காலையில் தன் உபாசனா தெய்வமான மகா திரிபுரசுந்தரியின் பூஜையை முடித்துவிட்டு, குங்குமத்தைக் கையில் எடுத்தபோது, வாயிற்கதவில் நிழலாடியது கண்டு கிருஷ்ணன் நம்பூதிரி திரும்பினார்.
அப்போது அங்கு சிவப்புநிறப் புடவை உடுத்திய ஒரு பெண், தன் குடும்ப விஷயத்திற் காகப் பிரசன்னம் காண வந்ததை எடுத்துக்கூறி, நம்பூதிரியை வணங்கி அமர்ந்தார். வந்த பெண் தனியாகவும், தலையில் பூ இல்லாமலும் வந்திருந்தார். அவர் மணமானவர் என்று நெற்றித் திலகம் தெளிவாகக் கூறியது.
தன் தெய்வத்தை வேண்டி சோழிகளைச் சுழற்றினார் கிருஷ்ணன் நம்பூதிரி.
பிரசன்னத்தில் நான்காம் பாவமும் பாதகாதிபதியும் ஒரே கிரகமாக வருவதும், மாந்தி நான்காம் பாவ சம்பந்தம் கொண்டதும் குலதெய்வ தோஷம் உள்ளதை சுட்டிக்காட்டின. குலதெய்வத்திற்கு நேர்ந்துகொண்ட வேண்டுதலை நிறைவேற்றாததும் பிரசன்னத் தில் தெரிந்தது. பெண் தோஷத்தைக் குறிக்கும் வகையில் தலையில் பூ இல்லாமல் வந்ததும், சிவப்பு உடுத்தி வந்ததும் பிரசன்னத்தில் கண்ட பலனுக்கு நிமித்தம் எடை சேர்த்தது. அதேபோல் வந்தவர், குலதெய்வத்திற்கு நிலதானம் செய்ய வேண்டியிருந்ததும், இன்னும் செய்யாமல் காலம் தாழ்த்துவதற்கு நிலத்தின்மீது தனக் குள்ள பற்றுதான் காரணம் என்றும் கூறி தலைகவிழ்ந்தார். பிரசன்னத்தில் எதையும் மறைக்கமுடியாது என்றும், கிரகக் கணக்கை சரியாகச் செய்பவரிடம் எதையும் மறைக்க இயலாது என்பதையும் கண்டு வியந்தார்.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
கேரள ஜோதிடத்தில் நிமித்தங்களுக்கும் சகுனங்களுக்கும் நிறைய முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. மேலும் நிமித்தங்கள் தாமே ஏற்படுவதால், அது பிரபஞ்ச மொழியின் வெளிப்பாடாகவும், அதன் போக்கைப் புரிந்துகொள்பவர் முத-ல் தம்மைச்சுற்றி நடப்பதும், முடிவில் நிமித்தங்கள் கடவுளின் இடம்வரை கொண்டு சேர்க்கும் என்பதும் கேரள ஜோதிடத் தின் கருத்து.
நிமித்தங்கள் பலவகைப்பட்டாலும், நிமித்தங்களை ஒரு தேர்ந்த அனுபவம் வாய்ந்த ஜோதிடரால் மட்டுமே உணரமுடியும். உதாரணமாக, பாம்பின் தோலைக் கண்டால் பயப்படும் நாம், போகிற காரியத்தின் நிலை கொண்டுதான் அது நல்லதா கெட்டதா என்று தீர்மானிக்க முடியும். ஒருவர் மருத்துவமனையில் இருக்கும்போது நாம் செல்லும் வழியில் பாம்பின் தோலைக் கண்டால், நாம் காணச் செல்பவர் பூரண குணம்பெறுவார் என்று கொள்ளவேண்டும். ஆனால் அதுவே நாம் காணச் செல்பவர் நமக்குக் கடன்பட்டு பணம் கொடுக்கவேண்டும் என்றால், இந்த நிமித்தம் பணம் திரும்பவராது என்று கொள்ளவேண்டும். கேரள ஜோதிடத்தில் இடம், பொருள், செயல்கொண்டு இவ்வாறு ஆராய்ந்து சொல்வது ஒரு தனிச்சிறப்பு.
சூரியன் நின்ற ராசி, செல்ல இருக்கும் ராசி மற்றும் விட்டுவந்த ராசியை ஆராய்ந்து பலன் கூறுவதும், சூரியனி-ருந்து மற்ற கிரகங்கள் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்று அறிந்து ராஜாங்க விஷயங்களைப் பார்க்க, அதன் பலன் தப்பாமல் நடக்கும் என்பது கேரள ஜோதிடத்தின் ரகசியங்களுள் ஒன்று.
மாந்தியோடு சேரும் தெய்வ கிரகங்கள், தேவ பிரசன்னத்தில் தெய்வத்தைக் காட்டாது; சமாதியாகி நடமாடும் மகான்களைக் காட்டும் என்று அறியவேண்டும். இவ்வாறு மாந்தி தொடர்பிருந்தாலும், பாவ கிரகங்கள் ஜாதகத்தில் படு பாவர்களானால் அது மகான்கள் அல்ல; வேறு பாதகங்கள் உள்ளன என்று தெளியவேண்டும்.
வாழ்க்கை மாறுமா?
கேள்வி: என் மகனின் தற்போதைய போக்கு விசித்திரமாக இருக்கிறது. மேலும் அவன் தனக்கு மனநிலை சரியில்லை என்று தனக்குத்தானே கூறுகிறான். இது எதனால்?
இது மாறுமா? மேலும் அவன் என்ன தொழில் செய்வான்? திருமணம் எப்போது நடக்கும்?
-மோகனசுந்தரம், சென்னை.
(ஆரூட எண் 103; உத்திரட்டாதி 3-ஆம் பாதம்)
1. சுக்கிரன் 3, 8-ஆமிடங்களுக்கு அதிபதியாகி, 2-ஆமிடத்தில் 10-ஆமதிபதி குரு, 2-ஆமதிபதி செவ்வாய் சேர்க்கை பெறுகிறார்கள். இதனால் அந்நிய பெண்களினால் குடும்பத்தில் சிக்கல் உண்டு. இந்த பெண்களால் ஜாதகருக்கு வருமானம் பாதிக்கும். குடும்ப ஒற்றுமையும் கெடும். அந்நிய பெண்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். குறிப்பாக அதிகமாக அழகு சாதனம் உபயோகிக்கும் பெண்கள் மற்றும் நடனமாடும் பெண்களிடம்.
2. 2-ஆமதிபதி செவ்வாய் 11-ஆம் அதிபதியாகவும் இருப்பதால், தந்தை- முன்னோர்வழி நிலங்கள் வந்துசேரும். பூர்விக நிலங்களும், நெடுநாட்கள் கிடைக்காம-ருந்த சொத்தும் கிடைக்கும்.
3. 4-ஆமதிபதி புதன் லக்னத்தில் அமர்வது, வாடகைப் பணம் புரளும் சொத்துகள் வருமாறு வழிசெய்யும். புதன் லக்னத்திற்கு பாதகமாவதால் அவ்வப்போது உடல் உபாதைகள் தரும்.
4. 3-ஆமதிபதி சுக்கிரனாவதாலும், சந்திரனின் நட்சத்திரங்களில் மூன்றா மிடம் இருப்பதாலும், ஜாதகருக்கு நல்ல இசைகேட்கும் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆண்களின் அறிவுரையைவிட பெண்களின் அறிவுரையை அதிகம் கேட்டு நடப்பார். 5-ஆமிடம் சந்திரனாக இருப்பதால், இந்த அமைப்பினால் பெண் நண்பர்கள் சற்று அதிகம் இருப்பர்.
5. 8-ஆமதிபதியும் சுக்கிரனாக இருப்ப தால், இவரின் பெண் நண்பர்கள் வெளியே தெரியாமல் இருப்பார்கள். வெளியில் தெரிந்த நண்பர்களால் ஆபத்தில்லை. நெடு நாட்கள் வெளியே தெரியாத நண்பர்கள், அந்நிய இனத்தவர் அல்லது அதிக வயது டையவராக இருந்தால் அவர்களிடமிருந்து விலகிவிடுவது நல்லது. காரணம், 8-ஆம் பாவத் தின் ராகு- சனி பாவ முனைகள்.
6. தாயார் நண்பரைபோல் நடந்து அறிவுரை கூறினால் ஜாதகர் செவிசாய்ப்பார்.
7. ஜாதகரின் திருமணத்தை தாயாரே நடத்தி வைப்பார். (காரனம் 4-ஆமதிபதி லக்னத்தில்; அவரே 7-ஆமதிபதி).
8. 7-ஆம் பாவம் சூரியன்- கேது பாவ முனையில் இருக்கிறது. கேது 2, 6, 10-ஆம் வீடுகளோடு தொடர்புகொள்கிறார். சூரியன் 6-ஆமதிபதி. அதனால் சூரியன்- கேது புக்தியில் அந்நியமதப் பெண்ணோடு காதல்வரும்; ஆனால் அது தோல்வியில் முடியும்.
9. 7-ஆம் பாவம் பாதகமாகி, லக்னத் தில் அமரும் 7-ஆமதிபதி புதன், ஜாதகரின் இனத்திலேயே சற்று முயற்சிக்குப்பின் திருமணம் செய்வார். பெண், ஜாதகரைத் தேடிவருவார். வரும் வரன் ஜாதகரின் குடும்பத்தைவிட பணவசதி சற்று குறைவாக இருப்பது ஜாதகருக்கு நன்மை தரும். 2029, ஏப்ரல் மாதம்தான் திருமணம் முடிவாகும் காலம். பரிகாரம் செய்ய 2030-க்குள் திருமணம் முடியும்.
10. 9-ஆம் பாவத்தின் முனைகள் சனி, செவ்வாய் சேர்வதால், தந்தையோடு அவ்வப் போது வாக்குவாதம் வரும். ஆனால் வெளியில் தெரியாது. தந்தையின் அன்பு ஜாதகருக்கு நிறையவே உண்டு. ஆனாலும் தந்தை வெளிக்காட்ட மாட்டார். காரணம் விருச்சிகத்தில் 9-ஆம் பாவம் அமைவதே.
11. 10-ஆம் பாவம் உபய ராசியாக இருப்பது, இரு தொழில் தரும். 10-ஆமதிபதி குரு, சுக்கிரன்- ராகு நட்சத்திரக் கால்களில் அமர்வதும், 2-ஆமதிபதி செவ்வாய் மற்றும் 11-ஆமதிபதி சனி சேர்க்கை கொள்வதாலும், மிகப்பெரிய நிறுவனத்தில், அதிநவீன தொழில் நுட்பத்தில் மட்டுமே வேலைபுரியும் அமைப்பைத் தருகிறது.
12. குடும்பத் தொழிலும் அமையும். கூட்டுசேர்ந்து தொழில் செய்யும்படியும் வரும்.
13. 11-ஆமதிபதி 2-ல் அமர்வதால் சுயநலம் இல்லாதவர். ஆனால் அதிகம் செலவு செய்வார்.
14. ஐந்தாம் பாவத்தில் ராகு அமர்வதால் ஆண்வாரிசு உண்டு.
பரிகாரம்
* கிருத்திகை நட்சத்திரம் அன்று திருப்புகழ் பாராயணத்திற்கு ஏற்பாடு செய்வதும், முருகனை வழிபடுவதும் அந்நிய பெண்களி னால் வரும் இன்னல்களைத் தீர்க்கும்.
* முடிந்தவரை மருதமலை ஆதிமூலவரை தரிசிக்க வேண்டும்.
* ஒருமுறை கர்நாடக மாநிலத்தில் உள்ள குக்கே சுப்ரமண்யரை தரிசித்துவர வேண்டும்.