Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (52) -லால்குடி கோபாலகிருஷ்ணன்

/idhalgal/balajothidam/kerala-astrological-secrets-52-lalgudi-gopalakrishnan-0

பொதுவாக பிரசன்னம் பார்க்க வருபவர்கள் சோக சித்திரமாக வருவது இயல்புதான் என்றாலும், அந்தப் பெண்ணின் முக வாட்டம் நெஞ்சை நெருடியது. இருபது வயதுகூட நிறைவுபெறாத தன் மகன் மரணமடைந்ததன் காரணத்தை அறிய பிரசன்னம் பார்க்க வந்திருப்பதாகத் தெரிவித்தார், அந்தப் பெண்மணி. வேதனைப் பெருமூச்சுடன் பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. பிரசன்ன லக்னம் மேஷமாக அமைந்து, அதன் ஒன்று, எட்டுக்கு அதிபதியாகிய செவ்வாய் பரம நீசப் பாகையில் கடகத்தில் அமர்ந்திருந்தது, ஜாதகர் முழு ஆயுளை நிறைவு செய்யவில்லை என்பதைக் காட்டியது. ஒன்பதாமதிபதி ஆறாம் வீட்டில் பாவிகளின் தொடர்பிலிருப் பதால், ஜாதகர், பெற்றோரு

பொதுவாக பிரசன்னம் பார்க்க வருபவர்கள் சோக சித்திரமாக வருவது இயல்புதான் என்றாலும், அந்தப் பெண்ணின் முக வாட்டம் நெஞ்சை நெருடியது. இருபது வயதுகூட நிறைவுபெறாத தன் மகன் மரணமடைந்ததன் காரணத்தை அறிய பிரசன்னம் பார்க்க வந்திருப்பதாகத் தெரிவித்தார், அந்தப் பெண்மணி. வேதனைப் பெருமூச்சுடன் பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. பிரசன்ன லக்னம் மேஷமாக அமைந்து, அதன் ஒன்று, எட்டுக்கு அதிபதியாகிய செவ்வாய் பரம நீசப் பாகையில் கடகத்தில் அமர்ந்திருந்தது, ஜாதகர் முழு ஆயுளை நிறைவு செய்யவில்லை என்பதைக் காட்டியது. ஒன்பதாமதிபதி ஆறாம் வீட்டில் பாவிகளின் தொடர்பிலிருப் பதால், ஜாதகர், பெற்றோருக்கு கர்மா செய்யும் நிலைமாறி, பெற்றோர், ஜாதகருக்கு ஈமச்சடங்கு செய்யும் நிலை ஏற்பட்டது. முற்பிறவியில் ஏற்பட்ட சாபத்தினால் விளைந்ததே இந்தத் துயர நிகழ்வு என்பதைப் புரிந்துகொண்டார். சேதுக்கரையாகிய திருப்புல்லானி சென்று பசுவையும் கன்றையும் தானமாகத் தந்தால், கர்மாவின் பாதிப்பு முழுவதுமாக நீங்கி, இறந்த மகனின் ஆன்மா நற்கதியடையுமென்று தெரிவிக்கப்பட்டது.

Advertisment

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒரு ஜாதகருக்கு, நடப்பு தசையின் பலன்களைக் காண தசா லக்னம் என்ற முறையைப் பயன்படுத்துவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. கோட்சார கிரக சஞ்சாரத்தையும், அஷ்ட வர்க்கக் கணிதத்தையும், நடப்பு தசை மற்றும் புக்தி அமையும் இடத்தையே லக்னமாகக்கொண்டும் பலன் காணும் முறையே தசா லக்னம். ஜனன காலத்தில் இருக்கும் ஜாதகரின் மனோ நிலையும், நடப்பு காலத்து எண்ணங்களும், அதற்கேற்ப செயலும் மாறுபடுவதால், தசா லக்னத்தை ஜனன ஜாதகத்தில் பொருத்தி, அதன் நவாம்சத்தைக்கொண்டு, கால நிலையையும், நிகழ்வுகளையும் நிர்ணயம் செய்யும் முறையே கேரள ஜோதிடத்தின் சிறப்பு.

Advertisment

வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்குமா?

கேள்வி: நான் என் உறவினருடன் சேர்ந்து கூட்டு வியாபாரம் செய்துவருகிறேன். எங்களுக்குள் ஏற்பட்ட கணக்கு வழக்குப் பிரச்சினையால், வியாபாரம் முடங்கிவிட்டது. பிரச்சினை நல்லபடியாக முடிந்து, வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள தடை நீங்குமா? அதற்கான பரிகாரத்தைக் கூறமுடியுமா?

-செல்வராஜ், நாமக்கல்.

(ஆரூட எண்-27; புனர்பூசம் மூன்றாம் பாதம்)

* சோழி லக்னத் திற்கு பாதக ஸ்தானமாகிய ஏழாம் வீட்டில் லக்னாதிபதியாகிய புதன் அமைவதும், பாதகாதிபதியாகிய குரு ஒன்பதாமிடத்தில் அமர்வதும், ஜாதகரின் கூட்டு வியாபாரத்தில் ஏற்பட்ட குழப்பத்தைக் காட்டுகிறது.

vv

* சோழி லக்னத் திற்கு பத்தாமிடமாகிய மீன ராசியில் பிரசன்ன லக்னம் இருப்பது சுயதொலின் முடக்கத்தை சுட்டிக்காட்டுகிறது.

* சோழி லக்னத்திற்கு குரு பகவானின் ஐந்தாம் பார்வை கிடைப்பதால், கூட்டு வியாபாரத்தில் பிரிவினை வந்தாலும், ஜாதகர் வியாபாரத்தைத் தொடர்ந்து செய்வார் என்பது உறுதியாகிறது.

* இரண்டாம் வீட்டில் சந்திரன் இருப்பதால், ஜாதகர் புத்திசாலிதனத் தாலும், செல்வாக்கா லும் வியாபாரத்தில் ஏற்பட்ட தடையை நீக்கிவிடுவார்.

* சோழி லக்னத் திற்கு பாதகத்தில் சூரியன் இருப்பதால், அரசாங்கத்திற்குக் கட்டவேண்டிய நிலுவைத் தொகையா லும் புதிய பிரச்சினை உருவாகும்.

* ஆறாம் பாவத் தில் கேதுவும், பன்னிரண்டாம் பாவத்தில் ராகுவும் இருப்பது, பாகப்பிரிவினையில் இழுபறி நிலை நீடிக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

பரிகாரம்

* செவ்வாய்க்கிழமை திருசெந்தூர் சென்று சத்ரு சம்ஹார ஹோமம் செய்யவேண்டும்.

* சிக்கல் சிங்காரவேலரை வணங்கி னால், அவர் அருளால் பிரச்சனைகள் நீங்கும்.

bala210122
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe