Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (64)

/idhalgal/balajothidam/kerala-astrological-secrets-64

னிக் காலத்தில் பட்டுப்போன செடிகள், வசந்தகாலத்தில் பூத்துக் குலுங்கி புத்துயிர் பெற்றன. ஒரு வசந்தகாலத்து இளங்காலைப் பொழுதில் பிரசன்னம் பார்க்கவந்தவர் துக்கத்தால் துவண்டிருந்தார். தான் பல ஆண்டுகளாக முயற்சி செய்தும், வாழ்க்கையில் முன்னேறமுடியவில்லை என்றும், அதற்கான காரணத்தையும், பரிகாரத்தையும் அறியவே பிரசன்னம் பார்க்கவந்ததாகத் தெரிவித்தார். ஆற்றுக்கால் பகவதியை தியானம் செய்து பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

பிரசன்ன லக்னம் ஐந்து, எட்டு, பன்னிரண்டாம் பாவங்களின் தொடர்பிலிருந்ததால், பிரசன்னம் பார்க்கவந்தவர் வியாபாரத்தில் பெரிய நஷ்டங்களை அடைந் துள்ளார் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. அவர் உப்பு விற்கப்

னிக் காலத்தில் பட்டுப்போன செடிகள், வசந்தகாலத்தில் பூத்துக் குலுங்கி புத்துயிர் பெற்றன. ஒரு வசந்தகாலத்து இளங்காலைப் பொழுதில் பிரசன்னம் பார்க்கவந்தவர் துக்கத்தால் துவண்டிருந்தார். தான் பல ஆண்டுகளாக முயற்சி செய்தும், வாழ்க்கையில் முன்னேறமுடியவில்லை என்றும், அதற்கான காரணத்தையும், பரிகாரத்தையும் அறியவே பிரசன்னம் பார்க்கவந்ததாகத் தெரிவித்தார். ஆற்றுக்கால் பகவதியை தியானம் செய்து பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

பிரசன்ன லக்னம் ஐந்து, எட்டு, பன்னிரண்டாம் பாவங்களின் தொடர்பிலிருந்ததால், பிரசன்னம் பார்க்கவந்தவர் வியாபாரத்தில் பெரிய நஷ்டங்களை அடைந் துள்ளார் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. அவர் உப்பு விற்கப்போனால் மழை வந்ததென் றும், பஞ்சு விற்கப்போனால் காற்றடித்துப் பாழானது என்பதையும் புரிந்துகொள்ள முடிந் தது. விம்சாம்சத்தில் பத்தாம் வீடு, பாலா திரிபுர சுந்தரியை ஆதர்சன தேவியாகக் காட்டியது. ஆந்திராவில், திரிபுராந்தகம் என்னும் தலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியை வணங்கினால், பட்ட மரம் துளிர்க்கும்; பாலை வனம் சோலையாகும்; வாழ்க்கை மறுமலர்ச்சி பெறுமென்று பரிகாரம் சொல்லப்பட்டது. பிரசன்னம் கேட்கவந்தவரின் மனதில் வாட்டம் நீங்கி வசந்தம் வருடியது.

dd

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

பிரசன்ன ஆரூடத்தின்மூலம் ஒருவரின் தொலைந்துபோன ஜனன ஜாதகத்தைக் கண்டறிவதே "நஷ்ட ஜாதகம்' எனும் ஜோதிட ஆய்வு. இதுபோன்ற நுட்பமான அணுகுமுறையில் கேரள ஜோதிடம் சிறந்து விளங்குகிறது. பிரசன்ன கால லக்னம், ஒரு ராசியின் முன் ஹோரையில் விழுந்தால், உத்தராயனத்தில் பிறந்தவர் என்றும், பின் ஹோரையில் அமைந்தால், தட்சிணாயனத் தில் பிறந்தவர் என்றும் அறிய வேண்டும். ஜனனகால ருதுவை, லக்ன திரேகாணத்தின் அதிபதி மூலமோ அல்லது அதில் நின்ற கிரகத்தின் மூலமாகவோ கண்டறியவேண்டும். உத்தராயனத்தில் சனி, சுக்கிரன், செவ்வாய் ஆகியோரும், தட்சிணாயனத்தில் சந்திரன், புதன், குரு ஆகிய மூவரும் அதிபதிகளாவார்கள். பிரசன்ன லக்னமானது திரேகாணத்தின் முற்பகுதியாக இருந்தால் அந்த ருதுவின் முதல் மாதமென்றும், பிற்பகுதியாக இருப்பின் அந்த ருதுவின் இரண்டாவது மாதமென்றும் ஜனன காலத்தைக் கணக்கிடவேண்டும். பிரசன்ன காலத்து சூரிய, சந்திரரைக்கொண்டு ஜனன காலத்து அயனம், ருது, மாதம், பட்சம் போன்றவற்றை அறியமுடியுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

கல்வியில் தடை நீங்குமா?

கேள்வி: நான் உயர்கல்வியில் ஆராய்ச்சி தொடர்பான துறையிலிருக்கிறேன். நான்கு ஆண்டுகளாக முயற்சி செய்தும் முனைவர் பட்டத்தைப் பெறமுடியவில்லை. என்னுடைய குறிக்கோள் நிறைவேறுமா? அதற்குப் பரிகாரம் உண்டா?

Advertisment

kj

-தியாகராஜன், திருச்சி.

(ஆரூட எண்-54; சித்திரை-2-ஆம் பாதம்)

* சோழி லக்னம் செவ்வாயின் சித்திரை இரண்டாம் பாதத்தில் அமைந்துள்ளது. வித்யா ராசி யாகிய கன்னியில் வர்க்கோத்தம மாக இருப்பது சிறப்பைத் தருகிறது.

* சோழி லக்னத்திற்கு நான்காம் வீட்டின் அதிபதியாகிய குருவுடன் வித்யா காரகனாகிய புதன் சேர்ந்திருப்பதும் சாதகமான பலனையே காட்டுகிறது.

* பாதகாதிபதியாகிய குருவுடன், புதன் இணைந் திருப்பது பாதகத்தையும் தெளிவுபடுத்துகிறது.

* உயர்கல்வியைக் காட்டும் ஒன்பதாம் வீட்டில் ராகு இருப்பது சாதகமல்ல.

* பன்னிரண்டாம் வீட்டின் அதிபதியாகிய சூரியன் ஏழிலிருப்பதும் நன்மை தராது.

* பரிகாரங்களைச் செய்தால், குரு பகவான் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் நல்ல பலன் உண்டாகும்.

பரிகாரம்

பிரதி மாதம் திருவோண நட்சத்திரத்தில், கல்வியை வழங்கும் கடவுளாகிய ஸ்ரீஹயக்ரீவரை வழிபட்டால் கல்வியில் தடை நீங்கும்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ள கூத்தனூர் சரஸ்வதி கோவிலுக்குச் சென்று வழிபட்டால் கல்வியில் வெற்றி கிடைக்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala150422
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe