Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (48) -லால்குடி கோபாலகிருஷ்ணன்

/idhalgal/balajothidam/kerala-astrological-secrets-48-lalgudi-gopalakrishnan

கிருஷ்ணன் நம்பூதிரியின் வீட்டில் எப்போதுமே கூட்டம் வழிந்தோடியபடிதான் இருக்கும். ஆனால் அன்று தேய்பிறை அஷ்டமி என்பதால், அவர் அவசர காரியமல்லாமல் பிரசன்னம் பார்க்கமாட்டார் என்பதால், விஷயம் தெரிந்த நபர்கள் வராமலிருந்தார்கள். அஷ்டமி பிரசன்னம் என்பது எப்போதுமே விபரீத கர்மவினைகளை மூலமாகக் கொண்டிருக்கும். மேலும் அன்றைய பிரசன்னங்களுக்கு பரிகாரங்கள் மிகக் குறைந்த சதவிகிதத்திலேயே இருக்குமென்பதால், நம்பூதிரி அன்றைய நாளை ஓய்வுநாளாக மாற்றி, அன்னை பிரத்யங்கராவை வழிபட ஒதுக்கியிருந்தார். அன்றைக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அந்த தம்பதியர் பிரசன்னம் காண வந்திருந்தனர்.

Advertisment

தங்கள் வீட்டில் அநேக குழப்பங்களும், அடிக்கடி விரும்பத்தகாத நிகழ்சிகளும் நடைபெறு கின்றன என்றும், செல்வ வளம் இருந்தும் இவ்வாறு மன வருத்தம் எப்போதும் இருந்து கொண்டே இருப்பதாகவும், அதற்கான காரணமும், தங்களுக்கு சந்தான பாக்கியம் தள்ளிக்கொண்டே போவதற்கான காரணத்தையும் அறிந்துகொள்ளவே பிரசன்னம் காண வந்திருப்பதாகத் தெரிவித்தனர். நம்பூதிரி அதர்வண மகாலட்சுமியான பிரத்தியங்கரா

கிருஷ்ணன் நம்பூதிரியின் வீட்டில் எப்போதுமே கூட்டம் வழிந்தோடியபடிதான் இருக்கும். ஆனால் அன்று தேய்பிறை அஷ்டமி என்பதால், அவர் அவசர காரியமல்லாமல் பிரசன்னம் பார்க்கமாட்டார் என்பதால், விஷயம் தெரிந்த நபர்கள் வராமலிருந்தார்கள். அஷ்டமி பிரசன்னம் என்பது எப்போதுமே விபரீத கர்மவினைகளை மூலமாகக் கொண்டிருக்கும். மேலும் அன்றைய பிரசன்னங்களுக்கு பரிகாரங்கள் மிகக் குறைந்த சதவிகிதத்திலேயே இருக்குமென்பதால், நம்பூதிரி அன்றைய நாளை ஓய்வுநாளாக மாற்றி, அன்னை பிரத்யங்கராவை வழிபட ஒதுக்கியிருந்தார். அன்றைக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அந்த தம்பதியர் பிரசன்னம் காண வந்திருந்தனர்.

Advertisment

தங்கள் வீட்டில் அநேக குழப்பங்களும், அடிக்கடி விரும்பத்தகாத நிகழ்சிகளும் நடைபெறு கின்றன என்றும், செல்வ வளம் இருந்தும் இவ்வாறு மன வருத்தம் எப்போதும் இருந்து கொண்டே இருப்பதாகவும், அதற்கான காரணமும், தங்களுக்கு சந்தான பாக்கியம் தள்ளிக்கொண்டே போவதற்கான காரணத்தையும் அறிந்துகொள்ளவே பிரசன்னம் காண வந்திருப்பதாகத் தெரிவித்தனர். நம்பூதிரி அதர்வண மகாலட்சுமியான பிரத்தியங்கரா தேவியை நரசிம்ம தபாயணி உபநிஷத் மந்திரம்கொண்டு துதித்து பிரசன்னத்தை ஆரம்பித்தார்.

dd

பிரசன்னத்தில் சுக்கிரன் உத்திராடம் அமர்ந்து, சுக்கிரன் நான்கு மற்றும் பதினொன் றாம் அதிபதியாகி, கும்ப லக்னமான ப்ராசனத் திற்குப் பாதகம்செய்து நின்றது. லக்னத்தில் குருவே அமர்ந்தும் பாதகம் குறையவில்லை. ஆதலால் த்ரிஸ்புடம் பார்த்தார் நம்பூதிரி. அந்தக் கணக்கு விழுந்த நட்சத்திரம் ரேவதி நான்காம் பாதம் காட்ட மிகுந்த கர்மவினைப் பயனென்று தெரிந்துகொண்டார். மேலும் சூரியன் அஷ்டமத்தில் இருக்க, அஷ்டமி திதியில் பிரசன்னம் பார்க்க வந்தவர்களின் முன்னோர்கள் மூடநம்பிக்கை எதிர்ப்பு, கடவுள் மறுப்புக் கொள்கை என்னும் பெயரில் இராமாயணம் மற்றும் பல தெய்வீகப் புத்தகங்களை எரித்தும், பிராணப் பிரதிஷ்டை செய்து பூஜைசெய்த கடவுள் சிலைகளை உடைத்ததும், தெரியவந்தது. இவர்களின் செயல்கள் கடவுளை பாதிக்காது என்றா லும், அவரது பக்தர்களின் சாபம் இவ்வாறு திரிந்து வந்து அவர்களின் தலைமுறைகளை பாதிக்கிறது என்று கூறினார்.

இதைக் கேட்ட தம்பதிகள் தலைகுனிந்தனர்.

இந்த கர்மவினை போக இன்றைய பிரசன்னத் தில் பரிகாரமில்லை என்றும், மற்றோரு நாள் கடவுளைவேண்டி வருமாறும் அறிவுறுத்தி அனுப்பிவைத்தார்.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

கேரள ஜோதிடத்தில் மாந்தி, சந்திரன், சூரியன் ஆகிய கிரகங்களின் பாகைகளைக் கொண்டு த்ரிஸ்புடம் கணக்கிடப்படுகிறது. இந்த த்ரிஸ்புடம் விழும் ராசி, நட்சத்திரம், நவாம்சங்கள் கொண்டு பலன்கள் உரைக்கப்படுகின்றன. த்ரிஸ்புடத்தின் பலனைக் கொண்டே சில நேரங்களில் ஜோதிடர் பிரசன்னம் காணலாமா வேண்டாமா என்றும் முடிவுசெய்கிறார்.

ராசிகளை ஆக்கல், காத்தல், அழித்தல் என்று மூன்று வகையில் பிரித்தும், நட்சத்திரக் கூட்டங்களை அதேபோல் பிரித்தும் கர்மவினைகளின் வீரியம் கணக்கிடப்படுவது கேரள ஜோதிடத்தின் தனிச்சிறப்பு. இவ்வாறு கணக்கிடப்படும் பலன்களை தெய்வபலம் கொண்டு, விம்சமாம்சம் பார்த்து சரியான பரிகாரங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த முறை மற்றைய பிராந்தியங்களிலுள்ள ஜோதிட நடைமுறையில் பெரும்பாலும் இல்லை.

குடும்பத்தில் பிரிவு நீங்குமா?

கேள்வி: எனக்குத் திருமணமாகி ஓராண்டு ஆகிறது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கிறோம். பிரசன்ன ஆரூடத்தின்மூலம் அதற்கான காரணத்தைக் கூறமுடியுமா? அதற்குப் பரிகாரம் செய்வதால் பலனுண்டா?

(எண்- 6, பரணி இரண்டாம் பாதம்)

* சோழி லக்னம் பரணி இரண்டாம் பாதத்தில் அமைந்து, அதற்கு சமசப்தமத்தில் ஸ்வாதி நான்காம் பாதம் அமைவது, தம்பதிகளுக்குள் வசியப்பொருத்தமில்லை என்பதைத் தெளிவாக்குகிறது.

* சோழி லக்னத்திற்கு இரண்டாமிடத்தில் ராகுவும், எட்டாமிடத்தில் கேதுவும் அமர்வது, திருமண வாழ்க்கை வெகுநாட்கள் நீடிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

* சோழி லக்னத்திற்கு ஏழாமிடத் தில் ஐந்தாம் வீட்டதிபதியாகிய சூரியன் இருப்பது, காதல் வாழ்க்கை கசந்து விட்டதைத் தெளிவாக்குகிறது.

* மாந்தி பரணி நட்சத்திரத்திலேயே அமர்வதும், விதிவசத்தால் ஏற்பட்ட பிரிவைக் காட்டுகிறது.

* நான்காம் வீட்டதிபதியும் மனோகார கனுமாகிய சந்திரன் பன்னிரண்டாம் வீட்டில் அமர்வது, மனதின் வியாகூலத்தையும் விரக்தி யையும் குறிக்கிறது.

* சோழி லக்னத்திற்கு ஏழாமிடத்தில் சூரியன், சனி பகவானின் பத்தாம் பார்வையின் பாதிப்பால், ஜாதகரின் கணவருக்கு ஏற்பட்ட தவறான நட்பால் இந்தப் பிரச்சினை வந்தது என்பதை அறியமுடிகிறது.

* குருபகவான் கும்பத்தில் சஞ்சரிக்கும் காலத் தில் பரிகாரங்களைச் செய்தால் நல்லபலன் உண்டாகும்.

பரிகாரம்

திருமண நாளில், குருவாயூர் கோவிலில் சர்க்கரை துலாபாரம் செலுத்துவது; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஆலத்தூர் அருகே காவச்சேரி என்ற இடத்திலிருக்கும் பரக் காட்டு பகவதிதேவி ஆலயத்தில் (மாங்கோட்டு காவில்) இணை கலசம் செய்து வீட்டில்வைத்து வழிபடுவது; வளர்பிறை பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் அம்மன் சந்நிதியில் தாலிக் கயிறு பூஜித்து பிரசாதமாக திருமணமான பெண்களுக்குத் தருவது நல்லது. கும்பகோணம் அருகேயுள்ள திருச்சத்திமுற்றம் சென்று பிரார்த்தனை செய்வதால், விதிவசத்தால் பிரிந்தவர்களும் ஒன்றுசேர்வார்கள். திருப்பதி அலர்மேல்மங்கைத் தாயாரின் திருமணக்கோலம் காண்பது; சிவன் கோவில் களில் இரவு நடக்கும் பள்ளியறை பூஜையை ஒரு மண்டலம் தரிசிப்பது; ஸ்வயம்வர பார்வதி மந்திரம் ஜபம்செய்வது; ஐக்யமத்திய புஷ்பாஞ்சலி கேரளக் கோவில்களில் செய்வது; ரோஜா ஸ்படிக சிவலிங்கத்தை வீட்டில் வைத்து தினமும் பூஜிப்பது பிரிந்த தம்பதியை சேர்த்துவைக்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala241221
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe