Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (57) -லால்குடி கோபாலகிருஷ்ணன்

/idhalgal/balajothidam/kerala-astrological-secrets-57-lalgudi-gopalakrishnan

பிரசன்னம் பார்க்க வந்தவரின் விழித்த கண்களில் சோர்வும், விரக்தியும் உறங்கிக் கொண்டிருந்தன. தான் பத்தாண்டுகளாக ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், பதவி உயர்வு கிடைக்கவில்லை என்றும் அலுத்துக்கொண்டார். தனக்குப் பதவி உயர்வு கிடைக்குமா என்பதே பிரசன்னத் திற்கான கேள்வி. கிருஷ்ணன் நம்பூதிரி, ஸ்ரீ பகளாமுகியை தியானம் செய்து சோழிப் பிரசன்னத்தைத் தொடங்கினார்.

Advertisment

இரண்டு, ஆறு, பத்து, பதினொன்றாம் பாவங்கள் தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே ஒருவருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது என்பதே அடிப்படை விதி. இந்த அமைப்பு பிரசன்ன ஜாதகத்தில் பொருந்தியுள்ளதால், பதவி உயர்வுண்டு என்பது உறுதியானது.

kj

இந்த அமைப்பில் மூன்றாம் பாவமும் சம்பந

பிரசன்னம் பார்க்க வந்தவரின் விழித்த கண்களில் சோர்வும், விரக்தியும் உறங்கிக் கொண்டிருந்தன. தான் பத்தாண்டுகளாக ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், பதவி உயர்வு கிடைக்கவில்லை என்றும் அலுத்துக்கொண்டார். தனக்குப் பதவி உயர்வு கிடைக்குமா என்பதே பிரசன்னத் திற்கான கேள்வி. கிருஷ்ணன் நம்பூதிரி, ஸ்ரீ பகளாமுகியை தியானம் செய்து சோழிப் பிரசன்னத்தைத் தொடங்கினார்.

Advertisment

இரண்டு, ஆறு, பத்து, பதினொன்றாம் பாவங்கள் தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே ஒருவருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது என்பதே அடிப்படை விதி. இந்த அமைப்பு பிரசன்ன ஜாதகத்தில் பொருந்தியுள்ளதால், பதவி உயர்வுண்டு என்பது உறுதியானது.

kj

இந்த அமைப்பில் மூன்றாம் பாவமும் சம்பந்தப்பட்டதால், இடமாற்றத்துடன்கூடிய பதவி உயர்வே கிடைக்குமென்று சொல்லப்பட்டது. காலச்சக்கர தசையின் அடிப்படையில், பிரசன்ன லக்னம் நின்ற இடத்திற்கு உடல் ராசி, உயிர் ராசி, நவாம்ச ராசியின் கதி பேதங்களைக் கணக்கிட்டு, சுமார் ஏழு மாதங்களில் பதவி உயர்வு கிடைக்குமென்ற நல்ல சேதி தெரிவிக்கப்பட்டது. ஆடுதுறை சூரியனார் கோவிலுக்குச் சென்று வழிபட்டால், நல்ல பதவி உயர்வு கிடைக்குமென்ற உபாயம் அறிவுறுத்தப்பட்டது. பிரசன்ன ஆரூடத்தில் சொல்லப் பட்ட பரிகாரத்தால் பலன் கிடைத் தது.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஜனன ஜாதகத்தைப் பரிசீலிக்கும்போது, நட்சத்திர அதிபதிகளின் வலிமையை சோதிப்பதைப்போல், அந்த நட்சத்திரத்தின் அங்கீசாதிபதியின் பலத்தையும் கணக்கிடுவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அங்கீசாதிபதியுண்டு. அங்கீ சாதிபதியே அந்த நட்சத்திர அதிபதிக்குத் தோள்கொடுத்து உதவுபவன். அஸ்வினி, பரணி, கார்த்திகைக்கு சூரியனும், ரோகினி, மிருகசீரிடம், திருவாதிரைக்கு சந்திரனும், புனர்பூசம், பூசம், ஆயில்யத்திற்கு செவ்வாயும், மகம், பூரம், உத்திரத்திற்கு புதனும், ஹஸ்தம், சித்திரை, ஸ்வாதிக்கு குருவும், விசாகம், அனுஷம், கேட்டைக்கு சுக்கிரனும், மூலம், பூராடம், உத்திரத்திற்கு சனியும், திருவோணம், சதயம், அவிட்டத் திற்கு ராகுவும், பூரட்டாதி, உத்திரட் டாதி, ரேவதிக்கு கேதுவும் அங்கீசாதிபதி களாவார்கள்.

நட்சத்திராதிபதிகளுக்கும், அங்கீசாதிபதிகளுக்கும் இடையே உள்ள தற்காலிக நட்பு, பகையைக் கருத்தில் கொண்டு பலன்களைக் கணிப்பதே கேரள ஜோதிடர் களின் அணுகுமுறை.

மனக் குழப்பம் தீருமா?

கேள்வி: நான் ஒரு தனியார் நிறுவனத்தின் செயலாளராகப் பணிபுரிகிறேன். கடந்த இரண் டாண்டுகளாக குடும்பத்திலும், அலுவலகத் திலும் குழப்பமான சூழ்நிலையே நிலவுகிறது. என் மனக் குழப்பம் தீர ஜோதிடப் பரிகாரத் தைக் கூறமுடியுமா?

-வரலட்சுமி, பெங்களூரு.

(ஆரூட எண்- 96; சதயம்-4)

* சோழி லக்னம் ராகுவின் சதய நட்சத்திரத்தில் அமைந்துள்ளது.

* நவாம்சத்தில் சோழி லக்னத்திற்கு இரண்டில் சந்திரன் அமை வதால், குடும்பம் மற்றும் வருமானம் பற்றிய கேள்வி என்பது உறுதியாகிறது.

* சோழி லக்னத்திற்கு பத்தாமிடத்தில் கேது தனித்து அமர்வது, தொழிலில் அதிகாரக் குறைவையும், மன விரக்தியையும் சுட்டிக்காட்டு கிறது.

* சோழி லக்னத்திற்கு பாதகஸ்தானமாகிய துலா ராசியின் அதிபதி யாகிய சுக்கிரன் பதினொன்றாம் வீட்டிலிருப்பதும் சாதகமாக இல்லை.

* ஆறாம் வீட்டின் அதிபதியாகிய சந்திரன், மூன்றாம் வீட்டிலிருப்பது ஊருடன் பகை என்பதையும், எதிரிகளால் தோல்வி என்பதையும் தெளிவாக்குகிறது.

* சோழி லக்னத்திற்கு அறுபத்து நான்காவது நவாம்சம் ஹஸ்தம் மூன்றில் அமைவதால், கடுமையான மனக்குழப்பமும் வேதனையும் இருப்பது தெரிகிறது.

* தோஷம் கடுமையாக உள்ளதால் பரிகாரம் செய்வது அவசியம்.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை திருசெந்தூர் சென்று சத்ரு சம்ஹார ஹோமம் செய்யவேண்டும்.

வியாழக்கிழமை திருப் பட்டூர் பிரம்ம புரீஸ்வரர் கோவிலுக்குச் சென்று வழி பட்டால், வாழ்க்கை வளமாகும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala250222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe