கிருஷ்ணன் நம்பூதிரி தேவி உபாசகராக இருந்தாலும், சைவ சமயம் மற்றும் காஷ்மீர சைவத்தின்மீதும், அதன் சித்தாந்தங்கள் சாக்தத்தோடு எவ்வாறு இணைகின்றன என்றும், த்ரிகா சித்தாந்தம் மீதும் அதீத பற்று வைத்திருந்தார். திருவாரூர் தியாகராஜப் பெருமானை தரிசிக்கச் சென்றிருந்தவரை, இவர் வந்தி ருப்பதைக் கேள்வியுற்று அங்கும் ஒரு படை அவரைச் சூழ்ந்தது. மருத்துவ ருக்கும் ஜோதிடருக்கும் எங்கு சென்றாலும் நிம்மதி கிடையாதென்று நம்பூதிரியின் குரு அடிக்கடி சொல்வதன் உண்மை அவர் நினைவுக்கு வந்து தனக்குள் ளாகவே சிரித்துக்கொண்டார். வந்தவர் களுக்கு ஜோதிடம் காணவேண்டும் என்னும் விதி உள்ளபடியால், ஒருநாள் மாத்திரம் அதற்காக நேரம் ஒதுக்கி திருவாரூரில் அமர்ந்தார்.
அன்று திங்கட்கிழமை. நித்தியப் பிரதோஷத் தலமான திருவாரூரில் பிரதோஷ வேளையிலேயே ஒருவர் பிரசன்னம் காணவந்தார். வந்தவர் சைவத் தின் மொத்த அடையாளங்களையும் உடலில் தாங்கி, சிவகணம்போலவே தோன்றினார். தான் செய்யும் தொழில் ஒரு வருடமாக மிகவும் முடங்கிவிட்டதாகவும், என்ன பிரச்சினை என்று தெரிய வில்லை என்றும், அதற்காகப் பிரசன்னம் காணவந்ததாகவும் கூறினார். கமலாம்பி கையை வேண்டி பிரசன்னதிற்கு சோழிகளைச் சுழற்றினார் நம்பூதிரி.
பிரசன்னத்தில் குரு, கேது இருவரும் பாதகமாகி பத்தாமிடத்தைப் பார்த்தனர். மேலும் மாந்தியின் தொடர்பு குரு மற்றும் சூரியனுக்கும் வந்தது. கேது ஆறாமிடத்தில் அமர்ந்து நான்காம் பாவத்தின் தொடர்புகொண்டு, தனுசின் விரோத அர்க் களமும் கொண்டிருந்தது. வந்தவர் சிவன் கோவிலின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து தொழில் செய்வதாலேயே இந்தப் பிரச்சினையென்று தெரிந்தது. அதுவும் சிவனின் தெற்கு திசையிலிருப்பதும் தெரியவந்தது. ஆனால் வந்தவரின் லக்னத்திற்கும் சந்திரனுக்கும் தொடர்பில்லாமல் இருப்பதால், இவருக்குத் தெரியாமல் இந்தக் காரியம் நடந்திருக்கவேண்டும் என்றும் பிரசன்னம் வந்தது.
வந்தவரும் விவரத்தை அறிந்துகொண்டு, அவரின்கீழ் தொழில் செய்யும் பல ஆட்களைக் கேட்டபின்தான்- அவரின் அரிசிமண்டி வியாபாரத்தின் ஒரு கிடங்கை, திருவாரூர் கோவிலின் ஒரு பகுதியில், அறநிலையத்துறை வாடகைக்கு விடும் ஒரு அறைக்கு மாற்றியது தெரியவந்தது. இந்த அறையானது சோழர் காலத்தில் வாழ்ந்த ஒரு முனிவருக்கு சிவபெருமான் காட்சிகொடுத்த சந்நிதி. அது காலப்போக்கில் சில முறையற்ற மனிதர்களால் வாடகை இடமாக மாறியதும், அங்கு வருபவரெல்லாம் தொழில் செய்து உலகைவிட்டே கிளம்புவதும் வாடிக்கையாக இருந்தது. வந்தவருக்கோ சிவன்மீது அதீத பக்தி இருந்ததன் காரணத் தால், பேரிடர் நம்பூதிரியின் பிரசன்னம்மூலம் தவிர்க்கப்பட்டது. சிவபக்தனாக இருந்தாலும் சிவ அபவாதம் அதன் பாவத் தைக் கொடுத்தே தீருமென்று நாம் சுந்தரரின் கதையில் பார்த்தா லும், இங்கு அது நேரிலேயே நடந்தது. வந்தவர் உடனே அந்த கிடங்கை மாற்றி, தாம் அறியாமல் செய்த தவறுக்காக தியாகேசரி டம் மன்னிப்புக் கேட்க விரைந் தார். தியாகேசரின் கோவில் மணி நம்பூதிரியின் ஆச்சரியத் திற்கு ஆமாம் சொல்வதுபோல உரக்க ஒலித்து, நித்தியப் பிரதோஷத்தின் நிறைவையும், வந்த சிவபக்தரின் கவலையையும் ஒன்றாக முடித்து வைத்தது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
பிரசன்னங்களில் பல்வேறு வகைகள் இருந்தாலும், பொதுவாக இப்போது கேரளத்தில் பின்பற்றப்படுவது அஷ்டமங்களப் பிரசன்னம், தாம்பூலப் பிரசன்னம் மற்றும் சோழிப் பிரசன்ன வகைகள் மட்டுமே. மேலும் கோவில்களின் நடைமுறை மாற்றங்கள் மற்றும் தாந்திரீக குறைபாடுகள் காண்பதற்கும் களை வதற்கும் தேவப் பிரசன்னம் காணப்படுகிறது.
கேரள ஜோதிடத்தில் மட்டுமே இவ்வாறான தேவப் பிரசன்னமும் அதன்மூலம் கோவிலைப் பற்றியுள்ள குறைகள் நீக்க பரிகாரங்கள் செய்யவும் வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
தேவ பிரசன்னத்தில் ராசி சக்கர பூஜை, ஸ்வர்ண லட்சணம், அட்சர லட்சணம், வர்ண லட்சணம், ஸ்த்ரீ புருஷ லட்சணங்கள் மற்றும் திக்பலம் போன்றவையும், தீப லட்சணம் மற்றும் மங்களப் பொருளின் தேர்வுகள்கொண்டு பலன்கள் கணிக்கப்படுகின்றன.
இத்துணை நியமங்கள் கொண்ட கணக்கு சரியாக வந்தால்தான் ஜோதிடம் சரியாக இருக்கும். இவ்வாறாக இருப்பதால்தான் கேரள ஜோதிடத்திற்கு சிறப்பு கள் பெரும் பட்டியலாக நீண்டுகொண்டே போகிறது.
தேவப் பிரசன்னம்- எண் 79; ஸ்வர்ணமும் தனுசில் விழுகிறது.
* ஒன்பதாமதிபதி சூரியன், லக்னத்தின் பாதகாதிபதி புதனுடன் காலபுருஷனின் ஒன்பதாமிடமான தனுசில் சேர்வதும், குருவுக்கு கேந்திரத் தில் ராகு, ராகுவுக்கு கேந்திரத்தில் சந்திரன் இருப்பதும், நெருப்பு கிரகங்கள் எல்லாம் நெருப்பு வீட்டில் தொடர்புகொள்வதும், கோவிலில் நெருப்பினால் பாதகம் விளையுமென்று தெரிகிறது.
* கேதுவுடன் செவ்வாய் பன்னிரண்டில் இருப்பது, கார்த்திகை மாதத்தில் மேற்கூறிய பாதகம் ஏற்கெனவே வந்து சென்றது தெரிகிறது.
* இரண்டாமிடத்தில் மாந்தி இருப்பதும், அங்கு சுக்கிரன் வக்ரமாக இருப்பதும் நைவேத்தியத்தில் கலப்படமும், அளவில் குறை இருப்பதையும் காட்டுகிறது.
* அஷ்டமாதிபதி சந்திரன் ஒன்பதில் அமர்வதும், அவர் குருவைப் பார்ப்பதும், சர்ப்ப நட்சத்திரமான ஆயில்யத்துடன் தொடர்புகொள்வதும், கோவில் புற்றுக் கோவில் என்றும், அங்கு ஒரு தெய்வீக நாகம் வசிப்பதையும் காட்டுகிறது.
* இப்போது நடந்த தீ விபத்தினாலும், அதற் குக் காரணமாக இருந்தவர்களையும் காட்டிக் கொடுக்கவே அந்த நாகம் வெளிப்பட்டது, சந்திரன், சூரியன் வீட்டில் இருப்பதால் தெரிகிறது.
* பாதகாதிபதி புதனாக இருப்பதும், ஏழு மற்றும் பத்தாம் பாவங்களை ஆட்சி செய்வதாலும் கோவிலை வியாபாரத் தலம் போல் நடத்துவதும், பூஜைமுறைகளை தாந்திரீக முறைப்படி செய்யாததும் தெரிகிறது.
* மேலும் கோவிலில் சமைப்பவர் தகாத செயல்கள் செய்தபின் வந்து சமைப்பது, குரு மூன்றாம் பாவத்தில் இருப்பதாலும், அவருக்கு பன்னிரண்டில் சனி, சுக்கிரன் சம்பந்தம் இருப்பதாலும் தெரிகிறது.
பரிகாரம்
* சமைப்பவரை மாற்றம் செய்ய வேண்டும்.
தாந்திரீக நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அம்பாளின் முகத்தில் சந்தனக் காப்பு சாற்றி குளிர்விக்க வேண்டும்.
(தொடரும்)