Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (58) -லால்குடி கோபாலகிருஷ்ணன்

/idhalgal/balajothidam/kerala-astrological-secrets-58-lalgudi-gopalakrishnan

பிரசன்னம் பார்க்க வந்தவரின் பதட்டமும் பயமும், அவர் ஏதோ பெரிய சிக்கலில் அகப்பட்டுக் கொண்டுள்ளார் என்பதை உணர்த்தி யது. தன் அலுவலகப் பணியில் நேர்ந்த தவறால், தான் சட்டச்சிக்கலில் உள்ளதாகத் தெரிவித்தார். இந்தப் பிரச்சினையால் சிறைசெல்ல நேருமா என்பதை அறியவே பிரசன்னம் பார்க்க வந்ததாகத் தெரிவித்தார். காவச்சேரி எனும் தலத்தில் அருள்புரியும் பரக்காட்டு பகவதியை தியானம் செய்து, பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

பிரசன்னத்தில், சோழி லக்னத்திற்கு எட்டாம் வீட்டோன் பத்தாமிடத்திலிருப்பதால், உதவியாளர் செய்த தந்திரத்தால் சிக்கல் ஏற்பட்டுள்ளதை அறிந்துகொள்ள முடிந்தது. பன்னிரண்டாம் வீட்டதிபதியும் பத்தாமிடத்தில் அமர்ந்ததால், சிறைவாசம் இல்லையென்ற ஆறுதலான சேதி கிடைத்தது. விரிஞ்சிபுரத்திலுள்ள மார்க்கபந்தீஸ்

பிரசன்னம் பார்க்க வந்தவரின் பதட்டமும் பயமும், அவர் ஏதோ பெரிய சிக்கலில் அகப்பட்டுக் கொண்டுள்ளார் என்பதை உணர்த்தி யது. தன் அலுவலகப் பணியில் நேர்ந்த தவறால், தான் சட்டச்சிக்கலில் உள்ளதாகத் தெரிவித்தார். இந்தப் பிரச்சினையால் சிறைசெல்ல நேருமா என்பதை அறியவே பிரசன்னம் பார்க்க வந்ததாகத் தெரிவித்தார். காவச்சேரி எனும் தலத்தில் அருள்புரியும் பரக்காட்டு பகவதியை தியானம் செய்து, பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

பிரசன்னத்தில், சோழி லக்னத்திற்கு எட்டாம் வீட்டோன் பத்தாமிடத்திலிருப்பதால், உதவியாளர் செய்த தந்திரத்தால் சிக்கல் ஏற்பட்டுள்ளதை அறிந்துகொள்ள முடிந்தது. பன்னிரண்டாம் வீட்டதிபதியும் பத்தாமிடத்தில் அமர்ந்ததால், சிறைவாசம் இல்லையென்ற ஆறுதலான சேதி கிடைத்தது. விரிஞ்சிபுரத்திலுள்ள மார்க்கபந்தீஸ்வரர் கோவிலுக்குச் சென்று வழிபட்டால், பிரச்சினை தீருமென்று உபதேசிக்கப்பட்டது. ஆபத்தில் உள்ளவரைக் காப்பாற்றும் பிரசன்ன ஆரூடத்தின் பெருமையை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது.

Advertisment

dd

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

நவகிரகக் கணிதத்துடன் மாந்தி நிற்கும் பாவத்தையும், தொடர்பிலிருக்கும் மற்ற கிரகங்களையும் சேர்த்துக் கணக்கிடுவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. ஆறு, பத்து மற்றும் பதினொன்றாம் பாவங்களைத்தவிர மற்ற பாவங்களில் தீமையே தருவார். ஆறாம் பாவத்தில் மாந்தி இருக்கப் பிறந்தவர், எதிரிகளை சுலபமாக வெற்றிகொள்வார். ஜனன ஜாதகத்தில் பத்தாமிடத்தில் மாந்தி அமர்ந்தால், நல்ல பேரும் புகழும் அடையலாம். பதி னொன்றாம் இடத்தில் மாந்தி இருந்தால், தன லாபமும், அரச வாழ்க்கையும் கிடைக்கும். மாந்தி பிற கிரகங்களுடன் கூடியிருக்கும்போது புதிய விளைவுகளை உண்டாக்குவார். கேதுவுடன் இணையும் மாந்தி இதய நோயையும், நெருப்பினால் கண்டத்தையும் தருவார். சூரியனுடன் சேர்ந்தால் தந்தைக்குக் கெடுதலையும், சந்திரனுடன் சேர்ந்தால் தாய்க்கு மாரகத்தையும், செவ்வாயுடன் கூடினால் சகோதர தோஷத்தையும் தருவார். குருவுடன் இணைந்தால் புத்திர தோஷத்தையும், சுக்கிரனுடன் சேர்ந்தால் பெண்களால் தொல்லையையும் தருவார். சனியுடன் கூடும் மாந்தி அங்கஹீனத்தையும், ராகுவுடன் சேரும்போது விஷத்தால் மரணத்தையும் தருவார். மாந்தியின் நிலையறிந்து ஆயுள் நிர்ணயம் செய்வதே கேரள ஜோதிடத்தின் தனிச்சிறப்பாகும்.

ஆயுளுக்கு ஆபத்து உண்டா?

கேள்வி: என் மகன் சில ஆண்டுகளாக அடிக்கடி நோயால் பாதிக்கப்படுகிறான். அவனுடைய ஆயுளுக்கு ஆபத்து வருமா? அவன் நோய்நீங்கி நீண்ட ஆயுளைப் பெறுவதற்கான பரிகாரத்தைக் கூறமுடியுமா?

-திருமதி ஜெயந்தி, கோவை.

(ஆரூட எண்- 41; பூரம் 1-ஆம் பாதம்)

* ஜாதகரின் தாயார் வகை முன்னோர்களில் ஒரு கன்னிப்பெண் துர்மரணம் அடைந் துள்ளதும், அதனால் ஏற்பட்ட சாபமே குடும்பத்தில் நோய் உண்டாவதற்குக் காரணமென்பது தெளிவாகிறது. இதற்குப் பரிகாரம் பார்க்கவேண்டும்.

* ஒன்பதாமதிபதி பத்தாமிடத்தோனு டன் சேர்ந்து ஒரே நட்சத்திர பாதத்திலிருப்பது, குலதெய்வ வழிபாட்டில் குறை யிருப்பதைக் காட்டுகிறது.

* குருவும் சூரியனும் ஏழிலமர்ந்து மாரகத்தைக் கெடுக்கிறார்கள். மேலும் லக்னத்தின்மீதும், பதினொன்றாவது வீட்டின்மீதும், மூன்றாவது வீட்டின்மீதும் குருவின் பார்வை உண்டு. அதனால் ஆயுள்பயம் இல்லை.

* சூரியன் லக்னாதி பதியானாலும் பார்வையினால் தோஷமுண்டு. இத னால் உடல் உபாதை கள் வந்து மறையும்.

* ஆயுள் ஸ்தானா திபதியாகிய எட்டாம் வீட்டோன், ஏழாம் வீட்டிலிருப்பது மாரகத்திற்கு ஒப்பான கண்டத்தைத் தரும்.

* இரண்டு, ஏழாமிடத்து அதிபதிகளின் சேர்க்கையானது சர ராசிக்கு மாரகத்தைத் தருமென்றாலும், சோழி லக்னம் அமைந்த சர ராசியாகிய சிம்மம் குருவின் ஏழாம் பார்வையைப் பெறுவதால் ஆபத்திலிருந்து தப்பிக்கலாம்.

* சோழி லக்னத்திற்கு எட்டு, ஆறு, பன்னிரண்டாம் வீடுகள் தொடர்பிலில் லாததால் நோயால் மரணமில்லை என்பதும் உறுதியாகிறது.

பரிகாரம்

பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் சிவனுக்கு, வாசனை மலர்களால் அர்ச்சனை செய்யவேண்டும். வெள்ளிக்கிழமை காலை ராகு காலத்தில், லலிதா சஹஸ்ரநாமம் கொண்டு அம்பிகைக்கு அர்ச்சனை செய்யவும். தேவி மாகாத்மியத்தில் வரும் தாந்த்ரோக்த ராத்ரி சூக்தம் படித்துவர நல்ல பலனுண்டாகும். ஸ்ரீ வாஞ்சியம் சென்று வாஞ்சிநாதேசுவரரை வணங்கினால் ஆயுளுக்கு வந்த ஆபத்து நீங்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala040322
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe