Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (68)

/idhalgal/balajothidam/kerala-astrological-secrets-68

ண்கள் காட்சிகளைக் கண்டாலும், மனமே அதை அனுபவிக்கிறது. மனோகார கனாகிய சந்திரனே காலக்கணிதத்தில் முக்கியத் துவம் பெறுகிறார். மனதைப் பற்றிய இந்த சிந்தனை, அன்று வரவிருக்கும் பிரசன்னத் திற்குக் கட்டியம் கூறியது. கடல் அலை யின் சுவடுகள் மணலில் பதிவதுபோல், கவலை யின் கோடுகள் பிரசன்னம் பார்க்க வந்தவரின் முகத்தில் தெரிந்தன. சில நாட்களாக பயங்கர மான கனவுகளைக் காண்பதாகவும், அதனால், தன் மனம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதற்குப் பரிகாரம் தேடியே பிரசன்னம் பார்க்க வந்திருப்பது தெரிந்தது. மன்னார்சாலா நாகயட்சியை வேண்டி பிரசன்னத்தில் ஆரூட யந்திரத்தை ஆவாஹனம் செய்தார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

சோழி லக்னத்திற்கு பன்னிரண்டாம் பாவத்தில் பிரசன்ன லக்னம் அமைந்து, கனவினால் வந்த பிரச்சின

ண்கள் காட்சிகளைக் கண்டாலும், மனமே அதை அனுபவிக்கிறது. மனோகார கனாகிய சந்திரனே காலக்கணிதத்தில் முக்கியத் துவம் பெறுகிறார். மனதைப் பற்றிய இந்த சிந்தனை, அன்று வரவிருக்கும் பிரசன்னத் திற்குக் கட்டியம் கூறியது. கடல் அலை யின் சுவடுகள் மணலில் பதிவதுபோல், கவலை யின் கோடுகள் பிரசன்னம் பார்க்க வந்தவரின் முகத்தில் தெரிந்தன. சில நாட்களாக பயங்கர மான கனவுகளைக் காண்பதாகவும், அதனால், தன் மனம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதற்குப் பரிகாரம் தேடியே பிரசன்னம் பார்க்க வந்திருப்பது தெரிந்தது. மன்னார்சாலா நாகயட்சியை வேண்டி பிரசன்னத்தில் ஆரூட யந்திரத்தை ஆவாஹனம் செய்தார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

சோழி லக்னத்திற்கு பன்னிரண்டாம் பாவத்தில் பிரசன்ன லக்னம் அமைந்து, கனவினால் வந்த பிரச்சினையைக் காட்டியது. சயன ஸ்தான மாகிய பன்னிரண்டாம் பாவத் தில் ராகுவும், சந்திரனும் ரோகிணி நட்சத்திரக் காலில் அமர்ந்து கிரகணம் உண்டாக்கியதால், பாம்புகளைப்பற்றிய கனவென்பது உறுதியானது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் திருநாகேஸ்வரம் சென்று வழிபட்டால் கனவின் பாதிப்பு நீங்குமென்று பரிகாரம் சொல்லப்பட்டது. மனம் மனதோடு பேசும் கனவின் அந்தரங்கத்தையும் பிரசன்ன ஆரூடத்தால் கண்டுபிடிக்க முடியுமென்ற உண்மை புரிந்தது. பிரசன்னம் பார்க்க வந்தவருக்கு அது உலகின் எட்டாவது அதிசயமாகத் தோன்றியது.

ff

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒரு பாவத்திற்குத் தொடர்புள்ள இன்னொரு பாவத்தையெடுத்துக் கணிப்பது பாவாத்பாவ முறையாகும். எந்த பாவமும் தனிப்பட்ட முறையில் செயல்படுவதில்லை. எல்லா பாவங்களும் மற்ற பாவங்களுடன் இணைந்தே செயல்படும். ஜாதகருக்கும் அவர் உறவுகளுக்குமான தொடர்பை, ஸ்தானங் களை வைத்து அறிவதே கேரள ஜோதிடத் தின் சிறப்பு.

ஒருவருக்கு ஏற்படும் நோய், கடன், பகை போன்ற விஷயங்கள் பற்றி ஆராய லக்னத்திற்கு ஆறாம் பாவகத்தைப் பார்க்கவேண்டும். நோய், கடன், பகை ஆகியவை எந்த அளவில் நிவர்த்தியாகும் என்பது பற்றி ஆறாம் வீட்டிற்கு ஆறாம் வீடான பதினொன்றாம் பாவத்தைப் பற்றி அறிந்து கொண்டால் மட்டுமே முழுமையாகத் தெரிவிக்க இயலும். பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தை வலுவாக்கி, ஆறாமிடத்துடன் தொடர்புள்ள கடனை அடைக் கலாம். நோயையும் போக்கலாம். ஒருவருக்கு எட்டாமதிபதி தசை நடந்து அதனால் உண்டான பிரச்சினைகள், எட்டாம் பாவகத்திற்கு எட்டாம் இடமான மூன்றாம் வீட்டு அதிபதியின் புக்தியில் தீரும் என்பதை அறிந்துகொள்ளலாம். இதேபோல் பாவாத்பாவத்தின் அடிப்படையில் பரிகாரங்களை செய்யமுடியுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

சுய நினைவு திரும்புமா?

கேள்வி: என் மகன் சென்ற மாதம் ஏற்பட்ட விபத்தினால், மண்டையில் அடிபட்டு ஆழ்ந்த உறக்கநிலை நோயால் (ஈஞஙஆ) பாதிக்கப்பட்டுள்ளான். அவனுக்கு சுயநினைவு திரும்புமா? அதற்குப் பரிகாரம் உண்டா?

-மோகனசுந்தரம், நெய்வேலி.

(ஆரூட எண்-4; அஸ்வினி-4; நட்சத்திராதிபதி- கேது; ராசியாதிபதி- செவ்வாய்).

* ஒருவரின் சுய நினைவுக்குக் காரகமான கிரகங்கள் சந்திரனும் புதனுமாகும். இந்த கிரகங்களின் அனுகூலலி பிரதிகூலங்களைக்கொண்டே ஒரு ஜாதகரின் தன்னிலை உணர்தலை அறியமுடியும்.

* சோழி லக்னம் கேதுவின் நட்சத்திரமாகிய அஸ்வினியின் நான்காம் பாதத்தில் அமைந்து கடக நவாம்சம் பெறுகிறது.

* பிரசன்ன லக்னம், சோழி லக்னத்திற்கு ஆறாமிடத்தில் அமைந்து நோயைக் காட்டுகிறது.

Advertisment

dd

* மனோகாரகனாகிய சந்திரன் நான்காம் வீட்டின் அதிபதியாகி எட்டாமிடத்தில், புத்திரகாரகனாகிய புதனின் கேட்டை நட்சத்திரத்தில் இருப்பதால், சுயநினைவை இழந்தவரின் நிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது.

* தேய்பிறைச் சந்திரனால் பட்ச தோஷமும், நினை விழந்த ஆழ்ந்த உறக்கமும் தெளிவாகிறது.

* பிரசன்ன லக்னத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால், குருபகவான், ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போது சுயநினைவு திரும்பும்.

பரிகாரம்

பிரதிமாதம் வளர்பிறை மூன்றாம் நாளில் சந்திரனுக்கு பூஜை செய்வது நன்மை தரும். தர்மபுரியிலுள்ள கோட்டை காமாட்சி யம்மன் கோவிலின் வடபுறம் அமைந் துள்ள "சித்தேசுவரர்' என அழைக்கப் படும் சோமேசுவரரை வழிபட்டால் மன நோய் நீங்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala130522
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe