பின்னிரவில் மணப் பெண் ணாகப் பூத்துக்குலுங்கி, விடியலில் மலர்களை உதிர்த்துக் கைம்பெண் ணாக மாறிய பவழமல்லி மரத்தைக்கண்டு வருத்தமுற்றார் கிருஷ்ணன் நம்பூதிரி. தோட்டத் தில் உலவிக்கொண்டிருந்தவருக்கு, அன்றைக்கு வரவிருந்த பிரசன்னத்தின் நிமித்தம் புரிந்தது. சிலந்திவலைபோல், கவலையின் ரேகைகள் பிரசன்னம் பார்க்க வந்தவரின் புன்னகையைக் கலைத்திருந்தன. தன் மகளுக்கு ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்ததாகவும், ஒருசில மாதங்களில் அவள் விதவையாகிவிட்டதாகவும் கூறி வருந்தினார். இதற்கான காரணத்தை அறியவே பிரசன்னம் பார்க்க வந்ததாகத் தெரிவித்தார். செட்டிக்குளங்கரா பகவதியைத் தொழுது பிரசன்னத் தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.
பிரசன்ன லக்னத்தின் ஏழாம் பாவம், எட்டு, நான்கு, பன்னிரண்டாம் பாவங்களுடனும், மாரகாதிபதி யுடனும் தொடர்புகொண்டிருப்ப தால், மணமகனுக்கு விபத்தால் மரணம் ஏற்பட்
பின்னிரவில் மணப் பெண் ணாகப் பூத்துக்குலுங்கி, விடியலில் மலர்களை உதிர்த்துக் கைம்பெண் ணாக மாறிய பவழமல்லி மரத்தைக்கண்டு வருத்தமுற்றார் கிருஷ்ணன் நம்பூதிரி. தோட்டத் தில் உலவிக்கொண்டிருந்தவருக்கு, அன்றைக்கு வரவிருந்த பிரசன்னத்தின் நிமித்தம் புரிந்தது. சிலந்திவலைபோல், கவலையின் ரேகைகள் பிரசன்னம் பார்க்க வந்தவரின் புன்னகையைக் கலைத்திருந்தன. தன் மகளுக்கு ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்ததாகவும், ஒருசில மாதங்களில் அவள் விதவையாகிவிட்டதாகவும் கூறி வருந்தினார். இதற்கான காரணத்தை அறியவே பிரசன்னம் பார்க்க வந்ததாகத் தெரிவித்தார். செட்டிக்குளங்கரா பகவதியைத் தொழுது பிரசன்னத் தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.
பிரசன்ன லக்னத்தின் ஏழாம் பாவம், எட்டு, நான்கு, பன்னிரண்டாம் பாவங்களுடனும், மாரகாதிபதி யுடனும் தொடர்புகொண்டிருப்ப தால், மணமகனுக்கு விபத்தால் மரணம் ஏற்பட்டது தெரிந்தது. இரண்டு, எட்டுக்குத் தொடர்புடைய கிரகங்கள் பெண் ணுக்கு மாங்கல்ய தோஷத்தைக் காட்டியது. வன்னி மர விநாயகரை அங்காரக சதுர்த்தி யில் வழிபட்டு, ஒன்பது கன்னிப் பெண்களுக்கு ஆடைதானம் செய்தால் மாங் கல்ய தோஷம் விலகும். அதற்குப் பின் மறுமணம் செய்யலாமென்று கூறப்பட்டது. முடிவிலும் ஒரு துவக்கம் போல், தன் மகளுக்கு மறு வாழ்வு கிடைத்த மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போனார் பிரசன் னம் பார்க்க வந்தவர்.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு பிரசன்னம் பார்க்கும் ஜோதிடர் பதினான்கு விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். இதில் விலோகனம் (கேள்வியாளர் நிற்கும் திசை) மிகவும் முக்கியமானது. கேள்வி கேட்பவர் நிற்கும் திசையைக்கொண்டு ஆரூட லக்னத்தைக் குறிப்பதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. கிழக்கு திசை மேஷம், ரிஷபத்தையும்; தென்கிழக்கு மிதுனத்தையும்; தெற்கு திசை கடகம், சிம்மத் தையும்; தென்மேற்கு கன்னியை யும்; மேற்கு துலாம், விருச்சிகத் தையும்; வடமேற்கு தனுசு ராசியையும்; வடக்கு மகரம், கும்ப ராசிகளையும்; வட கிழக்கு மீன ராசியையும் குறிக்கும்.
கிழக்கு திசை மேஷத்தை யும் ரிஷபத்தையும் குறித்தா லும், காலையில் மேஷத்தையும், மாலையில் ரிஷபத்தையும் காட்டுவதாகப் பொருள் கொள்ள வேண்டும். ஒரு ஜாதகத்திலுள்ள பன்னிரண்டு பாவங்கள், தனித்தனியான காரகங்களைக் குறிப்பதுபோல், காலபுருஷ ஜாதகத்தின்படி, அந்தந்த ராசிகள் அவை யவற்றின் சிறப்பியல்புகளைச் சுட்டிக்காட்டும். உதாரணத்திற்கு, தென்மேற்கு திசையிலிருந்து (கன்னி) கேள்வி கேட்கப்பட்டு, சோழி லக்னம் மீன ராசியாக அமைந்தால், கேட்கப்படும் கேள்வி திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினையைக் குறிப்பதாக அமையுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
குடும்பச் சண்டை நீங்குமா?
கேள்வி: எங்கள் குடும்பத்தில் எந்த காரணமும் இல்லாமல் அடிக்கடி சண்டை வருகிறது. மனக்குழப்பமும் ஏற்படுகிறது.
அதற்குப் பரிகாரம் உண்டா?
-சுந்தரமூர்த்தி, நாகை.
(ஆரூட எண் 36; ஆயில்யம் 4-ஆம் பாதம். நட்சத்திராதிபதி- புதன்; ராசியாதிபதி- சந்திரன்; நவாம்சாதிபதி- குரு).
* சோழி லக்னம் புதனுடைய நட்சத்திர மாகிய ஆயில்யத்தின் நான்காம் பாதத்தில் அமைகிறது. கட்டுப்பாடற்ற சுதந்திரமும், அதனால் பெரியவர்களின் அதிருப்தியை சம்பாதித்துக்கொள்வதும், முன் கோபமும் இந்த நட்சத்திர பாதத்தின் குணாதிசயங்கள்.
* குடும்ப ஸ்தானமாகிய இரண்டாம் பாவத்தின் அதிபதி எட்டாம் பாவத்திலிருப்பது, குடும்ப அமைதிக்குப் பாதக மாகிறது.
* இரண்டாம் பாவாதிபதியாகிய சூரியன், சனிபகவானின் வீட்டில் ராகு சாரம் பெறுவது, பதறிப்பேசும் வார்த்தைகளால் சிதறிப்போகும் குடும்ப அமைதியைக் காட்டுகிறது.
* சனிபகவானின் நேர்பார்வை பிரசன்ன, சோழி லக்னத்தில் பதிவதும் தோஷத்தைத் தெரிவிக்கிறது.
* பிரசன்ன, சோழி லக்னாதிபதி நான்காம் வீட்டில் அமர்வதும் மன அமைதிக் குக் கேடான சம்பவங்களைக் குறிக்கிறது.
* எதிர்மறை சக்திகள் வீட்டில் நிறைந் திருந்தால் எந்நேரமும் காரணமின்றி சண்டை, சச்சரவுகள், வாக்குவாதங்கள் ஏற்படும்.
பரிகாரம்
திருப்பதியில் அருள்புரியும் பத்மாவதி தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்துவந்தால் குடும்பப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். மகாலட்சுமிக்கு மனோரஞ்சிதப் பூவால் அர்ச்சனை செய்துவந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில், சிவாலயத்துக்குச் சென்று அங்குள்ள துர்க்கை சந்நிதியில் நெய்தீபமேற்றி வழிபடுவதால், சகல தோஷங்களும் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும். ஞாயிறு ராகு காலத்தில், வசம்பைக்கொண்டு நறுமணப் புகையிட்டால், வீட்டிலிருக்கும் எதிர்மறை சக்திகள் விலகும்.
(தொடரும்)
செல்: 63819 58636