கேரள ஜோதிட ரகசியங்கள்! (106)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-106

காற்றிலாடும் சுடர், ஒளிதராது. ஆற்றிலாடும் ஓடம் கரைசேராது. ஆனால் மனவுறுதி, மலைகளையும் தகர்த்தெறியும்.

வாழ்க்கையென்பதே மனவெளியின் வெளிப்பாடு தான். மனோகாரகனாகிய சந்திரனுக்கும், ஆத்மகார கனாகிய சூரியனுக்குமுள்ள தொடர்பே ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மாணிக் கிறது. அதனாலேயே ஒருசிலரின் வாழ்க்கை அமாவாசையாக இருண்டும், வேறுசிலரின் வாழ்க்கையோ பௌர்ணமி யாகவும் பரிமளிக்கிறதென்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் கூற்று. பிரசன்னம் பார்க்க வந்தவரின் சோபையிழந்த முகத்தில், கவலை யின் நிழல் படர்ந்திருந்தது. தனக்கு செல்வம், செல்வாக்கிருந்தும், மனதில் வெறுமையும் விரக்தியுமே நிறைந்திருப்பதாகச் சொல்லி வருத்தப்பட்டார். அதன் காரணத்தையறியவே பிரசன்னம்

காற்றிலாடும் சுடர், ஒளிதராது. ஆற்றிலாடும் ஓடம் கரைசேராது. ஆனால் மனவுறுதி, மலைகளையும் தகர்த்தெறியும்.

வாழ்க்கையென்பதே மனவெளியின் வெளிப்பாடு தான். மனோகாரகனாகிய சந்திரனுக்கும், ஆத்மகார கனாகிய சூரியனுக்குமுள்ள தொடர்பே ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மாணிக் கிறது. அதனாலேயே ஒருசிலரின் வாழ்க்கை அமாவாசையாக இருண்டும், வேறுசிலரின் வாழ்க்கையோ பௌர்ணமி யாகவும் பரிமளிக்கிறதென்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் கூற்று. பிரசன்னம் பார்க்க வந்தவரின் சோபையிழந்த முகத்தில், கவலை யின் நிழல் படர்ந்திருந்தது. தனக்கு செல்வம், செல்வாக்கிருந்தும், மனதில் வெறுமையும் விரக்தியுமே நிறைந்திருப்பதாகச் சொல்லி வருத்தப்பட்டார். அதன் காரணத்தையறியவே பிரசன்னம் பார்க்க வந்ததாகத் தெரிவித்தார். மறவன்சேரி பகவதியைத் தொழுது பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

பிரசன்ன லக்னத்திற்கு எட்டில் சனி, சந்திரன் சேர்க்கையும், சந்திரன் நீசகதியும் பெற்றிருந்ததால், மனதின் குழப்பத்தை அறியமுடிந்தது. லக்னாதிபதியும், திதி சூன்ய ராசியிலிருந்ததால் சஞ்சல மனதின் கடுமையைக் காணமுடிந்தது. திருச்சி- திருப்பட்டூரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், வியாழக் கிழமை குரு ஹோரையில் பூஜைசெய்தால், தலைவிதி மாறுமென்னும் பரிகாரம் சொல்லப்பட்டது. திருப்பட்டூர் சென்றதால், நல்லதொரு திருப்பம் நிகழ்ந்தது. பிரம்மனின் தலை யெழுத்தையே மாற்றிய சிவ பெருமானின் அருளால், பாலைவனமாக இருந்த வாழ்க்கை சோலைவனமாக மாறியது.

dd

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

பிரசன்னம் பார்க்க வந்தவரின் கேள்வி நேர்மையானதா என்பதைப் பரிசீலித்தபிறகு பிரசன்னத்தைத் தொடங்குவதே, கேரள ஜோதிடத்தின் சிறப்பு. மனதில் நினைத்தது ஒன்றாகவும், கேட்கும் கேள்வி வேறொன்றாக வும் இருந்தால் பலன் சரிவராது. தெய்வத்தின் குரலாக மதிக்கப்படும் பிரசன்ன ஆரூடத்தை சந்தேகத்துடன் பரிட்சித்துப் பார்க்கும் எண்ணம் கொண்டவருக்கும் அது பலிதம் தராது.

லக்னத்தில் சந்திரனும், கேந்திரத்தில் சனியும், அஸ்தங்கதமான புதனும் அமையும் காலத்தில் கேட்கப் படும் கேள்வி குறையுடையது. செவ்வாயும் புதனும் சந்திரனுக்கு சமசப்தமத்திலிருந்து, முழு பார்வையையும் செலுத்தினாலும் கேள்வியில் பிழையுண்டு. லக்னத்தில் பாவ கிரகங்கள் அமர்ந்து குருவின் பார்வையைப் பெறா விட்டாலும், கேள்வி கேட்பவரின் தவறான எண்ணத்தைப் புரிந்துகொள்ளமுடியும். குருவும் புதனும் பிரசன்ன லக்னத் திற்கு பாதகத்திலோ, ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடங் களிலோ இருந்தாலும், கேள்வியின் தன்மை சந்தேகத் திற்குரியது. பிரசன்ன லக்னம், மூன்று மற்றும் எட்டாமிடத்துத் தொடர்பிலிருந்தாலும், கேட்கப்படும் கேள்வி உண்மைக்குப் புறம்பானதென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்குமா?

கேள்வி: நான் அரசுப் பணியில் சேர விரும்புகிறேன். அரசுப் பணிக்கான தேர்வில் வெற்றிபெற முடியுமா?

-மாரியப்பன், திருநெல்வேலி.

(எண்- 14; ரோகிணி- 2; நட்சத்திராதிபதி- சந்திரன்; ராசியாதிபதி- சுக்கிரன்.)

* சோழி லக்னத்தின் மூன்றாமிடமாகிய உபஜெய ஸ்தானத்தில் பிரசன்ன லக்னம் அமைவது வெற்றியைக் காட்டுகிறது.

* குருவும், ஐந்தாம் வீட்டின் அதிபதியாகிய புதனும் இணைந்து பத்தாமிடத்தில் இருப்பதால் அரசு வேலை கிடைக்கும்.

* ராஜகிரகமாகிய சூரியன் பத்தாமிடத்திலிருப் பதால், அதிகாரம்மிக்க அரசுப்பதவி கிடைக்க வாய்ப் புண்டு.

* சோழி லக்னம், சந்திரனின் ரோகிணி நட்சத் திரத்தில், உச்ச வீட்டில் விழுவது வெற்றியை உறுதி செய்கிறது. லக்னத்தில் ராகு இருப்பதால் தடை களுக்கும், போராட்டத்திற்கும்பின் வெற்றி கிடைக்கு மென்பதை சுட்டிக்காட்டுகிறது.

* கும்பத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் அரசுப் பணி கிடைக்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala270123
இதையும் படியுங்கள்
Subscribe