் சஞ்சரிக்கும் காலத்தில் வீடு, வாகன வசதிகளைப் பெறலாம். குரு பிரவேசிக்கும் காலத்தில் செல்வமும் செல்வாக்கும் பெருகும். சனிபகவான், சந்திரன் இருக்கும் ராசியில் உலவும் காலத்தில், மனச் சோர்வும், விரக்தியுமே பலனாக அமையுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

மகன் வீடு திரும்புவானா?

கேள்வி: சென்ற மாதம், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் என் மகன் மன வருத்ததினால், காணாமல் போய்விட்டான். மகன் மனந்திருந்தி வீடு திரும்புவானா? பரிகாரம் உண்டா?

-கனக ராஜ், விருத்தாசலம்.

(எண்- 22, திருவாதிரை- 2, நட்சத்திராதிபதி- ராகு, ராசியாதிபதி- புதன்.)

* சோழி லக்னத்திற்கு ஆறாமதிபதியாகிய செவ்வாய், சத்ரு ஸ்தானாதிபதி பதினொன்றா மிடத்தில் இருப்பது நன்மைதான் என்றாலும், ராகுவுடன் தொடர்பு ஏற்பட்டு, சனியின் மூன்றாம் பார்வையும் பெறுவதால் கெடுபலன் அதிகமானது.

* பத்தில் தனித்த குரு இருப்பதால் வாழ்வில் ஏற்பட்ட தடைகளே மனக் குழப்பத்திற்குக் காரணமானது.

* ஆறில் நீசமான சந்திரன் இருப்பதால் ஜாதகர் உறவினர் பகையைச் சம்பாதிப் பார். கடன் தொல்லையும் சோம்பலும் உண்டாகும். குடும்ப விரோதத்தால், தீராத மனக் கவலை உண்டாகும். வம்பு- வழக்குகள் உண்டாகும்.

* ஐந்தில் கேது இருப்பது காணாமல் போனவரின் விரக்தியான மனோநிலையைக் காட்டுகிறது.

* குருபகவான் பிரசன்ன லக்னத்தையும் சோழி லக்னத்தின் நான்காமிடத்தையும் பார்வையிடுவதால், காணாமல் போனவர், மனமாற்றமடைந்து வீடு திரும்புவார் என்ற ஆறுதலான பலனைக் காணமுடிகிறது.

பரிகாரம்

செவ்வாயன்று அதிகாலை, விநாயகர் கோவிலுக்குச் சென்று செவ்வலரளி மாலை அணிவித்து வணங்கினால், காணாமல் போனவர் வீடு திரும்புவார்.

ஞாயிற்றுக்கிழமை, திருப்பாம்பரம் சென்று சிவனை வழிபட்டுபின் அஷ்ட நாக சந்நிதியில் விளக்கேற்றி வழிபட்டால் காணாமல் போனவர் மனம் திருந்தி குடும்பத்தில் இணைவார்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala210423
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe