அந்த காலை நேரத்தில் பிரசன்ன ஜோதிடர் கிருஷ்ணன் நம்பூதிரி யைக்காண ஒரு நடுத்தர வயதுடைய தம்பதி வந்திருந்தனர். புன்னகை யுடன் வணங்கி தாங்கள் கொண்டுவந்திருந்த காணிக்கைப் பொருட்களை சமர்பித்தனர். தாமரை இலையில் ஒட்டாது உருளும் நீர்த் திவலைபோல் அவர்களின் புன்னகை மனதோடு பொருந்தவில்லை. அதன் பின்னால் சோகம் தெரிந்தது. தங்களுக்குத் திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை என்ற பீடிகையுடன் பேச்சைத் துவக்கினார்கள். பல ஆலயங்களுக்கும் சென்று வழிபாடு கள் நடத்தியும் இன்றுவரை பலனில்லை என்று அங்கலாய்த்தார்கள்.
ஆலயம் தொழுவது சாலச்சிறந்தது என்றாலும், அது மட்டுமே தீர்வாகாது. மணி, மந்திரம், ஔஷதம் ஆகிய மூன்றில் எதனால், இந்தப் பிரச்சனை தீரும் என்பதையறிய வேண்டுமென்று கூறிய ஜோதிடர், தன் பிரார்த்தனையைத் தொடங்கினார். சோழிப்பிரசன்ன லக்னத்தையும் ஏழாம்பாவத்தையும் கொண்டு பீஜஸ்புடத்தையும், ஷேத்திர ஸ்புடத்தையும் கணித்தார். தம்பதிகள் புத்திர பாக்கியத்தைப் பெறுவதில் தடையில்லை என
அந்த காலை நேரத்தில் பிரசன்ன ஜோதிடர் கிருஷ்ணன் நம்பூதிரி யைக்காண ஒரு நடுத்தர வயதுடைய தம்பதி வந்திருந்தனர். புன்னகை யுடன் வணங்கி தாங்கள் கொண்டுவந்திருந்த காணிக்கைப் பொருட்களை சமர்பித்தனர். தாமரை இலையில் ஒட்டாது உருளும் நீர்த் திவலைபோல் அவர்களின் புன்னகை மனதோடு பொருந்தவில்லை. அதன் பின்னால் சோகம் தெரிந்தது. தங்களுக்குத் திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை என்ற பீடிகையுடன் பேச்சைத் துவக்கினார்கள். பல ஆலயங்களுக்கும் சென்று வழிபாடு கள் நடத்தியும் இன்றுவரை பலனில்லை என்று அங்கலாய்த்தார்கள்.
ஆலயம் தொழுவது சாலச்சிறந்தது என்றாலும், அது மட்டுமே தீர்வாகாது. மணி, மந்திரம், ஔஷதம் ஆகிய மூன்றில் எதனால், இந்தப் பிரச்சனை தீரும் என்பதையறிய வேண்டுமென்று கூறிய ஜோதிடர், தன் பிரார்த்தனையைத் தொடங்கினார். சோழிப்பிரசன்ன லக்னத்தையும் ஏழாம்பாவத்தையும் கொண்டு பீஜஸ்புடத்தையும், ஷேத்திர ஸ்புடத்தையும் கணித்தார். தம்பதிகள் புத்திர பாக்கியத்தைப் பெறுவதில் தடையில்லை என்றறிந்து திருப்தியடைந்தார். புத்திர பாக்கியத்தில் தடையிருந்தால், சந்தான ஸ்புடத்தை மட்டும் கணக்கிட்டால் போதாது என்பதை அனுபவத்தால் அறிந்திருந்த கிருஷ்ணன் நம்பூதிரி, ரோகப் பிரசன்னத்தைத் துவங்கி னார். நவாம்சத்தில் அந்தப் பெண்ணுக்கு விருச்சிகத்தில் செவ்வாயும், சனியும் கூடியிருந்து, அது அறுபத்து நான்காவது நவாம்சமாக அமைந்ததால் கருப்பையில் கழலை இருப்பது உறுதியானது. மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்தார் ஜோதிடர். மருத்துவப் பரிசோதனையில் ஜோதிடரின் கூற்று உறுதி யானது. அந்த தம்பதிகள் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவேயில்லை. பிரசன்ன ஆரூடம் எதையும் காட்டித்தரும் மாயக்கண்ணாடி என்றால் அது மிகையாகாது.
(கொடுக்கப்பட்ட பிரசன்ன எண்- 53; சித்திரை- முதல் பாதம்).
பொதுவாக வருடப்பலன்கள் ராசிவாரியாகக் கணிக்கப்படுகின்றன. ஒரு ராசியை மட்டும் வைத்து ஆண்டுபலன் கணிப்பது துல்லிய மானதாகாது. கேரள ஜோதிடத்தில் வருடப்பலனைக் காணும்முறை மிகவும் சிறப்பானது. "தஜகா' முறையில் ஒவ்வொரு ஜாதகத்துக்கும் பிறந்த ஆண்டு முதலாய் கணக்கிட்டு "முந்தா' லக்னத்தைக் குறித்தபின், ஜனன ஜாதகக் கோள்களின் நிலையையும், கோட்சாரக் கோள்களின் சஞ்சாரத்தையும் ஒப்பிட்டு நோக்கிப் பலன் காண்பதே துல்லியமானது. கேரள ஜோதிடர்கள் வருடப்பலன் காண்பதில் இந்த முறையை ஒட்டியே அஷ்டகவர்க்கக் கணிதத்தைக் கையாள்வதால் வெற்றி சாத்தியமாகிறது.
வியாபாரம் திரும்பவும் கைகூடுமா?
கேள்வி: நான் கூட்டு வியாபாரம் செய்துவந்தேன். என்னுடைய வியாபாரத்தின் பங்குதாரர் கொடுத்த பிரச்சினையால் வியாபாரம் முடங்கிவிட்டது.
அவருக்கும், எனக்கு முள்ள கொடுக்கல்- வாங்கல் பிரச்சினை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது. என் சுயதொழிலை மீண்டும் தொடங்க முடியுமா?
-ராஜகோபாலன், குடந்தை. கேரள ஜோதிடத்தின் சிறப்பு
* திரிசாம்சத்தைக் கொண்டு, ஸ்த்ரீ ஜாதகத்தை ஆராய்வது கேரள ஜோதிடத் தின் சிறப்பாகிறது.
* அபிஜித் நட்சத்திரத்தின் முக்கியத் துவத்தையும், அபிஜித் முகூர்த்தத்தின் விசேஷத் தன்மையையும் அறிந்து பரிகாரங்களை வடிவமைப்பது கேரள ஜோதிடத்தின் பெருமையைப் பறைசாற்றுகிறது.
* "மந்திர ஸ்வீகாரம்' எனப்படும் மந்திர உபதேசம் பெறத்தகுதியான சமயத்தையறிய மாதம், திதி, கரணத்தை இணைத்துக் கணக்கிடும்முறை, கேரள ஜோதிடத்தின் உயர்வினை உணர்த்துகிறது.
* சோழி லக்னம் நின்ற இடம் கன்னி, காலபுருஷனின் ஆறாம்பாவம். அதிலிருந்தே இது சண்டை, பண விஷயமான கேள்வி என்று தெரிகிறது.
* சோழி லக்னம், உதய லக்னம் இரண்டிற்கும் 6, 8 தொடர்பு இருப்பது லக்ன வேதையாக இருப்பதால், இங்கு சத்ரு தோஷம் இருப்பது தெரிகிறது, அதனால் பண சங்கடமும் உள்ளது.
* சோழி லக்னத்தில் 8-ஆம் பாவத்தில் செவ்வாய் அமர்வதும், அவர் 3, 8-ஆம் வீட்டின் அதிபதியாவதும், கொடுத்த வாக்கைக் காப்பாற்றமுடியாத நிலையைக் காட்டும். எட்டாம் வீட்டில் செவ்வாயுடன் மாந்தியும் சேர்வது, அதிகக் கெடுதலைக் காட்டுகிறது.
* சுக்கிரன் அம்சத்தில் பாதகத்தில் அமர்வது, மேலும் மேற்கண்ட பலனிற்கு வலுசேர்க்கும்.
* ஐந்தாம் அதிபதி, ஆறாம் அதிபதி இருவரும் சனியாக இருப்பதும், அவருடன் 7-ஆம் அதிபதி குரு சேர்ந்திருப்பதும், தொழிலிற்கு பாதகாதிபதி புதனே, சோழி லக்னாதி பதியாக வருவதும் தொழிலில் தொய்வு இருப்பதைக் காட்டுகிறது.
* மேலும் 5-ம், 6-ம் ஒரே கிரகமாக சனியாக இருப்பதும், அவருடன் குரு நீசமாக இருப்பதும், கடந்த காலத்தில் நண்பராகவும், பங்குதாரராகவும் இருந்தவரே தொழில் முடக்கத்துக்குக் காரணமாக இருப்பார்.
* இரண்டாம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் சுக்கிரனாக இருந்து, ஐந்து, ஆறு, ஏழாம் அதிபதி தொடர்புகொள்வதும், அம்சத்தில் சந்திரன் அஷ்டமாதிபதி தொடர்புகொண்டு கன்னி லக்னத் தில் இருப்பதும், சுக்கிரன் துலாமின் அதிபதியாக இருப்பதும் கோர்ட்வரை பிரச்சினை செல்லும் என்று தெரிகிறது.
* ஏழாம் வீட்டு அதிபதி ஐந்தாமிடத்தில் நீசமாவது, நட்பின் முறிவைக் காட்டுகிறது.
* குரு மீன ராசியில் சஞ்சரிக்கும்போது, நீதிமன்றத்தில் சாதகமான முடிவு வரும்.
* குரு அதிசாரத்தில், கும்பராசியை அடையும் காலத்தில், புதிய தொழில் முயற்சி கைகூடும்.
பரிகாரம்
* விழுப்புரம் பரிக்கல் என்ற ஸ்தலத்திலுள்ள, நரசிம்மர் வழிபாடும், ஜீவசமாதி வழிபாடும் செய்ய நான்கு மாதங்களில் ஓரளவுக்கு பிரச்சினைகள் கட்டுப்படும்.