Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (61)

/idhalgal/balajothidam/kerala-astrological-secrets-61

ழ்வினை உறுத்து வந்தூட்டும் என்பதையும், அவரவர் செய்யும் நல்வினைகள்- தீவினைகள் எவையும் அவரைவிட்டுப் போவதில்லை என்பதையும் உறுதிசெய்யவே ஒருவர் பிரசன்னம் பார்க்க வந்தார். தன் மகன் ஆட்டிசம் (ஆமபஒநங) என்னும் நோயால் பாதிக்கப்பட்டு, சூழ்நிலையைப் புரிந்துகொள்ளும் திறனை இழந்துவிட்டான் என்றும், அந்த குறைபாடு சரியாவதற்கான வாய்ப்புண்டா என்றும், அந்த நோய் நீங்குவதற்கான பரிகாரத்தையும் பிரசன்னத் தில் கண்டுபிடித்துக் கூற வேண்டினார். காடாம்புழா பகவதியை தியானம் செய்த கிருஷ்னன் நம்பூதிரி, ரோக பிரசன்னத்தைத் துவக்கினார்.

Advertisment

மனோகாரகனாகிய சந்திரனின் மகனா கிய புதனே நரம்பு மண்டலத்தின் காரகன். பிரசன்ன ஜாதகத்தில் புதன் ஆறு, எட்டு, பன்னிரண்டாம் பாவங்களுடன் தொ

ழ்வினை உறுத்து வந்தூட்டும் என்பதையும், அவரவர் செய்யும் நல்வினைகள்- தீவினைகள் எவையும் அவரைவிட்டுப் போவதில்லை என்பதையும் உறுதிசெய்யவே ஒருவர் பிரசன்னம் பார்க்க வந்தார். தன் மகன் ஆட்டிசம் (ஆமபஒநங) என்னும் நோயால் பாதிக்கப்பட்டு, சூழ்நிலையைப் புரிந்துகொள்ளும் திறனை இழந்துவிட்டான் என்றும், அந்த குறைபாடு சரியாவதற்கான வாய்ப்புண்டா என்றும், அந்த நோய் நீங்குவதற்கான பரிகாரத்தையும் பிரசன்னத் தில் கண்டுபிடித்துக் கூற வேண்டினார். காடாம்புழா பகவதியை தியானம் செய்த கிருஷ்னன் நம்பூதிரி, ரோக பிரசன்னத்தைத் துவக்கினார்.

Advertisment

மனோகாரகனாகிய சந்திரனின் மகனா கிய புதனே நரம்பு மண்டலத்தின் காரகன். பிரசன்ன ஜாதகத்தில் புதன் ஆறு, எட்டு, பன்னிரண்டாம் பாவங்களுடன் தொடர்பிலிருப்பதாலும், சனிபகவானுடன் கூடியிருப்பதாலும் இந்த நோயின் தாக்கம் தெரிகிறது. சந்திரன், ரேவதி நட்சத்திரத்தில் நின்று, புதன் தசையில், சந்திர புக்தியை நடத்துவதால் மன இறுக்கமும் ஏற்பட்டுள்ளது. கர்மவினையால் வந்த தோஷமானதால், முழுமையான நிவர்த்தி காணமுடியாது என்றாலும், ஓரளவுக்கு தோஷத்தைக் குறைக்கலாம். திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்குச் சென்று பரிகார பூஜைகளைச் செய்யவேண்டும். மதுரை சென்று மீனாட்சி, சோமசுந்தரேஸ்வரரையும் வழிபட்டுவந்தால் கோளாறுகள் குறையுமென்ற பரிகாரம் கூறப்பட்டது. பிரசன்ன ஆரூடத்தின்மூலம், மனதின் பாரம் குறைந்தது. பிரசன்னம் பார்க்க வந்தவரின் முகத்தில் நிம்மதி நிறைந்தது.

kj

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஜனன ஜாதகத்திலும், பிரசன்ன ஆரூடத்திலும் உப பதா லக்னங்களைக்கொண்டு பலன்காணும் முறையே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. பன்னிரண்டாம் பாவாதிபதி பன்னிரண்டாம் பாவத்திற்கு எத்தனை வீடுகள் தள்ளி அமர்ந்துள்ளாரோ, அத்தனை வீடுகள் தள்ளிவரும் வீடே உப பதா லக்னம். இந்த உப பதா லக்னம் கூட்டாளியைப் பற்றியும், உறவுகளைப் பற்றியும் குறிகாட்டுகிறது. கூட்டாளியின் குணங்கள், வேலை, அவர் பற்றிய விவரங்கள், அந்த உறவால் ஏற்படும் விளைவு ஆகியவற்றைக் குறிக்கும். முக்கியமாக, திருமணத்தைப் பற்றிய துல்லிய பலனைக் காட்டுவது உப பதா லக்னம் என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

விரும்பிய நபரோடு திருமணம் நடக்குமா?

கேள்வி: எனக்கு சென்ற மாதம், நான் விரும்பிய பெண்ணுடன் திருமண நிச்சயம் நடந்தது. துரதிர்ஷ்டவசமாக, இரு வீட்டாருக்குமிடையே ஏற்பட்ட மனக்கசப்பால் திருமணம் நின்றுவிட்டது. பிரச்சினைகள் தீர்ந்து விரும்பிய நபரோடு திருமணம் நடக்குமா? திருமணத் தடை நீங்கப் பரிகாரம் உண்டா?

-விவேக், திருத்துறைப்பூண்டி.

(ஆரூட எண்- 105; ரேவதி 1-ஆம் பாதம்)

* சோழி லக்னம் ரேவதி முதல் பாதமாகி நவாம்சத்தில் தனுசில் அமைகிறது. மேலும் சோழி லக்னத்தின் பாதகாதிபதியாக வரும் புதன் நட்சத்திரமாக அமைவது ஒப்பந்த முறிவைக் காட்டுகிறது.

* ஏழாம் பாவம் பாதகமாக இருப்பதும், ஏழாம் பாவாதிபதி குரு மற்றும் சூரியனோடு சேர்ந்து கும்பமாகிய பன்னிரண்டாம் வீட்டில் அமைவதும் இழப்பைக் காட்டுகிறது.

* ஏழு மற்றும் ஆறாம் பாவாதிபதிகள் பன்னிரண்டாம் வீட்டில் சங்கமிப்பது முறிவைக் காட்டுகிறது.

* கும்பத்திலிருந்து ஏழாம் பார்வையாக சிம்மத்தை மட்டுமே பார்க்கும் குருவின் பார்வை சோழி லக்னத்திற்கு ஆறில் விழுவதும், இந்த முறிவு நல்ல திருப்பத்திற்கே என்று உணர்த்துகிறது.

* நான்காம் பாவாதிபதியும் பாதகாதிபதியும் ஒருவராக வருவது குலதெய்வ தோஷத்தைக் காட்டுகிறது.

* ஆறு, பத்தாமதிபதிகள் பன்னிரண்டில் அமைவது, கர்மவினையின் நடப்பே இந்த நபரோடு ஏற்பட்ட பழக்கத்திற்கும், திருமண முறிவுக்கும் காரணமென்று தெரிகிறது.

* ஏழாம் பாவாதிபதிக்கு அறுபத்து நான்காம் நவாம்சம் பூரம் முதல் பாதத்தில் வருவது, கன்னிப் பெண் சாபம் இருப்பதும், அதனால் தடங்கல் வருவதும் உறுதியாகிறது.

பரிகாரம்

கன்னியாகுமரி பகவதி தரிசனமும், காத்யாயனி தேவி பூஜையும் செய்ய திருமணத் தடை நீங்கி, வாழ்க்கை சிறக்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala250322
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe