Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (72)

/idhalgal/balajothidam/kerala-astrological-secrets-72

ருளில் கயிறு, பாம்பாகத் தோன்றும். அறியாமையே அச்சத்திற்குக் காரணம். அச்சமே துன்பத்திற்கு ஆதாரம். அச்சம் போனால் துன்பத்தில் மிச்சமில்லை. அச்ச மில்லாதவருக்கு ஆழக்கடலும் சோலை யாகும். ஒருவனுக்கு தைரியலட்சுமியின் அருளிருந்தால், அஷ்ட லட்சுமியும் அவனுள் அடக்கம். மனோகாரகனாகிய சந்திரனுக்கு, மூன்றாமிடமாகிய தைரிய ஸ்தானமும், மனவுறுதிக்குக் காரகனாகிய செவ்வாயும் பாதிக்கப்பட்டால் மட்டுமே ஒருவருக்குத் துன்பம் உண்டாகிறது. உளவியலால் உலகியலை ஆராய்ந்தார் கிருஷ்ணன் நம்பூதிரி. வருமுன் உரைத்தல் போல் வந்தது ஒரு பிரசன்னம். வெருண்ட பார்வையும், அரண்ட கண்களும், வறண்ட முகமும், பிரசன்னம் பார்க்கவந்தவரின் பயத்தைப் பறைசாற்றின. சில மாதங் களாக மனதில் இனம்புரியாத பயம் குடி கொண்டுள்ளதாகத் தெரிவித்து, பரிகாரம் வேண்டினார். செட்டிக்குளங்கரா பகவ தியை தியானம் செ

ருளில் கயிறு, பாம்பாகத் தோன்றும். அறியாமையே அச்சத்திற்குக் காரணம். அச்சமே துன்பத்திற்கு ஆதாரம். அச்சம் போனால் துன்பத்தில் மிச்சமில்லை. அச்ச மில்லாதவருக்கு ஆழக்கடலும் சோலை யாகும். ஒருவனுக்கு தைரியலட்சுமியின் அருளிருந்தால், அஷ்ட லட்சுமியும் அவனுள் அடக்கம். மனோகாரகனாகிய சந்திரனுக்கு, மூன்றாமிடமாகிய தைரிய ஸ்தானமும், மனவுறுதிக்குக் காரகனாகிய செவ்வாயும் பாதிக்கப்பட்டால் மட்டுமே ஒருவருக்குத் துன்பம் உண்டாகிறது. உளவியலால் உலகியலை ஆராய்ந்தார் கிருஷ்ணன் நம்பூதிரி. வருமுன் உரைத்தல் போல் வந்தது ஒரு பிரசன்னம். வெருண்ட பார்வையும், அரண்ட கண்களும், வறண்ட முகமும், பிரசன்னம் பார்க்கவந்தவரின் பயத்தைப் பறைசாற்றின. சில மாதங் களாக மனதில் இனம்புரியாத பயம் குடி கொண்டுள்ளதாகத் தெரிவித்து, பரிகாரம் வேண்டினார். செட்டிக்குளங்கரா பகவ தியை தியானம் செய்து பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

தைரிய ஸ்தானமாகிய மூன்றாமிடத் தில் புதன், சனி சேர்க்கைப்பெற்று சுபகிரகப் பார்வை பெறவில்லை. சனி பலமிழந்து புதனுடன் இணைந்ததாலும் மனக்கவலை, அச்சம், மனச்சோர்வு உண்டானது. விருச்சிகச் சந்திரனும், கடகச் செவ்வாயும் பரிவர்தனையானது. திருசெந்தூர் சென்று சத்ரு சம்ஹார ஹோமம் செய்தால் அச்சம் விலகுமென்ற பரிகாரம் கூறப்பட்டது. திருசெந்தூர் சம்ஹார மூர்த்தியின் அருளால் அச்சமெனும் மாயவலை நீங்கியது.

ff

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒரு கோவிலில் பூஜை, திருவிழா போன் றவை திடீரென்று நின்றுபோனால், அதன் காரணத்தை ஆராய்ந்து, பரிகாரங்களைச் செய்வதற்காகப் பார்க்கப்படுவதே தேவ பிரசன்னம். தோஷங்களை நீக்கி, கோவிலை புனிதப்படுத்தும் தேவ பிரசன்ன முறையே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. தேவ பிரசன்னத்தில் ஸ்வர்ண லக்னமும், ஐந்தாம் பாவமும் சிலா ருபத்தைக் குறிக்கும். இந்த பாவங்களில் செவ்வா யின் பாதிப்பிருந்தால், சிலையின் பிம்பத்தில் பழுதிருக்கும். ராகுவும் குளிகனும் சேர்ந்திருக்க, அசுத்தத்தால் களங்கப்பட்டிருப்பதைக் கூறலாம். சூரியன் பாதகத்திலிருக்க, சிலையின் தெய்வீகத்தன்மை குலைக்கப்பட்டிருப்பதை அறியலாம். ஒன்பதாம் பாவத்தில் அசுபர் இருக்க, கோவில் நிர்வாகத்தில் கோளாறு இருக்கும். ஏழாம் பாவத்தில் பாவிகளிருந்தால், கோவில் சொத்து களவாடப்பட்டுள்ளதைக் குறிக்குமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

திருமணம் நடக்குமா?

கேள்வி: நானும் என் அலு வலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறோம். இரு வீட்டாரும் ஒப்புக்கொண்டு விட்டார்கள். ஆனாலும் சில உறவினார்கள், இந்தத் திரு மணத்தைத் தடுக்க கலகம் செய் கிறார்கள். எங்கள் திருமணம் நடந்தேறுமா? பரிகாரம் உண்டா?

-முருகன், மதுரை.

(எண்- 99; பூரட்டாதி- 3; நட்சத்திராதிபதி- குரு; ராசியாதிபதி- சனி.)

* சோழி லக்னத்திற்கு பாதகஸ்தானமாகிய துலாத்தில் கேது அமைவதால், மணமகளின் தாய்மாமனே இந்தப் பிரச்சினைக் குக் காரணமாவதைக் காட்டுகிறது.

* சோழி லக்னமும், பிரசன்ன லக்னமும் ஆறு மற்றும் எட்டாக அமைவதால், பிரச்சினையின் தீவிரத்தை அறியமுடிகிறது.

* சனிக்கிழமை சூரிய ஹோரையில் பிரசன்னம் அமைந்ததால், இந்த திருமணத் தடைக்குக் காரணம் அந்தஸ்து, ஜாதி, மத வேற்றுமை என்பது தெளிவாகிறது.

* சோழி லக்னத்தின் அறுபத்து நான்காவது நவாம்சம் சித்திரை இரண்டாம் பாதத்தில் அமைந்து, கன்னி ராசியில் வர்க்கோத்தம மாவதால் திருமணத்தடையை உணர்த்துகிறது.

* இரண்டில் குரு, செவ்வாய் இணைந்திருப்பதால், போராட்டத்திற்குப்பிறகு சுகமான வாழ்க்கை கிடைக்கும்.

* குரு செவ்வாயுடன் மீன ராசியில் இணைவதால் குருமங்கள யோகம் அமைகிறது.

* ஏழாமதிபதி, ஐந்தாமதி பதியுடன் கூடியிருப்பதால், காதல் திருமணம் கைகூடும்.

* ஏழாமதிபதி நான்காம் வீடு எனும் கேந்திரத்தில் இருப்பதால், தன் மனைவியின்மூலம் எதிர்பார்க்கும் சுகம், இன்பம் அடைவார். குடும்ப கௌரவம் மேலோங்கும். குடும்பப் பொறுப்பான மனைவி அமைவாள்.

* இரண்டில் குருபகவான், சனியின் நட்சத்திரத்தில் சஞ்சாரிப்பதால் இன்னும் ஓராண்டு காலத்திற்கு குடும்பத்தில் குழப்பம் நிலவும்.

* பரிகாரங்களைச் செய்தால் கலகம் நீங்கி கவலை மறையும்; சுபகாரியங்கள் நடைபெறும்.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை திருப்பரங்குன்றத்தில் அருள்பாலிக்கும், முருகப் பெருமானை வணங்கி அகல் விளக்கேற்றி வழிபட்டால் தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும். வெள்ளிக்கிழமை மதுரை மீனாட்சியம்மனை வணங்குவதால் தோஷங்கள் விலகும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala100622
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe