Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (63)

/idhalgal/balajothidam/kerala-astrological-secrets-63

ழைநீர் தெளித்து, மின்னல் கோலமிட்ட ஒரு மழைக் காலத்து இருண்ட பகலில், நனைந்து நடுங்கியபடி பிரசன்னம் பார்க்க வந்தார் ஒரு இளைஞர். சில மாதங்களாக தன்னை உருவம்தெரியாத நிழல் ஒன்று, பின்தொடர்ந்து தொல்லை தருவதாகத் தெரிவித்தார். தனக்கு ஆவி, செய்வினை போன்றவற்றில் நம்பிக்கையில்லை என்றாலும், சமீபகாலமாய் இனம் தெரியாத பயம் ஆட்டிப் படைப்பதாகத் தெரிவித்தார். தனக்கு ஏற்பட்டிருப்பது மனநோயா அல்லது ஆவிகளின் பாதிப்பா என்பதை அறியவே பிரசன்னம் பார்க்க வந்ததாகத் தெரிவித்தார். நெய்யாட்டிங்கராவில் அருள் புரியும் தொழுக்கல் பத்ரகாளியைத் தொழுது, பிரசன்னத்தைத் தொடங்கி னார் கிருஷ்ணன் நம்பூதிரி. பிரசன்ன ஆரூட சக்கரத் தில் ராகு, சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஒரே வீட்டில் சேர்க்கைபெற்று இருந்ததாலும், பிரேத சாப கிரகமா

ழைநீர் தெளித்து, மின்னல் கோலமிட்ட ஒரு மழைக் காலத்து இருண்ட பகலில், நனைந்து நடுங்கியபடி பிரசன்னம் பார்க்க வந்தார் ஒரு இளைஞர். சில மாதங்களாக தன்னை உருவம்தெரியாத நிழல் ஒன்று, பின்தொடர்ந்து தொல்லை தருவதாகத் தெரிவித்தார். தனக்கு ஆவி, செய்வினை போன்றவற்றில் நம்பிக்கையில்லை என்றாலும், சமீபகாலமாய் இனம் தெரியாத பயம் ஆட்டிப் படைப்பதாகத் தெரிவித்தார். தனக்கு ஏற்பட்டிருப்பது மனநோயா அல்லது ஆவிகளின் பாதிப்பா என்பதை அறியவே பிரசன்னம் பார்க்க வந்ததாகத் தெரிவித்தார். நெய்யாட்டிங்கராவில் அருள் புரியும் தொழுக்கல் பத்ரகாளியைத் தொழுது, பிரசன்னத்தைத் தொடங்கி னார் கிருஷ்ணன் நம்பூதிரி. பிரசன்ன ஆரூட சக்கரத் தில் ராகு, சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஒரே வீட்டில் சேர்க்கைபெற்று இருந்ததாலும், பிரேத சாப கிரகமாகிய மாந்தி பன்னிரண்டாம் வீட்டிலிருப்பதாலும், கண்டிப்பாக தீய ஆவிகளின் தொல்லையுண்டு என்பது தெளிவானது. பிரசன்னத்தில் மேஷ ராசியின் இரண்டாவது திரேகாண ரூபம் தென்படுகிறது. பிரேத உருவில் ஒரு பெண் சிவப்புத்துணி அணிந்து தாகத்தால் தவிக்கும் முகத்துடன் இருப்பது தெரிகிறது. ஸ்ரீ குரோத பைரவரின் பூத டமார தந்திர பூஜைகளைச் செய்தால், தீய ஆவியின் பிடியிலிருந்து தப்பிக்கலாம் என்னும் பரிகாரம் கூறப்பட்டது. மழைமேகங்கள் விலகி வெளிச்சம் வந்ததுபோல், பிரசன்னம் பார்க்க வந்தவரின் மனம் தெளிவானது.

Advertisment

KJ

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒரு ஜாதகத்தை ஆராயும் போது திரிகோணம், கேந்திரம், பணபரம், ஆபோக்லிகம் மற்றும் உபஜெய ஸ்தானங்களையும் சோதித்துப் பலன்கூறுவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. ஜாதகம் என்னும் கட்டடத்தின் நுழைவாயிலாக அமைவதே மூலத்திரிகோணம். (1, 5, 9- லட்சுமி ஸ்தானங்கள்). அந்த கட்டடத்தை நான்கு தூண்கள் போல் தாங்குவதே கேந்திர ஸ்தானங்கள். (1, 4, 7, 10- விஷ்ணு ஸ்தானங்கள்). அடித்தளமாக அமைவது பணபர ஸ்தானங்கள். (2, 5, 8, 11). ஆபோக்லிகயம் (3, 6, 9, 12) கூரையாகவும், உப ஜெய ஸ்தானங்கள் (3, 6, 10, 11) அந்த வீட்டின் சுவர்களாகவும் அமை கின்றன. எந்த கிரகமாக இருந்தாலும் திரிகோண ஸ்தானத்திலோ, கேந்திரத்திலோ இருப் பின் அந்த கிரகம் மிக பலமாக இருக்கிறதென்று பொருள். ராகு இருக்கும் இடத்திற்கு நான்கு கேந்திரங்களிலும் தொடர்ந்து கிரகங்கள் இருந்தால் குபேர வாழ்க்கையைத் தரும் பர்வத யோகத்தை உண்டாக்கும் என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

இயற்கையான மரணம் ஏற்பட்டதா?

கேள்வி: என் தந்தை சென்ற மாதம் மரணமடைந்துவிட்டார். எந்த நோயுமில்லா மல் ஆரோக்கியத்துடன் இருந்த என் தந்தை திடீரென்று மரணமடைந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரசன்னத்தின்மூலம் என் தந்தையின் மரணத்திற்கான காரணத்தைக் கூறமுடியுமா?

-ஜெகதீஷ், தஞ்சை.

(ஆரூட எண்- 68; அனுஷம்-4-ஆம் பாதம்)

ப்எட்டாமிடத்திலுள்ள கிரகங்களைக் கொண்டு எந்தமாதிரியான மரணத்தை ஒரு ஜாதகர் சந்திக்க நேரிடலாம் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். சோழி லக்னத் திற்கு எட்டாமிடத்தில், ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் மாந்தி இருப்பது தீய மந்திரத்தால் ஏற்பட்ட மரணத்தைத் தெளிவாக்குகிறது.

ப்சோழி லக்னமாக அமைந்த விருச்சிகத்திற்கு பாதக ஸ்தானமாகிய கடக ராசியில் ஆட்சிபெற்று அமர் வதால், மரணம் பிறர் விரோதத் தால் ஏற்பட்ட பாதகமாகவே தெரிகிறது.

ப்சோழி லக்னத் திற்கு எட்டாமிடம் உபய ஸ்தானத்தில் அமைந்த தால், பிறரால் ஏற்படுத் தப்பட்ட மரணம் என்பதைக் காட்டுகிறது.

ப்ராகு சூரியனின் நட்சத்திரமாகிய கிருத் திகையிலிருக்க, சூரியன் ஐந்திலிருப்பதாலும், ஐந்தாமதிபதி நான்கிலிருப்பதாலும் மரணமடைந்தவருக்கு நெருக்கமாயிருந்து, பின் விரோதியாக மாறியவரின் சூழ்ச்சியே மரணத்திற்குக் காரணமானது.

ப்ஆறாமதிபதி மூன்றாமிடத்தில் உச்சம்பெற்ற செவ்வாயாக இருப்பதால், மரணமடைந்தவருக்கு ஊருடன் பகையும், எதிரிகளால் தோல்வியும் உண்டானது.

ப்சத்ரு ஸ்தானம் மேஷத்தின் முதல் திரேகாணத்தில் அமர்வதால், திரேகாண ரூபம், இந்த மரணத்திற்குக் காரணமானவர் ஒரு கருமையான ஆண்; வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு குரூரமாகவும், சிவந்த கண்களுடனும் உள்ளார் என்பதைக் காட்டுகிறது.

ப்சத்ரு ஸ்தானாதிபதி மூன்றிலிருப்பது இளைய சகோதரவழி உறவைக் காட்டு கிறது.

(தொடரும்)

செல்: 63819 58636

bala080422
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe