Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (100)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-100

மான்கள் புற்களாலும், மீன்கள் நீராலும், சான்றோர் அமைதியான மனதாலும் பிறரைத் துன்புறுத்தாது வாழ்ந்தா லும், காரணமின்றி அவர்களுக்கும் எதிரிகள் முளைக்கிறார் கள். ஒழுக்கமான வாழ்க்கை வாழ்பவர்களும், சிலநேரங்களில் காரணமறியாமல் பாதிக்கப்படுகிறார்கள். முன்வினைப் பயனைச் சுட்டிக்காட்டும் கர்ம ஸ்தானமாகிய பத்தாம் வீட்டிற்கு திரிகோணத்தில் அமைவதே, சத்ரு ஸ்தானமாகிய ஆறாமிடம். கடன், விரோதம், நோய் போன்றவை கர்மாவின் விளைவே என்பதை ஒப்பிட்டுப் பார்த்தார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

கவலையும் வருத்தமும் கவ்விய முகத்துடன் ஒரு தம்பதி பிரசன்னம் பார்க்க வந்தனர். தங்கள் மகளுக்கு ஐந்து வயதாகியும் பேச்சு வரவில்லையென்ற வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார்க

மான்கள் புற்களாலும், மீன்கள் நீராலும், சான்றோர் அமைதியான மனதாலும் பிறரைத் துன்புறுத்தாது வாழ்ந்தா லும், காரணமின்றி அவர்களுக்கும் எதிரிகள் முளைக்கிறார் கள். ஒழுக்கமான வாழ்க்கை வாழ்பவர்களும், சிலநேரங்களில் காரணமறியாமல் பாதிக்கப்படுகிறார்கள். முன்வினைப் பயனைச் சுட்டிக்காட்டும் கர்ம ஸ்தானமாகிய பத்தாம் வீட்டிற்கு திரிகோணத்தில் அமைவதே, சத்ரு ஸ்தானமாகிய ஆறாமிடம். கடன், விரோதம், நோய் போன்றவை கர்மாவின் விளைவே என்பதை ஒப்பிட்டுப் பார்த்தார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

கவலையும் வருத்தமும் கவ்விய முகத்துடன் ஒரு தம்பதி பிரசன்னம் பார்க்க வந்தனர். தங்கள் மகளுக்கு ஐந்து வயதாகியும் பேச்சு வரவில்லையென்ற வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். தாங்கள் எவருக்கும் எந்த தீங்கும் செய்ததில்லை; ஆனாலும் இதுபோன்ற தண்டனை ஏன் வந்தது என்பதை பிரசன்னம்மூலம் அறிய விரும்பினர்.

நெல்லுவாயில் பகவதியை வணங்கி பிரசன் னத்தை அமைத்தார் கிருஷ்ணன் நம்பூதிரி.

பிரசன்ன ஜாதகத் தில், புத்திர காரகன் குரு புதனின் வீடா கிய மிதுனத்திலும், புத்திர ஸ்தானாதிபதி நீசத்திலிருந்த தாலும் ஊனமுற்ற குழந்தை யைக் குறித்து மேற்கொள்ளப் பட்ட பிரசன்னம் என்பது உறுதியானது.

Advertisment

kj

பித்ரு காரகனாகிய சூரியன் ஒன்பதாம் வீட்டில், ராகுவோடு தொடர்புபெற்றதால், பித்ரு சாபத்தால் உண்டானது என்பது தெளிவாக்கப்பட்டது. லக்னாதிபதியும் வலுவிழந்திருந்ததால், பரிகாரத்தாலும் தெய்வத்தின் கருணையாலுமே இந்தப் பிரச்சினை முடிவுக்கு வருமென்று சொல்லப்பட்டது. தோஷத்தில் மிகக்கொடிய தோஷம் பித்ரு தோஷம். திருப்புல்லாணி சென்று தில ஹோமம் செய்தால் பலன் உண்டாகுமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரத்தால் பலன் கிடைத்தது.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒரு ஜாதகருக்கு ஏற்பட்ட நோய், எந்தக் காரணத்தினால் வந்தது என்பதை ஆறாம் வீட்டையும், அதன் பாதகாதி பதியையும்கொண்டு ஆராய் வதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. ஆறாம் பாவத்தில் புதன் வலுப்பெற்று, பாதகத்தில் சனி ஆட்சிபெற்றால் செய்வினைக் கோளாறு என்றறியலாம். ஆறாமதிபதி வலுப்பெற்று, சந்திரன், ராகுவுடன் கூடினால் உணவினால் வந்த பாதிப்பைக் குறிக்கும். இருபத்து இரண்டாவது திரேகாணத்தின் அதிபதியும், ஆறாமதிபதியும் தொடர்பு கொள்ளும் காலத்தில், ஜாதகருக்கு மரணத்திற்கொப்பான கண்டம் உண்டாகும். தசாநாதனுக்கு ஆறு, எட்டு, பன்னிரண்டில் புக்திநாதன் ஜனன ஜாதகத்திலமைந்து, கோட்சாரத்திலும் அதே அமைப்பைப் பெறும் காலத்தில் கடுமையான நோய் உண்டாகுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

நிரந்தரத் தொழில் அமையுமா?

கேள்வி: நான் கடந்த ஐந்து வருடங்களில், பல ஏஜென்சி தொழில் களில் ஈடுபட்டேன். கஷ்டமும் நஷ்ட மும்தான் பலனாகக் கிடைத்தது.

dd

எனக்கு நிரந்தரத் தொழில் அமையுமா?

-தாமோதரன், கோவை.

(எண்- 85; திருவோணம்- 1; நட்சத்திராதிபதி- சந்திரன்; ராசியாதிபதி- சனி.)

* சோழி லக்னத்தின் பத்தாமிடம் துலா ராசியில் அமைவது, தொழிலில் சிறப் பான எதிர்காலம் உண் டென்றா லும், சனியின் பார்வையால் வரும் தடைகளைக் காட்டு கிறது.

* பத்தாமிடத்தில் தனித்த கேது இருப்பதும் பாதகமே.

* பதினொன்றாமிடத்தில் சூரியன், சுக்கிரன் இருந்தால், வரவுக்கு மேல் செலவுசெய்ய வைக்கும். உங்கள் முயற்சிக்கான பலனை மற்றவர்கள் அனுபவிப்பார்கள்.

* தரகு வியாபாரத்தின் கார கனாகிய புதன், பன்னிரண்டாம் இடத்திலிருப்பது விரயத்தைக் காட்டுகிறது.

* பிரசன்ன காலத்து ஹோரா நாதனாகிய சுக்கிரன் பாதக ஸ்தானத்திலிருப்பதும் பின்னடைவே.

* குருபகவான் மேஷ ராசியில் சஞ்சரிக் கும்போது நிரந்தரத் தொழிலில் வெற்றி யுண்டு.

பரிகாரம்

புதிய தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பாக திருச்சானூர் சென்று அவர்மேல் மங்கைத் தாயாரை வழிபட்டால் முன்னேற்றம் ஏற்படும்.

பௌர்ணமியில் திருவண்ணாமலை கிரிவலம் செய்தால் தடைகள் அகலும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala161222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe