துளையிடப்படாத மூங்கில் இசைப்பதில்லை. சுடப்படாத பொன் ஒளிர்வதில்லை. உளியின் வ-யை உணராத கல் சிலையாவதில்லை. அறிவைத் தரும் அனுபவமே வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. கேதுவும் சனிபகவானும் படிப்பிணை தரும் அனுபவத்தால் முன்னேற்றத்தை உருவாக்குகிறார்கள். கசப்பான மருந்து நோயை குணமாக்குவதுபோல, துன்பியல் நிகழ்வுகளே வளமான எதிர்காலத்தைத் தருமென்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து.

பிரசன்னம் பார்க்கவந்தவர் நடைதளர்ந்து, முகம் சோர்ந்திருந்தார். தான் கடந்த ஏழாண்டுகளாக தோல்வியை மட்டுமே சந்தித்து வருவதாகவும், அதி-ருந்து மீண்டுவருவதற்கான வழியைத் தேடியே பிரசன்னம் பார்க்க வந்திருப்பதாகவும் தெரிவித்தார். திரிச்சாம்பரம் பகவதியை வணங்கி பிரசன்னம் துவங்கியது.

kj

Advertisment

பிரசன்ன லக்னம் மக நட்சத்திரத்தில் அமைந்தது. லக்னத்தில் சந்திரனும் சனி பகவானும் சஞ்சரித்தார்கள். சதயத்திலிருக்கும் செவ்வாயின் பார்வையும் துன்பத்திற்கு வலு சேர்த்தது. பிரசன்னம் பார்க்க வந்தவரின் தோல்வியைப் பிரதிபலித்தது. பிரசன்னம் பார்க்கவந்தவர். ஏழரையாண்டு சனிபகவானின் தாக்கத்திலுள்ளார் என்பது தெளிவானது. சனிக்கிழமையன்று திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி சனிபகவானை வணங்கி எள் தீபத்தை ஏற்றி வழிபடவேண்டும் என்னும் பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரம் நிறைவேறியது. சோதனைகளைத் தந்து, பக்தர்களைத் தடுத்தாட்கொள்ளும் சனிபகவானின் அருளால் வாழ்க்கை வளமானது.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

சில ஜாதங்களில் ராஜயோகங்கள் காணப்பட்டாலும் அந்த யோகங்களையுடைய பயனைப் பெறாமல் ஜாதகர் வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாடுகிறார். கிரக சேர்க்கைகளும் பாவ இணைவுகளுமே யோகங்களாக் கருதப்படும். யோகத்தைத் தரும் யோகக்காரகன் லக்னத்திற்கு சாதகனா? பாதகனா என்பதையறிந்து அந்த யோகத்தின் பலனைக் கூறுவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. ஒரேநாளில் பிறக்கும் இரண்டு குழந்தை களுக்கு ஓரேவிதமான யோகங்கள் அமைய வாய்ப்புண்டு. ஆனாலும் இரு குழந்தைகளுக்கும், ஒரேவிதமான வாழ்க்கை அமைவதில்லை. ஒரு ஜாதகர் செல்வந்தராகிறார்; மற்றவர் வறுமையில் வாடுகிறார். உதாரணத்திற்கு பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றாகிய ஹம்ச யோகம் குருபகவான் ஆட்சி வீடுகளிலும், உச்ச வீட்டிலும் அமரும் போது உருவாகும். மிதுன ராசிக்கு பாதகனாகவும் மாரகனாகவும் குரு அமைவதால், மிதுன லக்ன ஜாதகருக்கு ஹம்ச யோகத்தின் பலன் வாய்க்காமல் போகும். ஒரு யோகத்தை பரிசீலிக்கும்போது அந்த யோகத்தைத் தரும் யோகக்கார கனுக்கும் லக்னத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய வேண்டுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

தீய கனவுகள் மறையுமா?

கேள்வி: சில மாதங்களாக என்னை யாரோ துரத்துவது போலவும், எதோவொன்றை இழந்ததைப் போலவும் கனவுகள் வருகின்றன. தினமும் உறக்கத்திலிருந்து அலறியபடியே எழுந்திருக்கிறேன். தீய கனவுகள் மறையுமா? அதற்குப் பரிகாரமுண்டா?

-வேணுகோபால், காங்கேயம்.

(எண்- 45; உத்திரம்- 1; நட்சத்திராதிபதி- சூரியன்; ராசியாதிபதி- சூரியன்.)

Advertisment

* சோழி லக்னாதிபதியும், நட்சத்திராதிபதியாகிய சூரியன் நீசத்திலிருப்பதும், ராகுவின் சாரத்திலமர்ந்து, ராகு வால் பார்க்கப்படுவதும், கனவினால் வந்த பிரச்சினையை உறுதிப்படுத்துகிறது.dd

* கனவுகளுக்குக் காரகனாகிய பன்னிரண்டாம் வீட்டதிபதி சந்திரன் எட்டிலிருப்பது, தீய கனவுகளைக் காட்டுகிறது.

* பிரசன்ன லக்னம், ராகுவின் சதய நட்சத்திரத்தில் அமைந்தது நிழல்போன்ற கனவுக்குக் காரணமாகிறது.

* பன்னிரண்டாமிடத்தை சனி பகவான் பார்வையிடுவதால் வலியும் வேதனையும் மிகுந்த கனவுகள் உண்டாகிறது.

* சோழி லக்னத்தின், பாதக ஸ்தானத்தில் ராகு அமர் வது கர்மவினையின் பலன் என்பதைத் தெரிவிக்கிறது.

பரிகாரம்

ஆஞ்சனேயர் வழிபாடு கனவுகள் வரவிடாமல் தடுக்கும். "அனுமன் சாலிசா' ஸ்தோத்திரத்தை உறங்கச் செல்வதற்குமுன் சொன்னால் அச்சம் அகலும்.

மாமல்லபுரம் தல சயனப் பெருமாளை வழிபட்டால் கர்ம வினையால் வரும் தொல்லை நீங்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636