திகாலை வேளையில் பறவை களும் மேகமூட்டத்தைக் கண்டு தங்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தன. தன் நித்ய ஜெபத்தை முடித்துக் கண்களைத் திறந்த கிருஷ்ணன் நம்பூதிரியின் எதிரில், பழுத்த சிவப் பழமாகக் காட்சியளித்தார் அந்த மிராசுதார். கட்சிக் கரையிட்ட வேட்டியும், தங்கம் பூட்டிய உருத்திராக்கமும், வைரம் பதித்த ஸ்ரீ சக்ர பதக்கமும் அவரின் செல்வாக் கையும் சொல்வாக்கையும் சொல்லாமல் சொல்லியது. மருத்துவமனையில் சிகிச்சை யில் இருக்கும் தன் மகனின் நிலையை அறிய வந்திருந்ததை தெரியபடுத்தினார். தில்லை வாழ் சிவாகாமி அம்மையை வேண்டி, சோழி களை உருட்டினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

பிரசன்னத்தில், வந்திருப்பவர் சிவன் கோவிலை ஆக்கிரமித்து, கோவிலின் பிராகாரத்தையே வீடாகக் கட்டியிருப்பதும், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சிலைகளை அகற்றி, பின் சிதைத்ததும் தெரிந்தது. இதன் விளைவால் அவருடைய மூத்தமகன் விபத் தில் இறந்ததும், இளைய மகன் விஷமருந்தி மருத்துவ மனையில் சிகிச்சை மேற் கொண்டிருப்பதையும் சொன்னார் கிருஷ்ணன் நம்பூதிரி. சிவபக்தனாக வேட மிட்ட மிராசுதார், சுவரோடு சிலையாக நின்றார். அவரைப் பார்த்து, அவர் அகற்றிய தெய்வச் சிலைகள் கேள்வி கேட்பதுபோல தெரிந்தது.

கோவில்களின் சொத்து பொதுவா னவை; ஆன்மிகக் காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டுமென்று முன்னோர் கள் சில மந்திரப் பிரயோகங்களை விட்டுச் செல்வதும், சில இடங்களில் தெய்வத்தின் சக்தி சங்கரிக்க மட்டுமே உருவானதும், அவ்வாறான இடங்களில் ஒன்று சிவன் கோவில் ஆதலால், அந்த சொத்துகளை முறைதவறிப் பயன்படுத்துவோர் சர்வநாசத்தை சந்திக்கவேண்டி வருவதும், பரிகாரமில்லாத தோஷம் இதுவென்றும் கிருஷ்ணன் நம்பூதிரி கூறி முடித்தார்.

ee

Advertisment

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஜோதிட சாத்திரங்களைப் பல்வேறு காலகட்டங்களில் மகரிஷிகள் மானுடம் உய்யவும், கடவுளிடம் செல்லவும் ஒரு மார்க்க மாக விட்டுச்சென்றனர். இதில் பரசுராம க்ஷேத்திரமான கேரள தேசத்தில், தாந்த்ரீக உபாசனை பிரதானமாக இருப்பதும், அங்கு பயன்படுத்தப்படும் ஜோதிட சாத்திரம் சற்றே மற்றைய இடங்களிலிருந்து வித்தியாசப் படுவதும் ஆச்சரியப்படத் தக்கதல்ல. ஏனெனில் இங்கு ஜோதிடமும் தாந்த்ரீக வட்டத்திற்குள் வந்து பல ரகசியங்களைக் கொண்டிருக்கிறது.

லக்னம் நின்ற விகலை, மாந்தி, சந்திரனைக் கொண்டு ஸ்புடம் கணித்து, எவ்வாறான ஆபத்துகள் வரும்- அதன் காரணங்கள் என்னவென்று காண்பதும், சூரியனின் தொடர்பைக்கொண்டு தெய்வரூபத்தை அறிவதும், தசா புக்திகளின் ஆரம்ப நேரத் தைக்கொண்டு, அதற்கொரு ஜாதகம் அமைத் துப் பலன்களையும் யோகங்களையும் ஆராய் வது கேரள ஜோதிடத் தில் மட்டுமே உள்ள சிறப்பு.

Advertisment

கருப்பு மந்திரங்கள் (மாந்த்ரீகம்)

(மாந்த்ரீகம் குறித்து ஒரு வாசகர் கேள்வி கேட்டார். அவர் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. பிரசன்னம் தந்த விவரத்தை இங்கு கொடுத்திருக்கிறோம்.)

(பிரசன்னம் கொடுத்த எண் 102; சனியின் உத்திரட்டாதி 2-ஆம் பாதம்)

கேள்வி கேட்டவரின் ஜனன ஜாதகத்தில் நடப்பு தசை குரு- புதன். குரு- சிஷ்ய கேள்வியே வரவேண்டும். ஜனன காலத்தில் குரு லக்னத்தில், புதன் 10ல். இவர்களுக்கு தொடர்பு 1, 6, 12-ஆம் வீடுகள்.

* பிரசன்னம் கொடுத்த எண் 102, சனியின் உத்திரட்டாதி 2- ஐந்தாம் பாவம். சந்திரன் 9-ல் இருக்கிறது. ஆதலால் மந்திரம் சம்பந்தமான கேள்வி.

* சந்திரன் காலபுருஷனின் 8-ல், கேது வோடு சேர்ந்து பெண் ராசியில் அமைவது, பெண்தேவதை என்று தெரிகிறது.

* மேலும் கருப்பு மந்திரம் என்றும் கொள்ள வேண்டும், இதற்குக் காரணம் 10-ஆம் பாவத்தில் மாந்தி, சனி, குரு தொடர்புகொள்வதும், குரு நீசமான இடத்திலமர்ந்து 5-ஆம் இடத்தை 7-ஆம் பார்வையாகப் பார்ப்பதுமே.

* 10-ஆமதிபதி குரு பாதகத்தில் நவாம்சத்திலும், ராசியில் நீசமாக இருப்பதும், மந்திரப் பிரயோகம் செய்யும் முறை தவறென்று தெரிகிறது.

* அம்சத்தில் குரு சித்திரை 2-ல் விழுகிறார்.

ராசியில் குரு இருக்கும் அவிட்டம்- 2, ஜனன ஜாதகத்தில் மாந்திக்கு 64-ஆம் அம்சம். ஆதலால் மாந்த்ரீகம் சம்பந்தமான இந்த பிரயோக முறை 100 சதவிகிதம் தவறாக போதிக்கபட்டுள்ளது. கன்னியில் இந்த அமைப்புள்ளதும் இதை ஊர்ஜிதம் செய்யும்.

* ஒன்பதாம் அதிபதி செவ்வாய் ராகுவோடு சேர்ந்து கடகத்தில் நீசத் தில் உள்ளது, நல்ல தேவதை இல்லையென் பதைக் காட்டுகிறது.

* பிரயோக முறையை சரியாகக் கற்று செய்து வந்தால் இன்னும் ஒரு வருடத்தில் குரு மீனம் ஏறிய பின்பு, சமாதியடைந்த ஒரு குருவின் ஆன்மா மந்திர சித்தியை அளிக்கும். பிரயோக முறைகள் சரியாக அறிய தேர்ந்த குருவானவர், குரு தற்போது கும்பம் மாறியதும் இனி கிடைப்பார்.

குறிப்பு: பிரசன்னத்தில் பிரயோக முறையைத் தெரிந்து சரிசெய்ய முடியும் என்றாலும், அதன் தனித்துவம் மற்றும் குருமூலமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் அதைக் கூற சாத்திரம் இடம்கொடுக்கவில்லை. எந்தவொரு ஜோதிடர் சாத்திரம் கூறிய இயம, நியமங்களுக்குள் இந்த வித்தையைச் செய்கி றாரோ, அதேபோல் வியாபார நோக்கமின்றி செய்ய முற்படுகிறாரோ அவரின் கண்களுக்கு எந்த ரகசியத்தையும் கோள்கள் மறைப் பதில்லை.

(தொடரும்)

செல்: 63819 58636