"மழை மேகத்தை அனுபவத்தால் அறியமுடியாத விவசாயி விதை நெல்லை இழப்பான். தசாபுக்தி, கோட்சாரத்தின் அனுகூலலி பிரதிகூலப் பலனறியாது செய்யப்படும் செயல் பெரும் பாதகத்தையே விளைவிக்குமென்பதே, கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து.

பிரசன்னம் பார்க்க வந்தவரின் வாடிய முகம், அவர் வாழ்ந்து கெட்டவர் என்பதை சொல்லாமல் சொல்லியது. தான் சில ஆண்டுகளுக்குமுன் நிதி நிறுவனம் தொடங்கிய தாகவும், அதில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடனாளி யாகிவிட்ட தாகவும் தெரிவித்தார். கடனிலிருந்து விடுபட பரி காரம் தேடி வந்திருந்தார். திரிக்கனிக்காடு பகவதியை வழிபட்டபின், பிரசன்னம் துவங்கியது.

சோழி லக்னாதிபதி ஆறாமிடத்தில் பகைபெற்று, தீய கிரகங்களின் சேர்க்கை பெற்றும் இருந்ததால் ஜாதகருக்கு கடன் தொல்லை ஏற்பட்டு வாழ்க்கையில் நிம்மதி சீர்குலைந்திருப்பது தெரிந்தது. ஆறாம் பாவாதிபதி லக்னத்தில் பரிவர்த்தனையில் இருந்ததால் கடனின் கடுமையும் அதனால் வந்த கொடுமையும் உறுதியானது. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெட்டது. திருவாரூர், திருச்சேறை திருத்தலத்தில் ருண விமோசனரை செவ்வாய்க் கிழமை செவ்வாய் ஹோரை யில் வழிபட்டு பரிகார பூஜை செய்தால் கடனிலிருந்து விடுபடலாமென்ற பரிகாரம் சொல்லப் பட்டது. பரிகாரம் பலனளித்தது. புதுவாழ்வு மலர்ந்தது.

Advertisment

KJ

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒரு தனிப்பட்ட பாவமோ கிரகமோ எந்த பலனையும் தரமுடியாது. கூட்டு கிரகங்களும், தொடர்புடைய பாவங்களும் சேர்ந்தே பலன்களைத் தீர்மானிக்கின்றன. ஒரு பாவத்தை இயக்கும் இயக்கத்தைத் தடைசெய்யும் மற்ற பாவங்களை ஆராய்வதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. ஒரு வாகனம் பயணப்படும்போது அதை இயக்கும் சக்தியாகிய எரிபொருள், வாகனத்தை ஓட்டுபவர், வாகனம் செல்லும் சாலையின் தன்மை எனும் மூன்று காரணிகள் அந்த வாகனத் தின் இயக் கத்தை உறுதி செய்யும்.

வாகனத்தில் ஏற்படும் பழுது, வாகன ஓட்டி யின் கவனக் குறைவு, சாலை யில் ஏற்படும் தடை போன்றவை வாகன இயக்கத்தைத் தடைசெய்யும். அதுபோல் ஒரு பாவம் அல்லது கிரகத்தின இரண்டு, நான்கு மற்றும் பதினொன்றாம் பாவங்களே, அந்த பாவத்தின் இயக்கத்திற்கு உதவும் "அர்கலா' எனப்படும். இயக்கத்தைத் தடுக்கும் மூன்று, பத்து, பன்னிரண்டாம் பாவங்கள் "விரோத அர்கலா'. "அர்கலா', "விபரீத அர்கலா', "விரோத அர்கலா' ஆகியவற்றின் சாதக- பாதகத்தைப் பொருத்தே, பரிகாரங்களைக் காணமுடியுமென்பதே கேரள ஜோதிடர் களின் கருத்து.

திருமண தோஷம் நீங்குமா? கேள்வி: என் மகளின் திருமணம், முகூர்த்த நேரத்தில் தடை ஏற்பட்டு நின்று விட்டது. குடும்பப் பிரச்சினை தீருமா? தடைப்பட்ட திருமணம் நடக்குமா? அதற்குப் பரிகாரம் உண்டா?

-சுந்தரராஜன், வேலூர்.

(எண்- 87; திருவோணம்- 3; நட்சத்திராதிபதி- சந்திரன்; ராசியாதிபதி- சனி.)

* சோழி லக்னத்தின், நட்சத்திராதிபதியாகிய சந்திர னும் பிரசன்ன லக்னமும் ஆறிலிருப்பது திருமணத் தடையை உறுதிப்படுத்துகிறது.

* களத்திர ஸ்தானாதிபதி யாகிய சந்திரன், ஆறாமிடத்திலிருப்பது, திருமணத்தில் வந்த தடையையும், முறிவையும் காட்டுகிறது.

* களத்திர ஸ்தானத்தை செவ்வாயும், சனியும் ஏழாம் பார்வையால் பாதிக்கின்றன.

* ஐந்தாம் வீட்டில் ராகு இருப்பதால், எந்தவொரு செயலாக இருந்தாலும் அது முதலில் தோல்வியடைந்து, கடும் முயற்சிக்குப் பின்பே வெற்றி யைத் தரும்.

* பதினொன்றாமிடத்தில் இருக்கும் கேது உற்றார்- உறவினரின் மனக் கசப்பைக் காட்டுகிறது.

* ஒன்பதாம் வீட்டதிபதி நீசமடை வதால், முன்னோர்களுக்கு செய்யவேண்டிய நீத்தார் கடன், முறையாகச் செய்யப்படவில்லை என்பதைத் தெரிவிக் கிறது.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமையில் பட்டீஸ்வரம் துர்க்கை யம்மன் கோவிலுக்குச் சென்று, தோஷம் நீங்க பூஜைகள் செய்யலாம். பூஜைக்குமுன்பு துர்க்கையம்மனுக்கு திருவிளக்கு வைத்து, அந்த விளக்கில் ஐந்து திரியிட்டு முக்கூட்டு எண்ணெயாக நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி பின் அதை ஏற்ற வேண்டும்.

தஞ்சை- கத்திரி நத்தம் காளஹஸ்தீஸ்வரரை வழி பட்டால் திருமணத்தடை நீங்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636