தவனின் ஒளியால் உலகைக் காணுக மனிதன், எதன் ஒளியில் ஆதவனைக் காண்கிறான்? சூரியனின் ஒளியால் மட்டுமே சூரியனை தரிசிக்க முடியும். தானே தன்னைக் காட்டிக்கொள்வதே ஞானம். சுய சிந்தனை மற்றும் ஆத்ம ஞானத்தின் காரகனாக விளங்குவது சூரியனே. ஒரு ஜாதகத்தில் சூரியன் வலிமையிழந்து, செயலற்ற நிலையில் இருந்துவிட்டால், அந்த ஜாதகம் மற்ற விஷயங் களில் எத்தனை பலம் மிகுந்ததாக இருந்தாலும் கூட, அவர் தைரியமற்றவராகவும், ஆத்ம பலமற்றவராகவும், எதையும் எதிர்கொள்ளும் திறன் இல்லாதவராகவும், முன்னோர்கள் ஆசிர்வாதத்தை பெறாத வர்களாகவும் இருப்பார்கள். சுய சிந்தனை இல்லாதவர் மண் பாவைக்கொப்பானவர் என்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து.

ஒளியிழந்த கண்களும், கலையிழந்த முகமும் உறவாட, சோர்வுடன் பிரசன்னம் பார்க்க வந்தார் ஒரு இளைஞர். தனக்கு, இருமுறை திருமணமாகி விவாகரத்தில் முடிந்துவிட்டதென்று சொல்லி வருந்தினார்.

அதன் காரணத்தையும், அதற்கான பரிகாரத்தையும் அறியவே பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். ஆழியூர் பகவதியைத் தொழுது, பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

பிரசன்ன லக்னத்திற்கு ஏழில் சூரியன் இருந்ததால், தன்னம் பிக்கைக் குறைவே பிரச்சினைக் குக் காரணமென்பது தெளிவானது. சூரியன் துலாத்தில் கேதுவோடு கூடி கிரகண தோஷத்தைக் காட்டியதால், இல்வாழ்க்கை இருண்டதென்பதும் புரிந் தது. சூரிய தோஷ நிவர்த்திக்கு திருமங்கலக்குடி சென்று பிராண நாதேஸ்வரரை வணங்கி, அதன்பிறகு மருத்துவக்குடி, (ஆடுதுறை) சூரியனார் கோவிலுக்குச் சென்று வழிபட்டால், நற்பலன் கிடைக்குமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. ஆயிரம் கரங்களால், உலகத்திலுள்ள எல்லா உயிர்களையும் வாழ்விக்கும் சூரியனின் அருளால், தோஷம் நீங்கியது. பிரசன்னம் பார்க்கவந்தவரின் வாழ்க்கை தாமரைபோல் மலர்ந்தது.

Advertisment

dd

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒருவரின் வாழ்க்கை, முயற்சிக்கு உட்பட்ட செயல்கள், விருப்பத்திற் கேற்ற தேர்வு, கட்டுப்படாத தன்னிச்சையான நிகழ்வுகள் எனும் மூன்று பகுதிகளைக் கொண்டது. இவற்றை பகுத்தாராய்வதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. முயற்சிக்கு உட்பட்ட செயல்களில் எந்த அளவுக்கு வெற்றிபெறுவார் என்பதை, திறமை யைத் தீர்மானிக்கும் சூரியனுக்கும், மனவோட்டத்தைச் சுட்டிக்காட்டும் சந்திரனுக்குமுள்ள தொடர்பினைக் கொண்டே அறியமுடியும். அதாவது, ஜனன காலத்து பட்சம், திதி, யோகம், கரணத்தைக்கொண்டே அறியலாம். வாழ்க்கைத் துணை, நட்புபோன்ற, விருப்பத்திற்கேற்ற தேர்வு சரியாக அமையுமா என்பதை, விதியை நிர்ணயிக்கும் லக்னத்திற்கும், சந்திரனுக்குமுள்ள இணக்கத்தைக் கொண்டும், சுவாசித்தல், உடல் உள்ளுறுப்புகளின் தன்னிச்சையான இயக்கங்களை, லக்னத்திற்கும், சூரியனுக்கும் அமைந்திருக்கும் ஒத்திசைவைக் கொண்டும் அறியலாம் என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

செய்வினை தோஷம் தீருமா?

கேள்வி: எனக்கும், என் பங்காளிகளுக்கும் பாகப்பிரிவினையில் தகராறு ஏற்பட்டதால், நான் செய்வினை தோஷத்திற்கு ஆளாக்கப்பட்டுவிட்டேன். செய்வினை தோஷம் தீருமா? அதற்குப் பரிகாரம் உண்டா?

-கார்த்திக், கும்பகோணம்.

(எண்: 49; ஹஸ்தம்- 1; நட்சத்திராதிபதி- சந்திரன்; ராசியாதிபதி- புதன்.)

kj

*சோழி லக்னத்தின் நட்சத்திராதி பதியாகிய சந்திரன் எட்டிலிருப்பதும், கேதுவின் சாரத்திலமர்ந்ததும் செய்வினை யால் வந்த பிரச்சினையை உறுதிப்படுத்து கிறது.

* ராசியாதிபதியாகிய புதன் நீசம் பெற்றிருப்பது, சோதனையான கால கட்டத்தைக் காட்டுகிறது.

* பாக்கிய ஸ்தானத்திலிருக்கும் ராகு, மாந்திரீகத்தால் ஜாதகருக்கு தெய்வத்தின் அருள் தடைப்பட்டுப் போனதை உறுதி செய்கிறது.

* ஐந்தாம் வீட்டில் சனி, செவ்வாயின் இணைவும் தோஷத்தின் கடுமையைக் காட்டுகிறது.

* சோழி லக்னத்தின் ஒன்பதாமிடத்தில் ராகு அமர்வது, தந்தைவழி உறவினரின் பகையே இதற்குக் காரணமென்பதைத் தெரிவிக்கிறது.

பரிகாரம்

* குணசீலம் சென்றுவர பாதிப்பு கள் குறையும். அமாவாசையில், மேல்மலைய னூரில் பரிகார பூஜை செய்தால் செய்வினை தோஷம் நீங்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636