Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (114)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-114

நெல்லுக்கும் உமியுண்டு; நீருக்கும் நுரையுண்டு; வெண்ணிலவுக்கும் கறையுண்டு. எதிலும் குறையென்றால் குணம்காண முடியாது. பஞ்சபூதங் களின் அடிப்படையில் இயங்கும், நவகிரகங்களின் குண வேறுபாடுகளைக் குறையென்று கூறமுடியாது. ஒவ்வொருவர் வாழ்க்கையையும் ஒரு குறிப்பிட்ட கிரகமே தலைமையேற்று நடத்து கிறது. அந்த கிரகம் அவரவர் குலதெய்வத்தைச் சார்ந்த தாகவே இருக்குமென்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து.

Advertisment

பிரசன்னம் பார்க்க வந்தவரின் முகத்தில் தெரிந்த கலவரமே, அவருடைய நிலவரத்தை நிரூபித்தது. தன்னுடைய குடும்பத்தில் சுபகாரியங் கள் நடப்பதில் தடையுண்டாவதாகவும், குலதெய்வத்தையறிந்து தோஷநிவர்த்தி பெற

நெல்லுக்கும் உமியுண்டு; நீருக்கும் நுரையுண்டு; வெண்ணிலவுக்கும் கறையுண்டு. எதிலும் குறையென்றால் குணம்காண முடியாது. பஞ்சபூதங் களின் அடிப்படையில் இயங்கும், நவகிரகங்களின் குண வேறுபாடுகளைக் குறையென்று கூறமுடியாது. ஒவ்வொருவர் வாழ்க்கையையும் ஒரு குறிப்பிட்ட கிரகமே தலைமையேற்று நடத்து கிறது. அந்த கிரகம் அவரவர் குலதெய்வத்தைச் சார்ந்த தாகவே இருக்குமென்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து.

Advertisment

பிரசன்னம் பார்க்க வந்தவரின் முகத்தில் தெரிந்த கலவரமே, அவருடைய நிலவரத்தை நிரூபித்தது. தன்னுடைய குடும்பத்தில் சுபகாரியங் கள் நடப்பதில் தடையுண்டாவதாகவும், குலதெய்வத்தையறிந்து தோஷநிவர்த்தி பெறமுடியவில்லையென்றும் வருந்தி னார். சேரநெல்லூர் பகவதியைத் தொழுது பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

KJ

பிரசன்ன லக்னத்தின் ஐந்து மற்றும் ஒன்பதாம் வீடுகள் நீர் ராசியிலமைந்து, ராகுவும் கடகத்திலிருந்தது. ராகு வலிமையுடன் இருந்ததால் உக்கிரமான பெண் தெய்வம் எல்லை தெய்வம், குலதெய்வமாக வழிநடத்துகிறதென்பது தெரிந்தது. இரண்டு ஆறுகளுக்கு நடுவிலுள்ள கோவில் என்பதும் உறுதியானது. பிரசன்னம் பார்க்க வந்தவரின் பூர்வீக கிராமம் சாத்தூர் என்பதால், அது இருக்கன்குடியாக இருக்கலாமென்ற தெளிவு கிடைத்தது. இந்த உண்மை பிரசன்னம் பார்க்க வந்தவரின் கனவிலும் உறுதியானது. இருக்கன்குடி மாரியம்மன் அருளால் குழப்பம் தீர்ந்து குடி உயர்ந்தது.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒரு ஜாதகத்தின் பலனை அறியும்போது கூட்டு கிரகங்களின் இணைவையும், அது இணையும் பாவங்களையும் அறியவேண்டியது அவசியம். கிரக பாவ தொடர்புகளைக் கணக்கில் கொண்டு பலனறிவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. லக்ன பாவத்தில் சூரியன், சந்திரன், சுக்கிரன் இணையும்போது, ஜாதகரை தர்ம குணமும் செல்வாக்கும் மிகுந்தவராக்கும். இதே அமைப்பு ஒன்பதாம் பாவத்தில் அமையும்போது, ஜாதகர் திருடனாகவும், பல உபாதைகள் உடையவராகவும் இருப்பார். ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்து, பாலைப் பாழாக்குவதுபோல, சில கிரகங்களின் சேர்க்கை, பாவத்தின் பலன்களைக் கெடுக்குமென்பதே கேரள ஜோதிடர் களின் கருத்து.

தீய பழக்கங்கள் விலகுமா?

கேள்வி: என் மகன் கெட்டவர்களின் நட்பால் தீய பழக்கங்களில் சிக்கிவிட்டான். அதனால் அவன் கல்வியும் பாழாகிவிட்டது. தீய பழக்கங்கள் விலகுமா?

அதற்குப் பரிகாரமுண்டா?

-திருமதி மேனகா, பெங்களூரு.

(எண்- 75; மூலம்- 3; நட்சத்திராதிபதி- கேது; ராசியாதிபதி- குரு.)

kj

* சோழி லக்னத்தின் நட்சத்திராதிபதியாகிய கேது, ராகுவின் நட்சத் திரத்தில் சஞ்சாரிப்பது தீய பழக்கங்களைக் காட்டுகிறது.

* லக்னத்திற்கு எட்டில் மாந்தி சந்திரனின் வீட்டிலமர்வது மனமும் குணமும் கெட்டிருப்பதை உறுதிசெய்கிறது.

* நான்கில் குரு அமர்ந்திருப்பதால் கல்வியில் தடை ஏற்பட் டுள்ளதை அறியமுடிகிறது.

* ஐந்தில் ராகு அமைவது கூடாநட்பால் எளிதில் தீய பழக்க வழக்கத்திற்கு அடிமை யாகி, அதிலிருந்து வெளியில் வரமுடியாத நிலையைக் காட்டுகிறது.

* பன்னிரண்டாம் வீட்டில் சந்திரன் நீசமாக இருப்பது விரக்தியான மனோநிலையைக் குறிக்கிறது.

* குருபகவான் மேஷத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் பரிகாரம் பலனளிக்கும்.

பரிகாரம்

தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவருக்கு விளக்கிட்டு வழிபட்டால், போதைப் பழக்கங்களிலிருந்து விடுபடலாம். வளர்பிறை திங்கட்கிழமையன்று திருவெண்காடு ஆலயத்துக்குச் சென்று, திருக்குளத்தில் நீராடி அகோர மூர்த்தி சந்நிதியில் நெய் விளக்கேற்றி வழிபட்டால் தீய பழக்கங்களிலிருந்து விடுபட வழி கிடைக்கும்.

bala240323
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe