Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (67)

/idhalgal/balajothidam/kerala-astrological-secrets-67

சுக்கூட்டத்தில், கன்று தன் தாயைத் தேடியடைவதுபோல், முன்ஜென்ம கர்மா ஒவ்வொரு ஜீவனையும் பல பிறவிகள் துரத்திவரும். ஊழ்வினை உறுத்து வந்தூட்டும். இந்தக் கருத்தை மனதில் அசைபோட்டுக்கொண்டிருந்தார் கிருஷ்ணன் நம்பூதிரி. பிரசன்னம் பார்க்க வந்தவரின் செருமல் அவர் சிந்தையைக் கலைத்தது. பிரசன்னம் பார்க்க வந்தவர் தான் சமூக சேவகர் என்றும், தனக்குப் பிறந்த மகள் ஐந்து வயதில் ஏற்பட்ட நோயால் பேசும் திறனை இழந்துவிட்ட தாகவும் கூறி வருந்தினார். இந்த பாதிப்பு தீர பரிகாரம் உண்டா என்பதையறியவே பிரசன்னம் பார்க்க வந்ததாகத் தெரிவித் தார். ஆலப்புழாவில் அருள் பாலிக்கும் முல்லைக்கல் பகவதியை தியானம் செய்து பிரசன்னத்தை நிறுவினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

kj

சோழி லக்னத்தி

சோழி லக்னத்தின் இரண்டாம் பாவாதிபதியும், ரோக ஸ்தானாமாகிய ஆறாமதிபதியும் பரிவர் தனையாகி, அசுபர்களின் தொடர்பில் இருந்ததால், பேசும் திறன் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. பேச்சுத்திறனுக்குக் காரக னாகிய செவ்வாய் வலுவிழந்திருப்ப தும், பாதகத்தைக் காட்டியது. ஒன்பதாம் பாவம், இந்த பிரச்சினைக்குக் காரணமா னது. பெற்றோர் செய்த பாவமே மகளுக்கு கர்மாவின் சீதனமாக சேர்ந்துள்ளது. திருஞான சம்பந்தர் ஞானம்பெற்ற சீர்காழி சென்று உமையாம்பிகையை தரிசித்து, அபிராமி அந்தாதியின் இருபத்தாறாவது பாடலைப் படித்தால் இந்த வல்வினை நீங்குமென்ற பரிகாரம் சொல்லப் பட்டது. பரிகாரம் பலனளித்தது. மீண்ட சொர்க்கம்போல், தன் மகளுக்கு சொல்வாக்கு கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்தார் பிரசன்னம் பார்க்க வந்தவர்.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

காரண காரிய வாதத்தின்படி, ஒரு காரியத் திற்கு முதற்காரணம், துணைக் காரணம், நிமித்த காரணம் என்னும் மூன்று காரணங்கள் இன்றியமையாதவை. குடமாகிய காரியத்திற்கு மண் முதற்காரணம்; தண்டச் சக்கரம் துணைக் காரணம்; குயவன் நிமித்த காரணம். இதன் அடிப்படையில், ஒரு ஜாதகரின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளுக்குக் காரண காரியங்களை ஆராய்வதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. ஜனன ஜாதகம் முதற்காரணமாகவும், தசாபுக்தி நிமித்த காரணமாகவும், கோட்சாரத்தின் கிரக சஞ்சாரம் துணைக் காரணமாகவும் அமை கின்றன. திரிகோண சோதனை யிலும், ஒன்பதாம் பாவம் முதற்காரணத்தையும், லக்ன பாவம் நிமித்த கார ணத்தையும், ஐந்தாம் பாவம் துணைக் காரணத் தையும் குறிக்குமென்பதே கேரள ஜோதிடர் களின் கருத்து.

கடன் தீருமா?

கேள்வி: எனக்கு பல ஆண்டுகளாகக் கடன் பிரச்சினை இருக்கிறது. கடன் தொல்லையிலிருந்து மீளமுடியவில்லை. அதனால் மனக்குழப்ப மும் ஏற்படுகிறது. அதற்குப் பரிகாரம் உண்டா?

gg

Advertisment

-கணபதி, சென்னை.

(ஆரூட எண்- 54; சித்திரை 2-ஆம் பாதம். நட்சத் திராதிபதி- செவ்வாய்; ராசியாதிபதி- புதன்).

* சோழி லக்னம் செவ்வாயுடைய நட்சத்திர மாகிய சித்திரை இரண்டாம் பாதத்தில் அமை கிறது. நவாம்சத்தில் வர்கோத்தமம் பெறும் பாதம்.

* கன்னிச் செவ்வாய் கடலும் வற்றும் என்ற பழமொழியின்படி, பணத் தட்டுப்பாட்டைக் குறிக்கிறது.

* சோழி லக்னத்தின் ராசியாதிபதி எட்டில் மறைவதும் பாதகமானது.

* பன்னிரண்டாம் அதிபதியாகிய சூரியன் எட்டிலிருப்பதால், முன் னோர் சொத்தினை விற்று வரும் பணத்தால் கடன் பிரச்சினை தீரும்.

* இது சஞ்சித கர்மாவால் வந்த கடன். சென்ற பிறவியில், முன்னோர்களால் உருவான கடனை இந்தப் பிறவியில் தீர்க்க எடுக்கும் முயற்சியால் வந்த கடனாகும்.

* சோழி லக்னத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால், ஓராண்டிற்குள், கடன் பிரச்சினை தீரும்.

பரிகாரம்

அஸ்வினி நட்சத்திர மும் மேஷ லக்னமும்; அனுஷ நட்சத்திரமும் விருச்சிக லக்னமும்கூடிய காலத்திற்கு "மைத்ர முகூர்த்தம்' என்று பெயர். இந்த முகூர்த்தத்தில் கடனில் ஒரு சிறு தொகை யைக் கொடுத்தால் கொடுக்கவேண்டிய கடன் தொகை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் விரைவில் தீர்ந்துவிடும். பௌர்ணமியன்று குலதெய்வ வழிபாடு செய்யவேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வழி பட்டால் கடன் தொல்லைகள் தீரும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala060522
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe