நகைக்கடையே நடந்து வந்ததுபோல் பத்துவிரல்களிலும் நவரத்தின மோதிரங்களை அணிந்து, பார்வையில் மிடுக்குடனும் தங்கச் சங்கிலியின் பாரம் தாங்காமல் குனிந்த தலையுடனும் வந்திருப்பவர் பெரிய தனவான் என்பது புரிந்தது. பிரசன்ன ஜோதிடர் கிருஷ்ணன் நம்பூதிரியை வணங்கி தான் வந்த காரணத்தை விவரித்தார். தான் பத்துவேலி நன்செய் நிலத்திற்குச் சொந்தக்காரன் என்றும், பல தர்மகாரியங்கள் செய்துவருவதாகவும் சுய புராணத்தைப் பாடி முடித்தார். திருமணமாகி பல ஆண்டுகள் கழிந்தும், தனக்கு புத்திர பாக்கியம் இல்லை என்பதைச் சொன்னபோது, அவர் குரலில் சோகம் ஒலித்தது.
கிருஷ்ணன் நம்பூதிரி சகுண நிமித்தங்களை ஆராய்ந்தபின், வாக்தேவியை பிரார்த்தனை செய்து சோழிப் பிரசன்னத்தைத் தொடங்கினார். பிரசன்ன லக்னத் தின் ஐந்தாம் பாவம் நின்ற நவாம்சத்திற்கு அறுபத்து நான்காம் நவாம்சம், ரேவதி நான்காம் பாதத்தில் விழுந்தது. நவாம்ச, திரேகாணங்களை ஆராய்ந்த பின் அது பட்சிகளால் வந்த சாபமென்றும், அந்த பட்சி மயில் என்றும் உறுதிப்படுத்திக்கொண்டார். பிரசன்னம் பார்க்கவந்த நிலக்கிழார் மயில்களைக் கொன்ற பாவத்தால், புத்திர பாக்கியமின்றித் தவிக்கிறார் என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தார். உண்மை கசந்தாலும் வேறுவழியின்றி ஒப்புக்கொண்டார் அந்த தனவான். தன் வயலில், தானியங்களைக் காப்பாற்றவே அந்தத் தவறைச் செய்ததாக மனம்வருந்தி, பரிகாரம் கேட்டறிந்தார். பிரசன்ன ஆரூடத்தின் பெருமையை வியந்து பாராட்டியவாறு வீடு திரும்பிய செல்வந்தரின் மனம் மேகங்கள் விலகிய வானம்போல் வெளுத்திருந்தது.
(கொடுக்கப்பட்ட பிரசன்ன எண்-94; சதயம்- 2-ஆம் பாதம்).
வேதத்தின் ஆறு அங்கங்களில், கண்ணாகப் போற்றப்படும் ஜோதி டம், பிரம்மாணம், பலன் என்ற இரு பிரிவுகளைக் கொண்டது. கணித ஸ்கந்தம் பிரம்மாண மாகவும், சம்ஹிதா, ஹோரா ஆகியவை பலன்களாகவும் அனுசரிக் கப்படுகின்றன. ஜனன ஜாதகத்தைப் பரிசிலிப்பது ஜோதிடத்தின் ஒரு அங்கமேயாகும். ஹோரா, கோளம், நிமித்தம், பிரசன்னம், முகூர்த்தம் போன்ற பல பிரிவுகளையும் அறிந்தவர் மட்டுமே முழுமையான ஜோதிடராக முடியும். கிரகங்களின் சாயனநிலை, நிராயன நிலைகளைக் கணக்கில் கொண்டால் மட்டுமே கிரக ஸ்புடம் சரியாக அமையும். இவைப் பற்றிய குறிப்புகள் ஜோதிடத்தின் பதினெட்டு அடிப்படை சித்தாந்தங்களிலும் தெளிவாக்கப்படுகின்றன. பிருஹத் ஜாதகத்தின் முதல் பத்து அத்தியாயங்களை உள்ளடக்கிய "தசாதியாயி' என்ற நூலைக் கற்றிந்த பின்னரே சரியான ஜோதிடப் பலங்களைக்கூற இயலும். தசாதியாயி நூலைப் படிக்காமல் ஜோதிடப்பலன் கூறுவது படகில்லாமல் ஆற்றைக்கடப்பது போலாகும். ஜோதிட சாஸ்திரத்தின் பல்வேறு பரிமானங்களில் பிரசன்ன ஜோதிடமே முதன்மையானது என்ற கருத்தே, கேரள ஜோதிடத்தின் அடிநாதமாக அமைந்துள்ளது.
மன நோய் தீருமா?
கேள்வி: என் மனைவி சில ஆண்டுகளாக மனச்சிதைவு நோய்க்கு ஆளாகி, தெளிவில்லாத சிந்தனையுடனும் குழப்பத்துடனும் துன்புறுகிறார்.
இதன்காரணத்தையும் அதற்கான பரிகாரத்தையும் பிரசன்ன ஆரூடத்தின் மூலம் கண்டறிந்து கூறமுடியுமா?
ரத்தினக்குமார், ஈரோடு.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
= நஷ்டப் பிரசன்னத்தில் ஜோதிடரின் சுவாசம் கேள்விகேட்ட நேரத்தில் எவ்வாறு அமைந்தது என்பதையும் கருத்தில்கொண்டு பலன்கூறுவதால் கேரள ஜோதிடம் சிறப்பாகப் போற்றப்படுகிறது.
= ஸ்வராயு எனப்படும் சரஜோதிடமும் பிரசன்ன ஜோதிடத்தின் ஒரு பகுதி என்பதும் அறியப்படுகிறது.
= கேள்வியாளர் சொல்லும் வார்த்தையின் முதலெழுத்து பிரசன்ன அக்ஷரம். அந்த எழுத்தையும் கிரக பாவங்களுடன் இணைத்துப் பலன் சொல்லும் முறையும் கேரள ஜோதிடத்திலுண்டு.
= கேள்வி கேட்கும் இடம், நேரம், நாள், முகூர்த்தம், ஹோரை போன்ற கோட்சார நியமங்களைக் கணக்கிட்டபின், ஆரூட ராசி சக்கரத்தை அமைப்பது கேரள ஜோதிடத்தின் சிறப்பு.
= மனோகாரகன் சந்திரன் 6-ஆம் அதிபதியாகி, சோழி லக்னத்தில் அமர்வது முதல் தோஷம்.
= பிரசன்ன லக்னமும், சோழி லக்னமும், 6, 8-ஆக அமைவது மன நோயைச் சுட்டிக்காட்டும்.
= நான்காம் அதிபதியான சுக்கிரன் பன்னிரண்டாம் வீட்டில் அமர்வது சுகஸ்தானம் கெட்டு, புத்தியும் கெடுவதற்கு ஏதுவாகிறது
= ராகு, மனதைக்குறிக்கும் நான்காம் வீட்டில், சந்திரனின் நட்சத்திரத்தில் இருப்பதும், கடந்தகால நிகழ்ச்சிகளால் ஏற்பட்ட வலியே இவரின் மன நோய்க்கான காரணமாகிறது.
= ஆறாம் பாவமும் சர்ப்ப திரேக்காணத்தில் அமர்வது, சர்ப்ப தோஷத்திலும் இவர் இருப்பதை உறுதிபடுத்துகிறது,
= 12-ஆம் பாவமும் பாஷ- தண்டனை திரேக்காணம் ஆகியுள்ளது தெரிகிறது.
= சோழி லக்னம் சதயம் இரண்டில் அமைந்து, நவாம்சத்தில் மகரத்தில் அமைவது கடுமையான முன்வினைப்பய னால், இந்தத் தொல்லை உருவானதைக் குறிக்கிறது..
= சோழி லக்னத்தில் மாந்தி அமர்வது, இந்தப் பிரச்சினை முடிவுக்கு வர நீண்டகாலமாகும் என்பதைத் தெளிவாக்குகிறது.
= சோழி லக்னத்திற்கு அறுபத்து நான்காவது நவாம்சம் அஸ்தம் இரண்டாம் பாதத்தில் அமைவது மேலும் தோஷத்தை வலுவாக்கிவிட்டது.
= சோழி லக்னத்திற்கு சாதகத்தாரையாகிய பரணியில் செவ்வாய் அமர்வது, ஜாதகரின் மனோ தைரியத்தால் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வரும் என்பதே சற்று ஆறுதலான சேதி.
= சோழி லக்னத்திற்கு பன்னிரண்டா மிடத்தில், நான்கு கிரகங்களின் சேர்க்கையும், கிரக யுத்தமும் தூக்கமின்மை, தேவையில்லா சிந்தனை, அடிக்கடி சத்தமிடுதல் போன்ற செயல்களை இந்த அமைப்புக்குக் கொண்டுசேர்க்கும்.
பரிகாரம்
=ஆயில்ய நட்சத்திரத்தில் கர்நாடக மாநிலத்திலுள்ள குக்கே சுப்பிரமணியர் கோவிலில் சர்ப்ப பலி பூஜைசெய்வது அவசியம்.
=தேவி மாகாத்மியம் பாராயணம் செய்ய நோய் குறையும்.
செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில், பட்டீஸ்வரம் துர்கையம்மனுக்கு, விசேஷ வழிபாடு செய்தால் பிரச்சினை ஓரளவுக்குக் குறையும்.
(தொடரும்)
செல்: 63819 58636