கேரள ஜோதிட ரகசியங்கள்! (47) -லால்குடி கோபாலகிருஷ்ணன்

/idhalgal/balajothidam/kerala-astrological-secrets-47-lalgudi-gopalakrishnan

ன்றைய தினம் கிருஷ்ணன் நம்பூதிரி காலை சூரியனை வணங்கிவிட்டு ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்தார். சூரியனைச் சுற்றி ஒரு கருவளையம் இருந்ததே அதற்குக் காரணம். மேலும் நடக்கவிருக்கும் வருடாந்திர சூரிய கிரகணத்திற்கு முன்னரே இந்த வளையம் தோன்றும் காரணத்தை ஜோதிடக் கணக்குகளில் ஆராயத் தொடங்கினார்.

சூரியன், சனி மற்றும் மாந்தி ஒரு புள்ளியில் இணைவதும், அங்கேயே அப்போது லக்னம் நகர்வதும் கண்டு, சிந்தித்துக் கொண்டிருந்தவரை வாசலில் ஆடிய நிழல் நிமிர்த்தியது. வெளியே பிரசன்னம் பார்க்க கிழக்கு திக்கிலிருந்து ஒரு பெண் வந்து நின்றார். வந்தவரின் பிரசன்ன லக்னம் மற்றும் கேள்வி சொல்லாமலே நம்பூதிரிக்குப் புரிந்தது. வந்தவரின் வீட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கும், அவரது கணவரின் உத்தியோக இடத்திலிருக்கும் குழப்பங்களுக்கும் காரணம், கணவரிடமுள்ள சில யந்திரங்களும், கருப்புநிற சங்கும்தான் என்றும், அந

ன்றைய தினம் கிருஷ்ணன் நம்பூதிரி காலை சூரியனை வணங்கிவிட்டு ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்தார். சூரியனைச் சுற்றி ஒரு கருவளையம் இருந்ததே அதற்குக் காரணம். மேலும் நடக்கவிருக்கும் வருடாந்திர சூரிய கிரகணத்திற்கு முன்னரே இந்த வளையம் தோன்றும் காரணத்தை ஜோதிடக் கணக்குகளில் ஆராயத் தொடங்கினார்.

சூரியன், சனி மற்றும் மாந்தி ஒரு புள்ளியில் இணைவதும், அங்கேயே அப்போது லக்னம் நகர்வதும் கண்டு, சிந்தித்துக் கொண்டிருந்தவரை வாசலில் ஆடிய நிழல் நிமிர்த்தியது. வெளியே பிரசன்னம் பார்க்க கிழக்கு திக்கிலிருந்து ஒரு பெண் வந்து நின்றார். வந்தவரின் பிரசன்ன லக்னம் மற்றும் கேள்வி சொல்லாமலே நம்பூதிரிக்குப் புரிந்தது. வந்தவரின் வீட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கும், அவரது கணவரின் உத்தியோக இடத்திலிருக்கும் குழப்பங்களுக்கும் காரணம், கணவரிடமுள்ள சில யந்திரங்களும், கருப்புநிற சங்கும்தான் என்றும், அந்தப் பொருட்களில் ஆபிசாரப் பிரயோகங்கள் செய்துவைத்திருப்பதால், மழைச் சாரல்போலுள்ள வாழ்க்கையில் தேவையில் லாமல் இடி இடிக்கிறது என்றும் கூறினார்.

dd

இதைக்கேட்ட அந்தப் பெண்மணி வெளிநாட்டி லுள்ள கணவனைத் தொடர்புகொண்டு நம்பூதிரி கூறிய தகவலைச் சொல்லி வினவ, கணவனும் அந்தப் பொருட்கள் தன் நண்பர் கொடுத்தது என்றும், அந்தப் பொருட்கள் வந்தது முதல் தான் தேவையில்லாத குழப்பங்களிலும் பிரச்சினைகளிலும் சிக்கிக்கொண்டதை உணர்ந்ததாகவும் கூறினார்.

நம்பூதிரியின் அறிவுறுத்த லின் பேரில், அந்தப் பொருட் களை அப்போதே வெளியில் தூக்கிப் போடப்பட்டபின், மீண்டும் பிரசன்னம் பார்க்க, மாந்தி மறைந்து, லக்னத் தில் குரு பார்வை வந்தது.

பிரச்சினை தீர்ந்த சந்தோஷத்தில் வந்த பெண்மணி அன்னை காமாட்சிக்கு நன்றிசொல்லி நகர்ந்தார்.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு கோடச் சக்கரத்தைக் கொண்டு ஆட்சி அதிகாரத்தைக் கணக்கிடு வதுபோல, கேரள ஜோதிடத்தில் விவாக சக்கரத்தைக்கொண்டு, திருமணமான நாளில் சூரியன் இருக்கும் நட்சத்திரத்தையும், அதற்குத் தொடர்ந்துவரும் நட்சத்திரங்களை யும் நடுவில் அமர்த்தி, பின் எண்திசைகளுக்கு மூன்றாக கிழக்கிலிருந்து ஆரம்பித்து நட்சத் திரங்களை அமைத்து சக்கரம் வரைய, அந்தத் திருமணம் எவ்வாறு அமையுமென் றும், திருமணத்தால் புத்திர பாக்கியம் வருமா, செல்வம் சேருமா அல்லது தொல்லைகள் தருமா என்றும் கணிக்கப்படுகிறது.

ஒரு திருமணத்திற்கு முகூர்த்தம் குறிக்கும் முன்னர், அந்தநாளின் விவாக சக்கரம் நல்ல பதில் கொடுத்தால் மட்டுமே கேரளாச்சாரத்தில் திருமணங்கள் முடிவு செய்யபடவேண்டும். இன்றைய நாட்களில் திருமணங் கள் வெறும் முகூர்த்த நாள் பார்த்துக் குறிக்கப்படுவதும், விவாக சக்கரம், விவாகப் பிரசன்னம் போன்ற கணக்கு கள் காணாமல் செய்யப்படு வதுமே, திருமணமான பின்பு பல இன்னல்கள் வரக் காரணம். தவறான வைத்தியரிடம் தவறான மருந்து வாங்கி உட்கொண்டு, பிறகு வைத்திய சாத்திரமே பொய்யென்று கூறுவதுபோல், தவறான ஜோதிட முறைகளைக் கையாண்டு பின்பு இன்னல் வருவதால் ஜோதிட சாத்திரம் பொய்யென்று பேசுவதற்கு இவ்வாறான தவறான வழிகாட்டுதல்கள் காரணமாகிவிடுவது காலத்தின் கொடுமை.

கேள்வி: உத்தியோக இடத்தில் குழப்பங்கள் நிலவுகிறது. காரணமென்ன? கொடுத்த எண்: 66.

* பிரசன்ன லக்னம் விருச்சிகம், காலபுருஷனின் எட்டாம் பாவமாக இருப்பது, ஒரு மறைமுகப் பிரச்சினையைக் காட்டுகிறது.

* மாந்தி பத்தாம் பாவத்திலிருப்பது வேலைசெய்யும் இடத்தில் குழப்பங்கள் இருப்பதைக் காட்டுகிறது.

* பத்தாம் பாவம் மாந்தியானது, கடகத்தில் இருப்பதும், பத்தாம் பாவாதிபதி நீசமாக இருப்பதும், பிரசன்ன லக்னத்தின் பாதகாதிபதியாக இருப்பதாலும் மேற்கூறிய காரணங்கள் வலுப்பெறுகின்றன.

* பிரசன்ன லக்னத்தின் அதிபதி தனக்கு பன்னிரண்டில் மறைவதும், அவரே ஆறாம் அதிபதியாக இருப்பதும், சனி பார்வை பெறுவதாலும் ஜாதகருக்கு உடல் உபாதைகள், சிறுநீரகக் கோளாறுகள் இருப்பதைக் காட்டுகிறது.

* மேலும் செவ்வாய் பிரசன்ன லக்னத் திற்கு நான்காம் பாவத்திற்குப் பாதகமாக இருப்பது, ஜாதகரின் தாயின் உடல்நிலை சரியில்லாததையும் உணர்த்துகிறது.

* உதய லக்னத்திற்கு நான்காம் பாவத்தில் மாந்தி இருப்பதும், பிரசன்ன லக்னத்தின் நான்காம் பாவத்தில் பார்வை விழுவதும் ஜாதகரின் கையிலுள்ள ஏதோவொரு பொருளில் தீயசக்தியை ஏவியிருப்பது தெரிகிறது.

* நவாம்சத்தில் மாந்தி பிரசன்ன லக்னத்தின்மீதே விழுவதும் இதற்கு வலு சேர்க்கும்.

* ராசியில் மாந்தி இருக்கும் நட்சத்திரம், ஜாதகரின் ஆரோக்கிய ஸ்தானத்தின் பரிகார நட்சத்திரமாக இருப்பதும், ஜாதகரை அடிக்கடி நோயில் விழ வைக்கிறது.

பரிகாரம்

அம்பாளுக்கு மரிக்கொழுந்து மற்றும் வில்வமாலை சாற்றி வழிபட்டால் தோஷம் விலகி வாழ்க்கை சிறக்கும்.

bala171221
இதையும் படியுங்கள்
Subscribe