கேரள ஜோதிட ரகசியங்கள்! (42)

/idhalgal/balajothidam/kerala-astrological-secrets-42

பிரசன்னம் பார்க்கவந்தவரின் மனதில் தெளிவும், குழப்பமும் மாறிமாறி வந்து தடுமாற் றத்தை ஏற்படுத்தின. ஐந்தாண்டுகளுக்குமுன், தான் புதுவீடு கட்டிக் குடியேறியதாகவும், சில மாதங்களாக குடும்பத்தில் அமைதி குறைந்து, குழப்பமும் சண்டையும் அதிகரித்து விட்ட தாகவும் தெரிவித்தார். புதிய வீட்டிலுள்ள வாஸ்து தோஷத்தால் இந்தப் பிரச்சினை வந்ததாகவே தோன்றுவதாகவும்; உண்மையை அறிவதற்காகவே பிரசன்னம் பார்க்கவந்ததாகவும் தெரிவித் தார். ஸ்ரீ பிரம்மராம்பிகையை வணங்கி பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

இருப்பிடத்தைக் குறிக்கும் நான்காமிடத்தில் எந்த தோஷமும் காணப்படாததால், வாஸ்து தோஷமில்லை என்பது உறுதியானது. ஒருசிலர் எந்தப் பிரச்சினை வந்தாலும் அது வாஸ்து தோஷத்தினால் வந்தது என்றே கருதுகிறார் கள். அது தவறானது. சோழி லக்னத் தில் அறுபத்துநான்காவது நவாம்சத்தில், பித்ரு தோஷம் காண

பிரசன்னம் பார்க்கவந்தவரின் மனதில் தெளிவும், குழப்பமும் மாறிமாறி வந்து தடுமாற் றத்தை ஏற்படுத்தின. ஐந்தாண்டுகளுக்குமுன், தான் புதுவீடு கட்டிக் குடியேறியதாகவும், சில மாதங்களாக குடும்பத்தில் அமைதி குறைந்து, குழப்பமும் சண்டையும் அதிகரித்து விட்ட தாகவும் தெரிவித்தார். புதிய வீட்டிலுள்ள வாஸ்து தோஷத்தால் இந்தப் பிரச்சினை வந்ததாகவே தோன்றுவதாகவும்; உண்மையை அறிவதற்காகவே பிரசன்னம் பார்க்கவந்ததாகவும் தெரிவித் தார். ஸ்ரீ பிரம்மராம்பிகையை வணங்கி பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

இருப்பிடத்தைக் குறிக்கும் நான்காமிடத்தில் எந்த தோஷமும் காணப்படாததால், வாஸ்து தோஷமில்லை என்பது உறுதியானது. ஒருசிலர் எந்தப் பிரச்சினை வந்தாலும் அது வாஸ்து தோஷத்தினால் வந்தது என்றே கருதுகிறார் கள். அது தவறானது. சோழி லக்னத் தில் அறுபத்துநான்காவது நவாம்சத்தில், பித்ரு தோஷம் காணப்பட்டது. குடும்பத்தில் குழப்பம் ஏற்படுவதற்கான காரணம், இறந்த முன்னோர்களுக்கு ஈமச்சடங்குகளை சரியாகச் செய்யாததே என்பது தெளிவானது.

dd

பிரசன்னம் பார்க்கவந்தவர் தன் தவறை ஒப்புக்கொண்டார். சேதுக்கரையாகிய திருப்புல்லானி சென்று பரிகாரம் செய்தால் தோஷம் விலகுமென்று தெரிவிக்கப்பட்டது. பரிகாரம் செய்து கைமேல் பலன் கண்டவர், கிருஷ்ணன் நம்பூதிரிக்கு நன்றி கூறினார்.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒரு ஜாதகருக்கு எந்தத் தொழிலின் மூலம் வருவாய் உண்டாகுமென்பதைக் கண்டறிவதில் பயன்படுத்தப்படும் நுட்ப மான முறையே கேரள ஜோதிடத்தின் சிறப்பு.

இதுவே "ஜீவனப் பிரகரணம்' என்றழைக்கப் படுகிறது. ஜாதகத்தில் லக்னம் வலிமையானதா அல்லது சந்திரன் பலமுள்ளதா? என்பதை ஆராய்ந்து, அதன் அடிப்படையிலேயே தொழிலைக் குறிக்கும் பத்தாம் பாவத்தைத் தேர்வுசெய்யவேண்டும். பத்தாம் பாவாதிபதி அமரும் நவாம்சம் எந்த கிரகத்தின் நவாம்சத்தில் அமைகிறதோ, அந்த கிரகத்தின் காரகத்துவத் திற்கேற்ற தொழிலே அமையும்.

சூரியனின் நவாம்சத்தில் அமைந்தால் மந்திரம் ஓதுதல், அரசு உத்தியோகம், அரசு ஆதரவுபெற்ற தொழிலால் வருமானம் கிடைக்கும். சந்திரனின் நவாம்சத்தில் அமைந்தால் முத்து, பவளம் போன்றவற்றை வியாபாரம் செய்தல், நீர் தொடர்பான பொருட்களால் லாபம் உண்டாகும். செவ்வாயின் நவாம்சத்தில் அமைந்தால் உலோகம் தொடர்பான தொழில், நிலத்தை வாங்கி விற்கும் தொழில், இராணுவம், காவல்துறையில் உத்தியோகம் போன்றவற்றால் வருமானம் வரும். புதனின் நவாம்சத்தில் அமைந்தால் எழுத்தாளர், கணக்காளர், பங்குச் சந்தை முதலீட்டாளர் போன்றவகையில் வருமானம் உண்டாகும்.

குருவின் நவாம்சத்தில் அமைந்தால் ஆசிரியர் பணி, சமய- சமுதாயப்பணி போன்றவற்றால் ஜீவனம் அமையும். சுக்கிரனின் நவாம்சத்தில் அமைந்தால் பட்டாடைகள், வெள்ளி போன்றவற்றை வியாபாரம் செய்வதாலும், இசை, நடனம், ஓவியம்போன்ற கலைகளாலும் வருமானம் கிடைக்கும். சனியின் நவாம்சத்தில் அமைந்தால் கடின உடலுழைப்பு, மாமிசம் விற்கும் தொழில், துப்புரவு செய்தல் போன்றவற்றால் செய்தொழில் அமையும். பத்தாம் பாவாதிபதி அமரும் நவாம்சத்தைக்கொண்டு ஜாதகரின் தொழிலை நிர்ணயம் செய்யும் முறையே கேரள ஜோதிடத்தின் சிறப்பு.

கல்வியில் தடை நீங்குமா?

கேள்வி: நான் பட்டயக் கணக்காளருக் கான கல்விபயின்று வருகிறேன். இரண்டு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ள தேர்வில், இரண்டாவது பகுதியில் தேர்வடைய முடியவில்லை. என் கல்வியில் ஏற்பட்டுள்ள தடை நீங்குமா? அதற்கான பரிகாரத்தைக் கூறமுடியுமா?

-நாகேந்திரன், சின்னாளப்பட்டி.

(ஆரூட எண்-30; பூசம் இரண்டாம் பாதம்)

* சோழி லக்னத்திற்கு பாதக ஸ்தானமாகிய பதினொன்றாம் வீட்டில் ராகு அமைவது, ஜாதகரின் மனக்குழப்பமே தோல்விக்குக் காரணமாகிறது.

* சோழி லக்னத்திற்கு நான்காமிடமாகிய வித்யா ஸ்தானத்தை மகரத்திலிருக்கும் சனியின் பத்தாம் பார்வை, ஜாதருக்கு தாழ்வு மனப்பான்மையைத் தந்து கல்வியை பாதிக்கிறது.

dd

* சோழி லக்னத்திற்கு சனி, குரு இருவரின் ஏழாம் பார்வையும் கிடைப்பதால், வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வந்து குழப்பத்தைத் தருகிறது.

* புதன் கன்னியில் உச்சம்பெற்றிருப்பதால், கல்வியில் ஆர்வமும், நல்ல நினைவாற்றலும் உள்ளதைக் காட்டுகிறது.

* சோழி லக்னத்திற்கு இரண்டில் தேய்பிறைச் சந்திரன் இருப்பதால், குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் கல்வியில் தடை உண்டானதற்கான அறிகுறி கள் தென்படுகின்றன.

பரிகாரம்

* ராகுவால் ஏற்படும் தோஷத்தினைப் போக்க திருபாம்புரம் சென்று, தங்கள் நட்சத்திர நாளில் நாகப் பிரதிஷ்டை செய்து வழிபடுவது மிக முக்கியம்.

* ஸ்ரீஹயக்ரீவரை வழிபட்டால் கல்வியில் தடை நீங்கி, நல்ல தீர்வு கிடைக்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala121121
இதையும் படியுங்கள்
Subscribe