Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (69)

/idhalgal/balajothidam/kerala-astrological-secrets-69

வேர்களை நோக்கிப் பயணமாகும் விழுதுகளின் வலிமையால்தான் ஆலமரம் நிற்கிறது. அது போல புத்திரரின் புண்ணியப் பலன்களே வம்ச விருட்சத்தைத் தாங்கிப் பிடிக்கிறது. கிருஷ்ணன் நம்பூதிரியின் இந்த எண்ணத்திற்கேற்றாற்போல பிரசன்னம் பார்க்க வந்துசேர்ந்தார் ஒரு முதியவர். தன் மகன்களில் ஒருவன் நல்ல வேலையை விட்டுவிட்டு ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து, ஆன்மிகப் பணியில் ஈடுபட்டுவிட்டான் என்று தெரிவித்தார். அவன் எதிர்கால வாழ்க்கையைப்பற்றி அறிவதற்காகவே பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். சக்குளத்துக்காவு பகவதியை தியானம் செய்து பிரசன்னத்தை அமைத்தார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

சோழி லக்னம் துலா ராசியிலமைந்து, லக்னாதிபதி சுக்கிரன், ஆத்மகாரகனாகிய சூரி

வேர்களை நோக்கிப் பயணமாகும் விழுதுகளின் வலிமையால்தான் ஆலமரம் நிற்கிறது. அது போல புத்திரரின் புண்ணியப் பலன்களே வம்ச விருட்சத்தைத் தாங்கிப் பிடிக்கிறது. கிருஷ்ணன் நம்பூதிரியின் இந்த எண்ணத்திற்கேற்றாற்போல பிரசன்னம் பார்க்க வந்துசேர்ந்தார் ஒரு முதியவர். தன் மகன்களில் ஒருவன் நல்ல வேலையை விட்டுவிட்டு ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து, ஆன்மிகப் பணியில் ஈடுபட்டுவிட்டான் என்று தெரிவித்தார். அவன் எதிர்கால வாழ்க்கையைப்பற்றி அறிவதற்காகவே பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். சக்குளத்துக்காவு பகவதியை தியானம் செய்து பிரசன்னத்தை அமைத்தார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

சோழி லக்னம் துலா ராசியிலமைந்து, லக்னாதிபதி சுக்கிரன், ஆத்மகாரகனாகிய சூரியனுடன் பத்து பாகைக்குள் இணைந்து அஸ்தங்கதமானார். நான்கில் சந்திரன் ராகுவுடன் இணைந்திருந்ததால் தாயைவிட்டு விலகி வாழும் வாழ்வுண்டானது. ஞானகாரகன் கேது, கர்மஸ்தானத்தில் தனித்திருக்க சந்நியாச யோகம் கிடைத்தது. அவித்த நெல் முளைக்காது. மகனின் துறவு வாழ்க்கை மாறாது. குடும்பத்தில் காலங்காலமாய் இருந்த தீய கர்மாவைத் தீர்ப்பதற்காகவே இது நிகழ்ந்துள்ளது. கொடியில் பூத்த எல்லா மலர்களும் பூஜைக்குச் செல்வதில்லை. இதை ஒரு வரமாக நினைத்து மகிழவேண்டும் என்ற அறிவுரை கூறப்பட்டது. சாபமென்று நினத்தது உண்மையில் வரமென்றுணர்ந்து புளகாங்கிதமடைந்தார் பிரசன்னம் பார்க்க வந்தவர்.

Advertisment

kj

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒரு ஜாதகரின் ஜனன ஜாதகத்தில் தெய்வத்தின் அருள் பரிபூரணமாக இருந்தால், வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள், சூரியனைக் கண்ட பனிபோல் விலகிவிடும். தெய்வ அனுகூலத்தையும், அருள் மறைவி னால் ஏற்படும் தோஷங்களையும் கண்டறியும் முறையே அஷ்டமங்கலப் பிரசன்னம். எட்டு மங்கலப் பொருட்களைக்கொண்டு செய்யப்படும் இந்த பிரசன்னத் தின்மூலம் குலதெய்வ அனு கூலம், சர்ப்ப தோஷம், பிதுர் தோஷம், குரு சாபம், பிரேத தோஷம், செய்வினை தோஷம், இடுமருந்து தோஷம் போன்றவற்றைக் கண்டறிவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. இதில் பலன்கள் சொர்ண லக்னம், உதய லக்னம், லக்ன நவாம்சம், சத்ரம், ஸ்பரிஷ்டாங்கம், சந்திரா லக்னம் போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு கூறப் படும் பிராண, தேக, மிருத்யு ஸ்புடங்களும், சூட்சம திரிஸ்புடமுமே பிரச்சினைக்கான காரணத்தைக் காட்டுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

சுயதொழில் தொடங்கலாமா?

கேள்வி: நான் பல ஆண்டுகளாக ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். சொந்தத்தொழில் தொடங்கலாம் என்னும் எண்ணத்திலிருக்கிறேன். தொழிலில் வெற்றிபெறுவேனா?

-முகுந்தன், சேலம்.

(ஆரூட எண்-7; பரணி- 3; நட்சத்திராதி பதி- சுக்கிரன்; ராசியாதிபதி- செவ்வாய்).

* பிரசன்ன லக்னமும் சோழி லக்னமும் மேஷ ராசியில் அமைகின்றன.

* பத்தாமிடத்தில் சனி பகவான் ஆட்சியிலிருப்பதும், செவ்வாய் உச்சமடைவதும் தொழிலுக்கு சாதகமான சூழ்நிலையைக் காட்டுகிறது.

* பிரசன்ன லக்னம், சோழி லக்னத்திற்கு ஆறாமிடத்து அதிபதியாகிய புதன் நீசமடைவதால், ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதைவிட தொழிலில் லாபம் அதிகம் கிடைக்குமென்பதே தெளிவாகிறது.

* ஏழாம் வீட்டு அதிபதியாகிய சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் அமைவதால், கூட்டு வியாபாரமே பலன் தரும்.

* லக்னத்திற்கு எட்டாம் வீட்டில் கேது இருப்பதால் ஜாதகர் அதீத புத்திசாலியாக இருப்பார். தொழிலில் மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்றக்கூடிய திறன் கொண்டவராவார்.

* இரண்டாம் வீட்டு அதிபதியாகிய சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருப்பதால், தொழிலில் தனவரவு ஏற்பட்டு ஆசைகள் நிறைவேறும்.

பரிகாரம்

* பிள்ளையார்பட்டியில் அருள்பாலிக்கும் கற்பக விநாயகரை சங்கடஹர சதுர்த்தியில் வணங்கினால் தொழிலில் சிறப்புண்டாகும். பழனி முருகனின் ராஜ அலங்கார தரிசனத்தைக் கண்டால் ஆசைகள் நிறைவேறும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala200522
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe