Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (49)

/idhalgal/balajothidam/kerala-astrological-secrets-49

விரிவான ஜோதிடஞானம் உடையவர்களிடம் பிரசன்னம் காண வருபவர்கள் எதையும் மறைக்க முடியாது என்பதற்கு நிறைய சான்றுகளை கிருஷ்ணன் நம்பூதிரியின் வாழ்வில் நாம் கண்டிருக்கிறோம். பல நேரங்களில் மக்கள் தங்களின் ஆதி பிரச்சினையை மறைத்து சிறிய விஷயத்தை முன்னிருத்தி மட்டுமே பிரசன்னத்தின் கேள்வியாக வைப்பார்கள். சில நேரங்களில் நம்பூதிரி உண்மையான காரணங்களைக் கண்டும் அதை வெளியே சொல்லமுடியாத நிலையில் சமூக வழக்கம் இருக்கும். சில நேரங்களில் அவருக்கும் பிரசன்னத்தைக் காணும்போது சிரிப்பு வரும்.

Advertisment

அன்றும் அவ்வாறுதான் ஒரு பெண்மணி பிரசன்னம் காணவந்தார். வந்தவர், தம் உறவினர் இந்தியா திரும்ப ஏற்றநாள் எதுவென்று அறிந்துவருமாறு பிரசன்னம் காண அனுப்பியதாகக் கூறி அமர்ந்தார். கன்னியாகுமரி பகவதியை வேண்டி பிரசன்னத்திற்கு சோழிகளைச் சுழற்றினார் நம்பூதிரி. வந்து விழுந்த பிரசன்ன

விரிவான ஜோதிடஞானம் உடையவர்களிடம் பிரசன்னம் காண வருபவர்கள் எதையும் மறைக்க முடியாது என்பதற்கு நிறைய சான்றுகளை கிருஷ்ணன் நம்பூதிரியின் வாழ்வில் நாம் கண்டிருக்கிறோம். பல நேரங்களில் மக்கள் தங்களின் ஆதி பிரச்சினையை மறைத்து சிறிய விஷயத்தை முன்னிருத்தி மட்டுமே பிரசன்னத்தின் கேள்வியாக வைப்பார்கள். சில நேரங்களில் நம்பூதிரி உண்மையான காரணங்களைக் கண்டும் அதை வெளியே சொல்லமுடியாத நிலையில் சமூக வழக்கம் இருக்கும். சில நேரங்களில் அவருக்கும் பிரசன்னத்தைக் காணும்போது சிரிப்பு வரும்.

Advertisment

அன்றும் அவ்வாறுதான் ஒரு பெண்மணி பிரசன்னம் காணவந்தார். வந்தவர், தம் உறவினர் இந்தியா திரும்ப ஏற்றநாள் எதுவென்று அறிந்துவருமாறு பிரசன்னம் காண அனுப்பியதாகக் கூறி அமர்ந்தார். கன்னியாகுமரி பகவதியை வேண்டி பிரசன்னத்திற்கு சோழிகளைச் சுழற்றினார் நம்பூதிரி. வந்து விழுந்த பிரசன்ன லக்னமும் சுக்கிரனும் இருக்கும் நிலைகண்டு, சற்று உரக்கவே சிரித்துவிட்டார். வந்த பெண்மணி குழப்பத்தில் விழிக்க, உறவினரை தொலைபேசியில் அழைத்து, "பெண் பார்ப்பதற்கு வெள்ளிக்கிழமையைத் தவிர்த்து வேறு கிழமையில் வருவது நல்லது' என்று சொல்லச் சொன்னார்.

keralajothidam

"ஊர் திரும்புவதற்கு நாள் பார்க்கச் சொன்னால், இவர் வெள்ளிக்கிழமை பெண் பார்க்கவேண்டாமென்று கூறுகிறாரே- ஒருவேளை வயதுமுதிர்வால் செவி கேட்கவில்லையோ' என்று, வந்த பெண்மணி மீண்டும் தன் கேள்வியைக் கூற, நம்பூதிரி மறுபடியும் சிரித்துவிட்டு தான் சொன்னதை உறவினரிடம் கூறும்படி சொன்னார்.

அந்தப் பெண்ணும் குழப்பத்துடன் அறையின் கோடிக்குச் சென்று அலைபேசி யில் தகவலைக் கூறியபின்தான் தெரிந்தது- உறவினர் பெண் பார்க்கதான் வருகிறார் என்று. பிரசன்னத்தில் எந்தவொரு மறைவும் இருக்கமுடியாது என்பது சிரித்த முகத்துடன் அமர்ந்திருந்த நம்பூதிரியிடம் தெரிந்தது. அதிரிச்சியோடு விடைபெற்ற பெண்மணியின் முகம் அதற்கு சான்றாக அமைந்தது.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

கேரள ஜோதிடத்தில் தசாபுக்திகளின் ஆரம்ப காலத்தை ஜாதகம் அமைத்துப் பார்த்து, அத்துடன் அமைந்த லக்னத்தின் அஷ்டவர்க்கப் பரல்களையும் சேர்த்து, பின் கோட்சாரத்தின் கிரகங்களையும் அமைத்துப் பார்ப்பதால் பலன்கள் அதிக துல்லியத்தோடு இருக்கின்றன.

மேலும் உலகிலுள்ள அனைவருக்கும் ஒரேவிதமான தசாபுக்தி முறைகொண்டு கணக்கிடப்படுவதை கேரள ஜோதிடம் ஏற்றுக்கொள்ளவில்லை. பகலில் பிறந்தவர்கள், இரவில் பிறந்தவர்கள் ஆகிய இரு தசாபுக்தி முறைகளைக் கொண்டும் பலன்கள் ஆராயப்படுகின்றன.

மேலும் ராசியிலுள்ள கிரகங்கள், ராசியை அடிப்படையாக வைத்துப் பலன்களைப் பார்ப்பதும், நவாம்ச லக்னத்தை வைத்து ராசியில் அமைந்த கிரகங் களை ஆராயும்- ராசி துல்ய நவாம்சம், நவாம்ச துல்ய ராசி ஆராய்வு முறைகள் கேரள ஜோதிடத்தில் மட்டுமே இன்றளவும் பெரிதும் பின்பற்றப்படும் ஆய்வாக இருக்கிறது. இவ்வாறாக பல கோணங்களில் ஒரு ஜாதகம் ஆராயப்படுவது கேரள ஜோதிடத்தில் மட்டுமே உள்ள ஒரு தனிச்சிறப்பு.

கேள்வி: வீடு நல்ல விலைக்கு விற்க முடியுமா?

(கொடுத்த எண்: 87)

* நான்கு மற்றும் பதினொன்றாம் பாவாதிபதி செவ்வாய் பதினொன்றில் அமர்வது, வீடு விற்றால் வரும் வருமானம் பற்றிய கேள்வியென்று தெரிகிறது.

* ஏழாமதிபதி சந்திரன் நான்கில் அமர்ந்து துலாத்தைப் பார்ப்பதும், கேதுவின் நட்சத்திரம் அமைவதும், வீடு விற்கும்போது எதிர்பார்த்த விலை கிடைக்காதென்று தெரிகிறது.

* மேலும் விருச்சிகம் பிரசன்ன லக்னத் திற்குப் பாதகமாக இருப்பதும், அங்கேயே நான்காமதிபதி அமைவதும் லாபத்திற்குப் பாதகமென்று காட்டுகிறது.

Advertisment

KJ

* மேலும் இந்த இடத்தில் அஷ்ட மாதிபதி சூரியன், கேது சேர்வது மேற்கூறிய பாதகத்தை வலுவாக்கும்.

* நான்காம் பாவம் மேஷத்திற்கு பாதக ஸ்தானத்தில் குரு அமர்வதும், அது வீடு விற்கும் ஸ்தானமான மூன்றுக்கு பன்னிரண்டாக அமைவதும் பாதகத்தை அதிகமாக்குகிறது.

* மாந்தி புனர்பூசத்தில் ஆறாம் பாவம் அமர்வதும், பிரசன்ன லக்னத்திற்கு ஆறு மற்றும் பன்னிரண்டாம் கிரகத்தின் நட்சத்திரமாவ தும், நான்காம் வீட்டிற்கு மூன்று மற்றும் ஒன்பதாம் இடத்தின் நட்சத்திரமாவதும் பேச்சுவார்த்தைகளில் தவறான புரிதல் ஏற்படு மென்று காட்டுகிறது.

* பிரசன்ன லக்னத்தின் ஆறாமதிபதி பதினொன்றாம் இடத்தில் வந்து, மூன்றா மதிபதி மூன்றில் கோட்சாரத்தில் அமரும் போது வீடு விற்கும்.

பரிகாரம்

* திருவோண நட்சத்திரத்தன்று புவனேஸ்வரி அம்மனுக்கு கலசாபிஷேகம் செய்து வில்வமாலை சாற்ற வீடு சீக்கிரம் விற்கும்.

*வராஹ கவசம் படித்துவர பேச்சுவார்த்தைகளிலுள்ள தடங்கல்கள் மறையும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala311221
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe