Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (70)

/idhalgal/balajothidam/kerala-astrological-secrets-70

ண்கெட்ட கண்ணோன் கயிலைக்கு வழிசொல்வதும், எண்கெட்ட கணக்கையிட்டுத் தீர்வுக்குத் தவிப்பதும்போல், சிலர் ஜோதிடக் கணிதத் தைத் தவறாகப் புரிந்துகொள்கி றார்கள். ஊருக்கு நல்வழி காட்டவேண்டிய சிலர் செய்யும் தவறுகளால், வேத ஜோதிடம் வறுமைப்பட் டுள்ளது. இந்த சிந்தனையால் வருத்தமுற்றிருந்த கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்துக்கு வலுசேர்க்க வந்தது ஒரு பிரசன்னம். நடைப்பிணமாய், களையிழந்த முகத்துடன் வந்துசேர்ந்தார் ஒரு நடுத்தர வயதுக்காரர். தன் ஜாதகத்தில் லக்னாதிபதி எட்டாம் வீட்டிலமர்ந்து தசாபுக்தி நடத்துவதாகவும், அதனால் உயிருக்கு ஆபத்துவருமோ என்ற அச்சமுள்ளதாகவும் தெரிவித்தார். கண்ணம்புழா பகவதியம்மனை வழிபட்டு பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

சோழி லக்னத்திற்கு

ண்கெட்ட கண்ணோன் கயிலைக்கு வழிசொல்வதும், எண்கெட்ட கணக்கையிட்டுத் தீர்வுக்குத் தவிப்பதும்போல், சிலர் ஜோதிடக் கணிதத் தைத் தவறாகப் புரிந்துகொள்கி றார்கள். ஊருக்கு நல்வழி காட்டவேண்டிய சிலர் செய்யும் தவறுகளால், வேத ஜோதிடம் வறுமைப்பட் டுள்ளது. இந்த சிந்தனையால் வருத்தமுற்றிருந்த கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்துக்கு வலுசேர்க்க வந்தது ஒரு பிரசன்னம். நடைப்பிணமாய், களையிழந்த முகத்துடன் வந்துசேர்ந்தார் ஒரு நடுத்தர வயதுக்காரர். தன் ஜாதகத்தில் லக்னாதிபதி எட்டாம் வீட்டிலமர்ந்து தசாபுக்தி நடத்துவதாகவும், அதனால் உயிருக்கு ஆபத்துவருமோ என்ற அச்சமுள்ளதாகவும் தெரிவித்தார். கண்ணம்புழா பகவதியம்மனை வழிபட்டு பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

சோழி லக்னத்திற்கு எட்டாம் வீடு, குருவின் பார்வைபெற்றது. பதினொன் றாம் வீட்டில் மாந்தி அமைந்து, எதிர்காலம் பிரகாசமாய் அமையப்போவதைக் காட்டி யது. ஜாதகரின் ஆயுளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை யென்பது உறுதியானது. ஆயுர் தாயக் கணிதம் செய்யாமல், லக்னாதிபதி எட்டாம் வீட்டில் இருப்பதை மட்டும் வைத்து பலனறிவது அறிவுடை மையாகாது என்னும் அறிவுரை சொல்லப்பட்டது. ஒவ்வொரு கிரகத்தின் ஆயுட்கலைகள் எவ்வளவென்பதைத் தெரிந்து கொண்டு, அதற்குப்பிறகு சத்ரு க்ஷேத்ரஹரணம், சக்கரபாதஹரணம் ஆகிய கணக்கீடுகளைச் செய்தபின்னரே ஆயுர்தாயக் கணிதம் முற்றுப்பெறும். பிரசன்னம் பார்க்க வந்தவரின் அச்சம் நீங்கி, அமைதியில் ஆனந்தித்தார்.

Advertisment

kj

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒரு மனிதனுக்கு குழந்தைப்பருவம், இளமைப் பருவம், முதுமை என்று பருவ நிலைகள் மாறிவருதல்போல, கிரகங்களுக்கும், அவஸ்தைகள் உண்டு. இளமையில் ஆற்றலும், முதுமையில் அனுபவ அறிவும் அதிகம் இருக்கும். கிரக அவஸ்தைகளைக்கொண்டு, கிரகங்களின் சக்திநிலையையும், செயல்பாடுகளையும் கண்டறி வதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு.

ஐந்துவிதமான கிரக அவஸ்தைகளுண்டு. முப்பது பாகைகள்கொண்ட ஒரு ராசி, ஐந்து சம பாகங்களாகப் பிரிக்கப்படும். முதல் ஆறு பாகை- பால்ய அவஸ்தை. அதையடுத்து வரும் ஒவ்வொரு பாகமும் கௌமாரம், யௌவனம், விருத்தா, மிருத்யு என்ற வரிசையில் அமையும். பெண் ராசிகளில் இந்த வரிசை தலைகீழாக அமையும். கிரக யுத்த காலங்கள் இதற்கு விதிவிலக்காகும். "பால ஜோதிடம், விருத்த வைத்தியம் சிறப்பு' என்னும் பழமொழிக்கேற்ப, சில கிரகங்கள், ராசியின் துவக்கத்திலும், வேறுசில கிரகங்கள் ராசியின் மத்திய பாகத்திலும் பலன் தரும். சனியும், சர்ப்ப கிரகங்களும் விருத்தா அவஸ்தையிலும், சந்திரன் பால்ய அவஸ்தையிலும் இருந்தால் கெடுபலன்கள் உண்டாகுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

சுயதொழில் தொடங்கலாமா?

கேள்வி: நான் ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்திவருகிறேன். பணியாளர் கள் செய்த தவறுகளால் சட்டச்சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளேன். அபராதம் அல்லது தண்டனையிலிருந்து தப்பிக்கமுடியுமா?

-சேகர், கோவை.

(ஆரூட எண்-55; சித்திரை-3; நட்சத்திராதிபதி- செவ்வாய்; ராசியாதிபதி- சுக்கிரன்.) ப் சோழி லக்னத்திற்கு பாதகஸ்தானத் தில் பிரசன்ன லக்னம் அமைவது பாதகத் தையே காட்டுகிறது.

* நீதிமன்றத்தைக் குறிக்கும் ராசியாகிய துலாத்தில் சோழி லக்னம் அமைந்து, அதற்குப் பாதக ஸ்தானம் அரசாங்கத்தைக் குறிக்கும் சிம்மத்தில் விழுவதால், சட்டச்சிக்கல் வலிமையானதாகத் தெரிகிறது.

* மனோகாரகனா கிய சந்திரன் இரண்டில் அமர்வது, கவனக்குறைவால் ஏற்பட்ட தவறை சுட்டிக்காட்டுகிறது.

* மூன்று மற்றும் ஆறாமதிபதியாகிய குரு எட்டாமதிபதியாகிய சுக்கிரனுடன் இணைந்து ஆறாம் வீட்டிலிருப்பதால், அபராதம் செலுத்தவேண்டிய கட்டாயம் உண்டாகும்.

* லக்னாதிபதி ஆறில் மறைவதால், பந்தன யோகமாகிய சிறைசெல்லும் வாய்ப்புண்டு. ஆனாலும் குருவுடன் கூடியதால், பரிகாரங்களைச் செய்தால் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம்.

பரிகாரம்

* தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டால் சிறை தண்டனையிலிருந்து தப்பிக்கலாம். சனிக்கிழமை, சனி ஹோரையில் சனி பகவானை வணங்கினால் நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்பு சாதகமாக அமைய வாய்ப்புண்டு.

(தொடரும்)

செல்: 63819 58636

bala270522
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe