அன்று அதிகாலை நான்கு மணிக்கே வீட்டிற்கு வெளியே வாகனங் கள் எப்போதுமில்லாத அளவுக்கு தொடர்வண்டிபோல அணிவகுத்து நிற்கும் சப்தம் கேட்டது. அன்று கிருஷ்ணன் நம்பூதிரிக்கு உடல்நிலை சரியில்லாததால், எப்போதும் நான்கு மணிக்கு தன்னுடைய பூஜை மற்றும் ஜெபத்தை முடிப்பவர், அப்போதுதான் எழுந்து என்ன அரவமென்று பார்க்கச் சென்றார்.
அன்றைய அரசியலின் பெரிய புள்ளி, நாத்திகம் மற்றும் பகுத்தறிவு பேசும் ஒரு தலைவர் தாமே இல்லம்தேடி வந்திருப்பது தெரிந்தது. கிருஷ்ணன் நம்பூதிரிக்கு இந்த சம்பவம் ஒன்றும் புதிதல்ல. வெளியில் ஒரு வேஷம் போட்டு, தமக்கொரு இடர் வரும்போது ஜாதகத்தைத் தூக்கிக்கொண்டு செல்லும் நபர்களை நிறையவே பார்த்துவிட்டார்.
வந்தவர்களை வரவேற்று, தனது பூஜைகளை முடித்துக்கொண்டு வருவதாகக் கூறிச்சென்று, நித்திய பூஜைகளை முடித்தபின் திருச்செந்தூர் முருகனையும், அன்றைய நாளின் தெய்வமான சூரியனையும் வேண்டி பிரசன்னத்தைத் தொடங்கினார்.
வந்த நபர் அறையின் உள்ளே வரும்போதே இ

வந்த நபர் அறையின் உள்ளே வரும்போதே இடுப்பில் கைவைத்துக்கொண்டும், இன்னொரு கையை இடுப்பிற்குக்கீழ் ஆடையை சரிசெய்துகொண்டும் வந்தார். சோழிகளை எடுக்காமலே கிருஷ்ணன் நம்பூதிரிக்கு எதிரிகள் மற்றும் ஆட்சியைப் பற்றிய பிரச்சினையென்று தெரிந்தது. இதைக் கேட்டதும் வந்தவர் வழக்கம்போல அதிர்ந்தார். மேலும் இதற்குப் பிரசன்னத்தை கோட்டச் சக்கரத்தின் வழியாகதான் பார்க்கவேண்டுமென்று முடிவுசெய்த நம்பூதிரி, ஆட்சியமைத்த நாளைக் கேட்டு அதற்கு கோட்டச் சக்கரத்தை வரைந்தார். அப்போது உள்ளிருக்கும் கிரகங்கள் வலிமையாகவும், மதில்களில் உள்ள கிரகங்கள் மாந்தி சம்பந்தம் கொண்டும், சந்திரன் மற்றும் புதன் பார்வையோடு இருப்பதைக் கண்டார். வந்தவரின் உயிருக்கு, அவரோடிருக்கும் சந்திரன் பெயர்கொண்ட ஒருவரால் ஆபத்திருப்பது தெரிந்தது. மேலும் ஆட்சி, அதிகாரம் அந்த நபரிடம் செல்வதும், இவர் விலகவில்லையென்றால், பூமியிலிருந்தே விலக்கப்படுவார் என்றும் தெரிந்ததைக் கூறினார். நம்பூதிரி வீடுவரை வந்த பகுத்தறிவு இப்போது தடுமாறியது. நண்பர்கள்மீதுள்ள நம்பிக்கையில் உண்மையை மறுத்து, பின் இரண்டு மாதங்களில் ஆட்சிக்காக இவரை வீட்டிலேயே மருந்துகளைக் கொடுத்து நோயாளியாக்கி, பின் மேலோகம் செல்ல அனுப்பிவைத்தார் அந்த சந்திரன் பெயர் கொண்ட நண்பர்.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
கேரள ஜோதிடத்தில் பிரசன்னங்கள் எப்போதுமே ஜாதகம் கொண்டு மட்டும் பார்க்கப்படுவதில்லை. கேள்வியின் போக்கை வைத்து பிரசன்னம் பார்க்கவேண்டிய முறை நிர்ணயிக்கப்படுகிறது, ஜாதக சக்கரம் பிரதானம் என்றாலும், ஆட்சி, அதிகாரம் போன்றவற்றைக் காண கோட்டச் சக்கரம், சங்கடங்கள் எப்போது வரும்- எங்கு வரும் என்பதைக் காண சங்கட்ட சக்கரம், உடலில் எங்கு பாதிப்புள்ளது என்று காண நரசக்கரம் என்று சில விசேஷ சக்கரங் களைக் கொண்டும் பிரசன்னத்தின் பலன்கள் ஆராயப்படுகின்றன.
அதேபோல் சில விசேஷ லக்னங் களின் உபயோகமும் கொண்டு பலன்கள் ஆராயப்படுகின்றன. வருமானம் மற்றும் வசதி வாய்ப்பை ஹோரா லக்னம் மற்றும் ஸ்ரீ லக்னம் கொண்டும், உடல் உபாதைகளை ஞாதி லக்னம் கொண்டும், திருமணம் மற்றும் வாழ்க்கைத் துணையை ஆராய உபபாத லக்னம் மற்றும் தார காரகர்களைக் கொண்டும் ஆராய்ந்து பலன் கூறுவதால் மட்டுமே இங்கு கேரள ஜோதிடத்தின் சிறப்பு வளர்ந்துகொண்டே போகிறது.
கேள்வி: நான் விரும்பிய படிப்பை வெளிநாட்டில் படித்துமுடிக்க முடியுமா? (கொடுத்த எண் 54).
* காலபுருஷனின் வித்யா ஸ்தானத்தில் லக்னம் அமைவதும், வர்க்கோத்தமமாவதும் படிப்பிற்க்கான கேள்வி இதுவென்று கேள்வியைக் கேட்காமலே சொல்லமுடியும்.
* மேலும் புதன் இரண்டில் செவ்வாயோடு சேர்ந்து சித்திரையில் அமர்வது, இந்தப் படிப்பு மொழி மற்றும் மொழிகளின் உற்பத்தி மற்றும் வளர்ச்சியைப் பற்றிய ஆராய்ச்சி என்றும் தெரிகிறது.
* ஒன்பதாமதிபதி சுக்கிரன், கல்வி ஸ்தானமான நான்கில் அமர்வது கதை, கவிதை மற்றும் ஆன்மிகம் சம்பந்தமான மொழியியல் ஆராய்ச்சி என்பதைத் தெளிவாக விளக்குகிறது. மேலும் சுக்கிரன் நிற்கும் மூல நட்சத்திரம் மொழியின் வேர்களை நோக்கி பக்தி இலக்கியத்தில் இந்த நபர் ஆராய்ச்சி செய்கிறார்; அதில் முனைவர் பட்டம் பெற நினைக்கிறார் என்பதைக் காட்டுகிறது.
* பன்னிரண்டாம் அதிபதி சூரியன், கேதுவோடு சேர்ந்து மூன்றாமிடத்தில் இருப்பது, எடுக்கும் முயற்சிகளில் தோல்வி யைக் காட்டுகிறது. காலபுருஷனின் எட்டாமிடத்திலும், லக்னத்திலிருந்து மூன்றாமிடத்திலும் இந்த அமைப்பிருப்பதால் ஒரு இனம்புரியாத பயமும் இருக்கிறது.
* மாந்தி சந்திரன் வீட்டில் 11-ல் இருப்பது மனசங்கடம் தந்து, பின் வெற்றி கிடைக்குமென்று தெரிகிறது.
* ஒன்பதாமிடத்தில் 11-ஆமதிபதி சந்திரன் இருப்பதும், ராகுவோடு சேர்ந்திருப்பதும் எண்ணிய படிப்பை கண்டிப்பாக முடிக்கமுடியுமென்று தெரிகிறது. ஆனால் குரு ஆறாமிடத்தில் இருப்பது ஒரு தற்காலிகத் தடையை உண்டாக்கும். கோட்சார குரு மீனம் ஏறியவுடன் ஆராய்ச்சிக்கு இந்த நபர் அமெரிக்கா சென்று, பின் 2024-ஆம் ஆண்டு பட்டம் வாங்கமுடியும் என்றும் தெரிகிறது.
பரிகாரம்
தடைகளைத் தகர்க்க திருப்புகழ் பாராயணம் செய்வதே உகந்த பரிகாரமாகிறது.
(தொடரும்)
செல்: 63819 58636