Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (54) -லால்குடி கோபாலகிருஷ்ணன்

/idhalgal/balajothidam/kerala-astrological-secrets-54-lalgudi-gopalakrishnan-0

கிருஷ்ணன் நம்பூதிரி அன்று சற்று ஆயாசமாக அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்.

Advertisment

அன்றைய தினம் அவர் வசிக்கும் ஊர் தெய்வத்தின் பண்டிகை என்பதாலும், விடுமுறை என்பதாலும் பெரிய கூட்டமில்லாமல் இருந்தது.

அப்போது அருகே இருக்கும் பழமையான அம்மன் கோவிலின் தாந்த்ரி இவரைத் தேடிவந்தார். வந்தவரை உபசரித்தார் நம்பூதிரி. வந்த தாந்த்ரி தமக்கு சமீபத்தில் தன் தந்தையின் பூஜைமுறை வந்துவிட்டதென்றும், தந்தையார் தற்போது பேசமுடியாத நிலையில் நோயில் விழுந்துவிட்டதால், கோவிலின் மூலமந்திர உபதேசம் தனக்குக் கிட்டுவது தடைப்பட்ட தால், மூலமந்திர உபதேசம் எவ்வாறு கிட்டுமென்று பிரசன்னம்மூலம் அறிந்துகொள்ள நம்பூதிரியைத் தேடிவந்ததாகவும் தெரிவித்தார். மண்டைக் காட்டு பகவதியை வேண்டி பிரசன்னத்தைத் தொடங்கினார்.

வந்த லக்னத்தையும், எட்டு மற்றும் ஒன்பதாம் பாவங் களைக்கொண்டும் மந்திரத்தின் கீலகம், பீஜத்தை அறிந்து, பின் ஷக்தி ரிஷி போன்றவற்றையும் அறிந்தார

கிருஷ்ணன் நம்பூதிரி அன்று சற்று ஆயாசமாக அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்.

Advertisment

அன்றைய தினம் அவர் வசிக்கும் ஊர் தெய்வத்தின் பண்டிகை என்பதாலும், விடுமுறை என்பதாலும் பெரிய கூட்டமில்லாமல் இருந்தது.

அப்போது அருகே இருக்கும் பழமையான அம்மன் கோவிலின் தாந்த்ரி இவரைத் தேடிவந்தார். வந்தவரை உபசரித்தார் நம்பூதிரி. வந்த தாந்த்ரி தமக்கு சமீபத்தில் தன் தந்தையின் பூஜைமுறை வந்துவிட்டதென்றும், தந்தையார் தற்போது பேசமுடியாத நிலையில் நோயில் விழுந்துவிட்டதால், கோவிலின் மூலமந்திர உபதேசம் தனக்குக் கிட்டுவது தடைப்பட்ட தால், மூலமந்திர உபதேசம் எவ்வாறு கிட்டுமென்று பிரசன்னம்மூலம் அறிந்துகொள்ள நம்பூதிரியைத் தேடிவந்ததாகவும் தெரிவித்தார். மண்டைக் காட்டு பகவதியை வேண்டி பிரசன்னத்தைத் தொடங்கினார்.

வந்த லக்னத்தையும், எட்டு மற்றும் ஒன்பதாம் பாவங் களைக்கொண்டும் மந்திரத்தின் கீலகம், பீஜத்தை அறிந்து, பின் ஷக்தி ரிஷி போன்றவற்றையும் அறிந்தார். மந்திரம் ராஜராஜேஸ்வரியுடைய மிகவும் உன்னதமான சோடஸாக்ஷரி என்று அறிந்து கூறினார். மந்திரம் தெரிந்தாலும் குரு இல்லா மந்திரம் பூஜைக்குப் பலன்தராது என்பதால், தாந்த்ரி குரு தெரியவேண்டும் என்று கேட்கவே, நம்பூதிரி குரு யார்- அவர் இருக்குமிடம் எதுவென்றறிய மேலும் பிரசன்னத்தைத் தொடர்ந்தார்.

Advertisment

ff

அதில்தான் ஆச்சரியம் அதிகமிருந்தது. வந்த தாந்த்ரிக்கு குரு அவரைவிடவும் இளைய வயதுடையவராக இருப்பர் என்றும், குரு துலா லக்னம் மிதுன ராசியில் ராம நாமம் கொண்டு, தமிழ்நாட்டில் வடகிழக்கில் கடற்கரையோர நகரத்தில் இருக்கிறார்; அவரை தாந்த்ரியின் மகனது நண்பர்மூலம் அடையாளம் காணமுடியும் என்றும், வரும் மாசி மாதத்திற்குள் மந்திர உபதேசம் கிடைத்துவிடும் என்றும் கூறினார் நம்பூதிரி. பின் இரண்டு மாதங்கள் கழித்து திரும்ப வந்த தாந்த்ரி யின் முகத்தில் இருக்கும் மாற்றத்தைக் கண்ட நம்பூதிரி, அவருக்கு பிரசன்னத்தின் பலன் கிட்டிவிட்டதென்று அறிந்துகொண்டார். வந்த வரிடம் விசாரித்தபின்தான் தெரிந்தது- தாந்த்ரியின் மகனது நண்பரின் குரு சென்னையில் வசிப்பதும், சென்னை சென்ற தாந்த்ரி, எதேச்சையாக மகனது நண்பர் வீட்டிற்குச் சென்றபோது அவரை சந்தித்ததும், அவர் இவரைவிட முப்பது வயது இளையவரானாலும், இவரது நிலை மற்றும் கோவிலின் நன்மை கருதி, மாசி மாதம் ஆரம்பிக்கும் முன்னரே தாந்த்ரிக்கு மூலமந்திர உபதேசம் செய்ததையும் கூறி, பிரசன்னத்தின் மகிமையை வியந்து நன்றி கூறிச் சென்றார்.

கேரள ஜோதிட சிறப்பு

தசாபுக்திகள் பலவிதமாக இருந்தாலும், பெரும்பான்மையாக நடைமுறையில் இருப்பது விம்சோத்தரி தசை மட்டுமேயாகும். ஆனாலும் இன்னும் சில தசாபுக்திகள், விம்சோத்தரியின் பலன்களைவிடவும் கூர்மையாகப் பலன்களை உரைக்க யோகினி தசை உபயோகிக்கப்படுகிறது. யோகினி தசையில் மட்டுமே நூற்றெட்டு நட்சத்திர பாதத்திற்கும் தசாபுக்திகள் நகர்த்தப் பட்டு, தசா லக்னம், ஜனன லக்னம் ஆகியவற்றைக் கணக்கில்கொண்டும், விம்சோத்தரியின் நட்சத்திர தசையைக் கணக்கில்கொண்டும் பலன்கள் சொல்வது கேரள ஜோதிடத்தில் மட்டுமே உள்ள தனிச்சிறப்பாகும்.

கேள்வி: மகனின் பயம் தீருமா?

(கொடுத்த எண்: 78).

* பிரசன்ன லக்னத் தின் மூன்றாம் பாவத்தில் எட்டாமதிபதி அமர்வதும், அவர் நான்காம் பாவாதிபதி யுடன் சேர்வதும், பிரசன்னம் கேட்ட தாயார் ஏதோவொரு காரியத்தை மறைப்பது தெரிகிறது.

* ஐந்தாமதிபதி சுயவீட்டில் விருச்சிகத்தில் இருப்பதும், கேதுவுடன் இருப்பதும் மகனின் பயத்தைக் காட்டுகிறது.

* காலபுருஷனின் எட்டாம் ஸ்தானமாக இருப்பதாலும், அது பிரசன்ன லக்னத்தின் பன்னிரண்டாம் பாவமாக இருப்பதாலும் இந்த பயம் கனவினால் ஏற்பட்டதென்றும் தெரிகிறது.

* மாந்தி நான்காம் பாவத்தில் இருப்பதாலும், அது ஜீவ நட்சத்திரம், ஜீவ ஸ்தானமாக இருப்பதாலும், குலதெய்வத்திற்கு ஜீவ தானம்-

அதாவது ஆடு, கோழி போன்ற உயிரினங் களை நேர்ந்துவிடும்- பலியிடும் பழக்கத்தை விட்டுவிட்டதையும் காட்டுகிறது.

* பாதகாதிபதி இரண்டாம் பாவத்தில் அமர்வதாலும், அவரே ஏழு மற்றும் பத்தாம் பாவத்தின் ஆதிபத்தியம் கொள்வதாலும், வியாபாரத்தின் வருமானம் தடைப்படுகிறது. இருந்தாலும் இரண்டாமதிபதி சனி அங்கிருப்பதால் நிலைத்த வருமானம் இருக்கும். நிலம் மற்றும் தோட்டத்தினால் வரும் வருமானம் தடைப்படும்.

பரிகாரம்

* வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு பூஜை செய்வதும், கிருத்திகை மற்றும் விசாக நட்சத்திரத்தில் முருகனைப் பூஜிப்பதும் பயத்தைப் போக்கும்.

* புற்றுக் கோவில்களையும், சர்ப்ப ரூபத்தில் இருக்கும் சுப்ரமண்யரையும் வழிபட, பயத்தினால் வரும் தொந்தரவு வராது.

ஜனன ஜாதகத்தில் ஏதும் பெரிய பிரச்சினைகள் இல்லை; கவலை வேண்டாம்.

குறிப்பு: ஜனன ஜாதகத்தில் மாந்திக்கு 64-ஆம் நவாம்சம் ரோகிணியாக வருவதால், பகவத்கீதை பாராயணம்தான் இவ்வளவு நாட்கள் மகனைக் காப்பாற்றிவருகிறது. அதை நிறுத்த வேண்டாம். "ஹரே ராம ஹரே கிருஷ்ண' மந்திரத்தை அடிக்கடி கூறிவர வாழ்வில் பூதப் பிரேதத் தொல்லைகள் இந்த சிறுவனை அணுகாது.

(தொடரும்)

செல்: 63819 58636

bala280122
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe