வெளியூரில் வேலைபார்த்து வரும் தன் மகளின் ஜாதகம் தொலைந்துவிட்டதால், பிரசன்னத்தின் மூலம் நஷ்ட ஜாதகத்தைக் கணித்து அவளுக்குத் திருமணம் நடந்தேறும் காலத்தைத் துல்லியமாகக் கூறவேண்டும் என்ற கோரிக்கையோடு கிருஷ்ணன் நம்பூதிரியை அணுகினார் அந்தப் பெண்மனி. பிரசன்ன காலத்து கிரக, பாவ நவாம்சங்களைக்கொண்டு நஷ்ட ஜாதகம் கணித்தபின், சோழிப்பிரசன்னத் தால் களத்திர ஸ்தானத்தை ஆராய்ந்தவர் அதிர்ந்துபோனார். அந்தப் பெண்மனியின் மகளுக்குத் திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிவிட்டன என்பதே பிரசன்னத் தின் பதிலாக அமைந்தது. பிரசன்னத்தில் காணும் உண்மையை மறைக் கக்கூடாது என்ற நியதியுள்ளதால் அந்த ரகசியத்தை வெளிப்படுத்தினார். நம்பமுடியாத சேதியைக்கேட்ட அந்த தாய் வருத்தத்துடன் வீடு திரும்பினார்.

sivan

தீர விசாரித்ததில் பிரசன்னத்தில் சொல்லப்பட்டதே உண்மை என்றுணர்ந்தார். தன்னை ஏமாற்றியது தன் மகள் தான் என்ற செய்தி துன்பத்தைத் தந்தாலும், பிரசன்ன ஆரூடத்தின் துல்லியத்தைக்கண்டு வியந்துபோனார்.

(கொடுக்கப்பட்ட பிரசன்ன எண்- 10; கார்த்திகை- 2-ஆம் பாதம்)

Advertisment

ரோகப் பிரசன்னம் (நோய்க்குறி) பார்க்கும்முறை, மற்ற பிரசன்னங்களின் அணுகுமுறையிலிருந்து மாறுபட்டது. அஷ்டாங்க இருதயம் எனும் நூலில் கூறப்பட்டதுபோல் இயற்கையாக ஏற்பட்ட நோயா? தீய பழக்கங்களால் உண்டானதா? பிறரால் உருவாக்கப் பட்டதா என்பதை வெவ்வேறு பாவத் தொடர்புகளைக் கொண்டு அறிய வேண்டும். சோழிப்பிரசன்ன லக்னத்தின் ஒன்று, ஆறு, எட்டாம் பாவங்களின் தொடர்பு நோயைக் குறிக்கும்.

இந்த பாவங்களுடன் தொடர்பிலுள்ள மற்ற பாவங்களையும், கிரகங்களையும்கொண்டு நோயின் காரணத்தை அறியலாம். ராகு- கேது போன்ற சர்ப கிரகங்கள் தொடர்பிலிருந்தால் தீய பழக்கங்களால் ஏற்பட்ட நோய் என்பது உறுதியாகும். ஆரோக்கிய ஸ்தனமாகிய ஐந்தம் பாவம் அமைந்த நட்சத்திரத்திற்கு, ஆறாவதாக அமையும் நட்சத்திர அதிபதியாக அமையும் கிரகம் அவயோகி. அந்த கிரகம் சரராசியிலமர்ந்தால் நோய் கால மாற்றத்தால் குணமாகும். ஸ்திர ராசியிலமர்ந்தால் அது தீரா நோய் என்றும், உபய ராசியில் அமைந்தால் மருத்துவத்தால் சீராகுமென்றும் அறியவேண்டும்.

கேரள ஜோதிடத்தில் பைஷஜ்ய பிரசன்னம் எனும் நோய்க்குறி அறியும்முறையும் நோய் தீர்ந்து ஆரோக்கியமுண்டாக உக்ரயோகம் காணும் நட்சத்திர, திதி கணக்கீடுகளும் விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன.

Advertisment

கொடுத்த பணம் திரும்பக் கிடைக்குமா?

கேள்வி: என் மூதாதையர் சொத்தைவிற்று வந்தபணத்தை நண்பருக்கு கடனாகக் கொடுத்தேன். ஓராண்டில் திருப்பித்தருவதாக வாக்குறுதி தந்தார். ஆனால், ஐந்தாண்டுகள் கடந்தும் திருப்பித் தரவில்லை. நீதிமன்றத் தில் வழக்கு நிலுவையிலுள்ளது. நான் கொடுத்த பணம் திரும்பவருமா?

தியாகராஜன், மதுரை.

= சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்ற பிரிவுகளால் ஒரு ராசியைப் பகுத்து பலன் காண்பதால், பிரசன்னத்தில் பேசப்படும் பொருளின் நிலை படைத்தலா? காத்தலா? அழித்தலா என்பதையறிய முடியும். இதுவே கேரள ஜோதிடத்தின் சிறப்பாகிறது.

= சூரியன் மேஷ ராசியில் நுழையும் தினத்தின் திதியைக்கொண்டு அந்த வருடத்தின் மழையின் அளவையும், தானிய விளைச்சளையும் சரியாகக் கணிக்க உதவும் வர்ஷ பிரசன்னம் கேரள ஜோதிடத்தின் தனித்தன்மை என்றால் மிகையாகாது.

= தெய்வ அனுகூலத்தைக் காட்டும் கர்மபிரசன்னத்தில், முன்ஜென்ம வினையையும், தேவ கோபம், பித்ரு, பூத, பிரேத சாபங்களையும் கண்டறிந்த பின்னரே பரிகாரங்களை முடிவு செய்யும்முறை, கேரள ஜோதிடத்தின் உயர்வினை உணர்த்துகிறது.

= பிரசன்ன காலத்து உதய லக்னத் துக்கு இரண்டில், காலபுருஷ தன ஸ்தானத் தில் மாந்தி நிற்பது, தன நஷ்டத்தைக் காட்டுகிறது. அதன் பலன், சொத்துகள் கரைந்துவிடும். குடும்ப வாழ்க்கையிலும் நிம்மதி குறையும்.

= பிரசன்ன லக்னத்திற்கு இரண்டாம் வீட்டு அதிபதியாகிய புதன், ரிஷபத்திற்கு பாதகமான மகரத்தில் அமர்வது கொடுக்கல்- வாங்கல் பிரச்சினையைக் காட்டுகிறது.

= தனகாரகனாகிய சுக்கிரன், பிரசன்ன லக்னத்திற்கு எட்டாமிடத்தில் அமர்வது, பணப் பரிவர்த்தனையில் ஏற்பட்டுள்ள சிக்கலை உறுதிசெய்கிறது.

= பிரசன்ன லக்னம் அமைந்த கிருத்திகை நட்சத்திரத்திற்கு விபத்துத்தாரையில் மனோகாரகனாகிய சந்திரன் அமைவது, பிரசன்னம் கேட்பவர் மனகுழப்பத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைக் காட்டுகிறது.

= நட்பு ஸ்தானமாகிய ஐந்தாமிடத்தோன் (புதன்) பாதகஸ்தானமேறியது நண்பரால் ஏற்பட்ட பாதகத்தைக் காட்டுகிறது.

= நீதிமன்றத்தைக் குறிக்கும் ராசியாகிய துலாம் பிரசன்ன லக்னத்திற்கு ஆறாமிடமாகி, அதன் அதிபதி எட்டில் மறைவது நிலுவையிலுள்ள வழக்கு சீக்கிரத்தில் முடியாது என்பதைக் காட்டுகிறது.

= பிரசன்ன லக்னம் அமைந்த நட்சத்திரத்திற்கு சம்பத்துத் தாரையில் கிழமையதிபதியாகிய சந்திரன் இருப்பதால் கொடுத்த பணம் திரும்பவரும் என்ற உறுதி ஏற்படுகிறது.

= பிரசன்ன லக்னத்தின் அதிபதியாகிய சுக்கிரனின் நட்சத்திரமாகவும், கிருத்திகைக்கு பதினெட்டாவது நட்சத்திரமாகவும் (சமுதாயத்தாரை--பூராடம்) சாதகமாக அமைவதால், கடன் வாங்கியவரின் குடும்பத்தைத் தொடர்பு கொண்டு பிரச்சினையை சுமூகமாக முடித்துக் கொள்ளலாம்.

= நவாம்சத்தில் சந்திரனுக்கு அறுபத்து நான்காவது நவாம்சத்தில் சுக்கிரன் அமைவதால், வரவேண்டிய தொகையின் ஒருபாகத்தை இழக்கவேண்டிய சூழ் நிலை உருவாகும்.

பரிகாரம்

= திருவெண்ணெய் நல்லூர் ஸ்ரீ கிருபா புரீஸ்வரரை, சனிக்கிழமை காலையில் நெய்தீபமேற்றி வழிபட்டபின், அன்னதானம் செய்தால் தடையும் தாமதமும் நீங்கி, வரவேண்டிய தொகை வசூலாகும்.

(தொடரும்)

செல்: 63819 58636