ன்றைய தினம் மார்கழி அமாவாசையாக இருந்ததால், கிருஷ்ணன் நம்பூதிரி தான் செய்யவேண்டிய முன்னோர் வழிபாடுகளை முடித்துவிட்டு, தன்னை நாடிவந்த மக்களுக்குப் பிரசன்னம் பார்க்க அமர சற்று காலதாமதமானது. அவர் வரும் வழியில் அவருடைய மேல்துண்டு தவறி விழ, எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று அதனைத் தூக்கிக்கொண்டு ஓடியது, அதனால் அவர் மீண்டும் வழிபாடுகளை முடித்து, புதிய வேட்டி மற்றும் உத்திரியம் தருவித்து அணிந்துவரவும் கால தாமதமானது.

எப்போதும் பிரசன்னத்தின் நிமித்தங்களை அலசிப்பார்க்கும் குணமுள்ள நம்பூதிரிக்கு நடந்த நிகழ்வுகளையும் அதற்கான பிரசன்ன லக்னத்தையும் ஆராய்ந்த படியே வீடுவந்து சேர்ந்தார். வந்தவர் பிரசன்னம் பார்க்க அமர்ந்ததும், ஒரு நடுத்தர வயதுடைய தம்பதி வந்து அமர்ந்தனர். அவர்களின் மகள்கள் இருவருக்கும் திருமணம் நடப்பதில் தாமதமாவதும், நெருங்கிவரும் வரன்களெல்லாம் கடைசி நேரத்தில் தொடர்பற்றுப் போவதுமாக இருப்பதாலும், மகள்கள் இருவரும் முதிர்கன்னிகளாக வீட்டிலிருப்பது மிகுந்த வருத்தமளிப்பதாகவும், அதனால் பிரசன்னத்தின்மூலம் பதில் தேடி இவரைப் பார்க்க வந்ததாகவும் தெரிவித்தனர். சிதம்பர சிவகாம கோட்டத்தில் உறையும் சிவகாம சுந்தரியை வேண்டி சோழிகளைச் சுழற்றினார் நம்பூதிரி.

dd

Advertisment

பிரசன்ன லக்னத்தைப் பார்த்தவருக்கு மிகுந்த ஆச்சரியம். சற்றுமுன் தன் மேல்துண்டை நாய் தூக்கிச்சென்ற நிகழ்வின் பிரசன்னமும், இப்போதுள்ள பிரசன்னமும் ஒரேமாதிரி இருந்தது. நிமித்தங்களின் அர்த்தம் கிரக நிலைகளைக் காண முற்றிலும் புரிந்தது. ராகு, சூரியன் சேர்ந்து பத்தாம் பாவத்தில் அமர, மாந்தியும் கேதுவும் பாதகத்தில் இருந்து, சந்திரன் பாதகாதிபதியாகி, குருவுக்குப் பின்னே இந்த கிரக அமைப்புகள் இருக்க, செவ்வாய் இந்த அமைப்பை சமசப்தமப் பார்வை பார்ப்பதோடு, விரோத அர்க்களமும் புரிந்தார்.

வந்தவர் தமக்கு உரிமையில்லாத தன் சிற்றப்பாவின் சொத்தை அபகரித்து அதில் வயிறு வளர்த்ததும், மேலும் அவர் மருத்துவ உதவிக்காகத் தனது சொத்தை விற்கமுயன்றபோது அடாவடி செய்து தடுத்ததும் பிரசன்னத்தில் தெரிந்தது. மேலும் மகள்கள் இருவரும், சந்திரனின் இருப்பை கவனிக்கும்போது சாக்த வழிபாடுள்ள ஒரு பக்தனின் மனதைப் புண்படுத்தியதால் பெற்ற சாபத்தையும் தெளிவாக பிரசன்னம் கூறிற்று. நம்பூதிரி இந்த அமைப்பை விளக்க, வந்த தம்பதி தலை குனிந்தனர். பகவானிடம்கூட தவறிழைக்கலாம்; ஆனால் பக்தனிடம் செய்த தவறு அவனே விரும்பாவிட்டாலும் தண்டிக்கும் என்று நம்பூதிரி விளக்கினார். இந்த மாதிரியான தவறுகளுக்கு கர்ம விபாகம்மூலம் பரிகாரம் காணவேண்டி இருப்பதால், வந்தவர்களை முதலில் தவறாக சம்பாதித்த சொத்தை திரும்பக் கொடுத்துவிட்டு, மகள்களையும் அம்பாளிடம் சரணடைந்து தவறுக்கு மன்னிப்பு கோர அறிவுறுத்தினார்.

பிரசன்னத்தை முடித்து எழுந்தார் நம்பூதிரி. அவர் எழவும், காணாமல் போன அவரது மேல்துண்டை எடுத்துக்கொண்டு அவரின் நண்பர் வீட்டினுள்ளே வந்தார்.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

கோட்சாரத்தில் கிரகங்கள் கடக்கும் சில முக்கிய இடங் களைக்கொண்டு பலன்கூறும் வழிமுறைகள் உண்டு. இந்த இடங்களை சஹம் என்று வடமொழியில் அழைப்பதுண்டு. புண்ணிய சஹம், வித்யா சஹம் , ஞான சஹம் என்று ஐம்பதுவிதமான சஹங்கள் உண்டு. ஜனன ஜாதகத்தில் இந்த சஹங்களைக் கணக்கிட்டு, கோட்சாரத்தில் இந்த சஹத்தில் எந்த கிரகம் நடக்கிறது என்று பார்த்து, தசாபுக்திகளின் வகைகளை ஜாதகத்திற்கு ஏற்றவாறு கணித்துப் பின் பலன்சொல்வது கேரள ஜோதிடத்தில் மட்டுமே உள்ள தனிச்சிறப்பு. தீர ஆராயாமல் கிரகத்தின் நிலைப்பாட்டை சந்திரனின் இருப்பிடத்தை மட்டுமே வைத்து ராசிபலன் சொல்வது, "சூரியன் நமக்கு மேலே உள்ளது' என்று சொல்வது எவ்வாறு அனைவரும் அறிந்ததோ அதைப்போலாகிவிடும்.

கேள்வி: திருப்பதி பெருமாளிடம் வேண்டிய வேண்டுதல் மறந்துவிட்டது.

அதைக் கண்டுபிடிக்க முடியுமா?

(கொடுத்த எண் 42; டிசம்பர் 30, 2021, நேரம் காலை 10:18:30) ப் நான்காமதிபதியும் பாதகாதிபதியும் ஒருவராக வருவது, கடவுளின் கோபத்தைக் காட்டுகிறது.

* செவ்வாய் தன் சுய வீட்டிலேயே இருப்பதும், கேதுவுடன் இணைவதும் கோபத்தின் வீரியத்தை அதிகப்படுத்துகிறது.

* செவ்வாய், கேது இருவரும் சந்நியாசத்தைக் குறிப்பதும், அவர்கள் நான்காம் வீட்டிலிருப்பதும், சந்நியாசிக்கு செய்துவந்த பூஜை நிற்பதால் வரும் மனக் கவலையைக் காட்டும்.

* லக்னாதிபதி ஐந்தாம் பாவத்தில் அமர்வதும், அவருடன் சேர்ந்து வக்ர சுக்கிரன் இருப்பதும், ஐந்தாமதிபதி ஏழாம் பாவத்தில் அமர்வதும், மந்திரங்கள், பஜனை போன்ற காரியங்கள் செய்யாமல் விட்டு வந்ததையும் காட்டுகிறது.

* ஏழாம் பாவத்தில் இருந்து குரு லக்னத்தைப் பார்ப்பதால் தற்போது பெரிய இடர் ஏதும் இல்லாதது தெரிகிறது. குரு மீனம் ஏறிவிட்டால் தொல்லை கள் தொடரும்.

* மாந்தி ஏழாம் பாவத்தில் குருவுடன் இருப்பதும், குருவின் நட்சத்திரத்திலேயே இருப்பதும், யாரோ ஒரு தவறான குருவின் வழிகாட்டுதலில் காரியங்களை நிறுத்தியது தெரிகிறது.

* இரண்டு மற்றும் பதினொன்றாம் பாவங்களின் அதிபதி புதன் ஆறாம் பாவத்தில் மகரத்தில் சனியோடு சேர்வதும், மகரம் மலைகள் மற்றும் மடுவைக் குறிக்கும் ராசியாக இருப்பதும், சனி, சந்திரன் இருக்கும் நட்சத்திரமான திருவோணம் ஏறுவதாலும், சந்திரகிரி என்ற திருப்பதி பெருமாளின் கிரியை தடைப்பட்டது தெரிகிறது.

* மாந்தி நீர் ராசியிலிருந்து நெருப்பு ராசியான மேஷத்தில் நவாம்சத்தில் அமர்வதும், அதுவே ஒன்பதாம் பாவமாக இருப்பதாலும் தவறான வழிகாட்டுதல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

பரிகாரம்

நாரத ஸ்துதி பாராயணம் செய்துவர, வேண்டுதல் நினைவுக்கு வந்து, சீக்கிரம் தெய்வ கோபம் தீரும்.

(தொடரும்)

செல்: 63819 58636