பிரசன்னம் பார்க்கவந்தவரின் முகத்தில் கவலையின் ரேகைகள் கால் பதித்தன. தன்னுடைய மனைவி வயிற்றுவலியால் அவதியுறுகிறார். பல மருத்துவப் பரிசோதனைகள் செய்தும் நோயின் வகையை அறியமுடியவில்லை. சில மருத்துவர்கள் புற்றுநோய் என்று சொல்கிறார்கள். வேறு சிலரோ வயிற்றில் சாதாரண கழலைதான் உள்ளதென்று உறுதியாகச் சொல்கிறார்கள். இதில் எது உண்மையென்பதை அறியவே பிரசன்னம் பார்க்க வந்ததாகத் தெரிவித்தார். ஸ்ரீ வாராஹியை வணங்கி பிரசன்னத்தைத் தொடங்கி னார் கிருஷ்ணன் நம்பூதிரி.
பிரசன்ன லக்னத்திற்கு இரண்டில் கேது இருப்பதால், ஆயுளுக்கு ஆபத்தில்லை. செவ்வாயின் ஆறாம் பாவத்தொடர்பு, அறுவை சிகிச்சையால் இந்த நோய் குணமாவதைக் குறிக்கிறது. குருபகவான் ஆறாம் பாவத்தின் குறிக் கோளானால், புற்றுநோயைக் கொடுப்பார்.
ஆனால் பிரசன்ன ஆரூட சக்கரத்தில் அவ்வாறான அமைப்பில்லாததால், இது புற்றுநோயல்ல என்பது உறுதி யாகிறது. அமாவாசையன்று திருவள்ளூர் வைத்திய வீர ராகவ ஸ்வாமி கோவிலுக் குச் சென்று வழிபட்டபின், குளத்தில் வெல்லத்தைக் கரைத்தால், அறுவை சிகிச்சை யால் நோய் நீங்குமென்று சொல்லப்பட்டது. பரிகாரம் செய்து பயன்பெற்றவர், கிருஷ்ணன் நம்பூதிரிக்கு நன்றி சொன்னார்.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
ஒருவரின் ஜாதகத்தில் கிரக இணைவு களையும், பார்வையின் விசேஷங்களையும் கருத்தில்கொண்டு பலன்சொல்வதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. கிரகங்கள் தனித்திருப்பதைவிட, உடன் கிரகங்கள் இணைந்திருப்பது நன்மைதரும். சுபகிரகமான குருபகவான் தனித்து நின்றால் நல்லதல்ல. அதாவது "அந்தணன் தனித்து நின்றால் அவதியுண்டாகும்' என்பது ஜோதிட விதி.
சூரியனுடன் இணை யும் கிரகங்கள் அஸ்தங்க தோஷம் பெறுமென்றாலும் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம் மற்றும் தனுசு போன்ற ராசிகளில் சூரியனுடன் இணைவுபெறும் கிரகங் கள் யோகப் பலன்களைத் தருகின்றன. சூரியனுடன் குரு, சந்திரன் ஆகிய முக்கூட்டு கிரகங்களின் இணைவு விசேஷ பலனைத் தரும்.
சூரியனுடன் அஷ்டமாதிபதி, ராகு மற்றும் கேதுக்களின் தொடர்பு ஜாதகருக்குக் கெடுதல் தரும். மேஷ ராசிக்கு தன ஸ்தானமான இரண்டாமிடத்தில் சூரியன், குரு மற்றும் சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களின் இணைவு விசேஷ பலனைத் தரும். குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடமானது களத்திர ஸ்தானமான ஏழாமிடத்திற்கு ஆயுள் ஸ்தானமாக வருவதால், இங்கு ஒரு கிரகம் உச்சம் பெறக் கூடாது. உச்சம்பெற்ற சந்திரனுக்கு குரு பகவானின் இணைவு ஜாதகத்திலுள்ள தோஷங்களைக் குறைத்து, அவற்றின் கெடுபலன்களைத் தராமல் செய்துவிடும் என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
நாடாளும் யோகமுண்டா?
கேள்வி: நான் பல ஆண்டுகளாக ஒரு கட்சியில் பொறுப்பான பதவியிலிருக்கி றேன். ஆனாலும், நேரடியாக மக்கள் பிரதிநிதியாகும் வாய்ப்பு கிடைக்க வில்லை. அதற்கான யோகம் எனக்குள்ளதா என்பதை பிரசன்ன ஆரூடத்தின் மூலம் கூற முடியுமா? அதற்குப் பரிகாரம் செய்வதால் பயனுண்டா?
(எண்-9; கார்த்திகை முதல் பாதம்)
* பரிகாரம் செய்தாலும், வேறு கட்சிக்குச் சென்றால்தான் வெற்றிடையலாம்.
* சோழி லக்னத்திற்கு ஆறாம் வீட்டில் புதன் உச்சமடைவதால், புத்தி சாதுர்யத்தால் வெற்றி கிடைக்கும். ஐந்தாமதிபதியாகிய சூரியன் புதனுடன் கன்னியிலிருப்பதும் புதாதித்ய யோகத்தைத் தரும்.
* சோழி லக்னத்தின் அதிபதியாகிய செவ்வாய், குருவின் பார்வை பெறுவதால் நினைத்த காரியம் நிறைவேறும்.
* சோழி லக்னத்தின் அதிபதியாகிய செவ்வாய் மேஷத்தில் ஆட்சியிலும், குரு பகவான் ரிஷபத்திலும், சனிபகவான் கும்பத் தில் ஆட்சிசெய்யும் காலத்தில், அதிகாரமான பதவி தேடிவரும்.
பரிகாரம்
* செவ்வாய்க்கிழமைகளில் பழனி முருகனை, இராஜ அலங்காரத்தில் தரிசனம் செய்தால், ஆட்சி, அதிகாரத் தில் வெற்றி கிடைக்கும். திருசெந்தூர் சென்று சத்ரு சம்ஹார ஹோமம் செய்தால், பகைவர்களை வெல்லலாம்.
(தொடரும்)
செல்: 63819 58636