அரண்மனையின் தர்பார் மண்டபமும் அதிலிருந்த அழகிய வேலைப் பாடுகளும், கலை நுணுக்கத்துடன் செதுக்கப்பட்ட தூண்களும், பளிங்குத் தரையும், பூ வேலைப்பாடுகள் கொண்ட திரைச்சீலைகளும் அந்த சமஸ்தானத் தின் செல்வச்செழிப்பைப் பறைசாற்றியது. நேற்றுவரை மங்கள இசை தவழ்ந்த அந்த மாளிகையில் இன்று மயான அமைதி குடிகொண்டிருந்தது. அந்த சமஸ்தானத்தின் ராணி தன் வைர அட்டிகை தொலைந்துபோன கவலையிலிருந்தார். ஆஸ்தான ஜோதிட ருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தன் உபாசனா தெய்வத்தை வேண்டி சோழிகளை உருட்டினார். ஆர்யா சப்ததி முறையில் ஆராய்ந்தார். லக்னத் தின் திரேக்காணத்தைக்கொண்டும் ஆறாம் வீட்டுடன் தொடர்புடைய ராசிகளைக்கொண்டும் திருடியவரின் பெயரையும், திருடப்பட்ட பொருள் இருக்குமிடத்தையும் கண்டறிந்தார். திருடியது மன்னர் என்றும், திருடப்பட்ட பொருள் இருப்பது ஒரு நடன மங்கையின் சயன அறை என்ற உண்மையையும் போட்டுடைத்தார்.
அவர் உடைத்தது ரகசியத்தை மட்டுமல்ல; சமஸ்தானத்தின் அமைதியையும்தான்.
மனநோயா? மாந்திரீகத்தின் விளைவா?
கேள்வி: என் மகள் (வயது 22) இரண்டு ஆண்டுகளாக மனநோய் பிடித்தவள்போல் இருக்கிறாள். மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டும் எந்த வித பலனுமில்லை. பிரசன்ன ஜோதிடத்தின்மூலம் இந்தப் பிரச்சினைக்கான காரணத்தையும், பரிகாரத்தையும் அறியமுடியுமா?
லட்சுமி விஸ்வநாதன்- சென்னை.
(கொடுக்கப்பட்ட பிரசன்ன எண்: 22, திருவாதிரை, 2-ஆம் பாதம்)
ஜாதகங்களை ஆராயும்போது கிரகங்களின் காலபலத்தை நிர்ணயம் செய்வதில் அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை. அயன பலம் (உத்ராயனம்- தட்சிணாயனம்) மாத பலம், வார பலம் (கிழமை), ஹோரா பலம், ஆகியவற்றை ஆராய்ந்தால் மட்டுமே கிரகங்களின் உண்மையான வலிமையை அறியமுடியும். இரவு, பகல் ஜனனங் களில் கிரகங்களின் காரகங்களில் மாற்றமுண்டு என்பதும் அறியப்படுவதில்லை. உதாரணத்திற்கு, இரவுநேர ஜனனத்தில் சந்திரன் மாதாகாரகனாகவும், பகல்நேர ஜனனத்தில் கேதுவே மாதாகாரகனாகவும் ஏற்கப்படுவதே கேரள ஜோதிடத்தின் தனிப்பெருமை. "பிரசன்னம் பரசுராம க்ஷேத்ரே' என்ற ஆன்றோரின் வாக்கின்படி, பிரசன்ன ஆரூடம் கேரளத்தில் சிறந்து விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
= சுப காரியங்களுக்கான நேரம் குறிக்கும்போது மகேந்திரயோகம், விஷ்ணு ப்ரியா யோகம், ஸ்ரீ நாதயோகம், சமுத்ரயோகம், விஜயயோகம், ஜெயா யோகம், புஷ்யயோகம், மகஷயோகம், அர்த்தமாயோகம் போன்ற ஒன்பது அமைப்பில் கிரகங்கள் இருந்தால் மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்கள்.
=ஜனன ஜாதகத்தில் ஆயுர்தாயக் கணிதம் செய்தபிறகே, மற்ற பாவப்பலன்களைக் கணிக்கிறார் கள். நாற்பது வயதுமட்டுமே இருக்கப்போகும் ஒரு ஜாதகருக்கு ஆறாவது தசையின் பலனைச் சொல்வது அறிவுடைமையாகாது என்பதை அறிந்திருக்கிறார்கள்.
=பிரசன்ன ஆரூடச் சக்கரத்தில், நிழல் கிரகங்களாகிய ராகு- கேது இருவரும் பன்னிரண்டு மற்றும் ஆறாமிடத்திலும் இருப்பது, ஜாதகர் உடல் நலமும் மன நலமும் பாதிக்கப்பட்டு இழுபறியில் போராடுகிறார் என்பது உறுதியாகிறது.
=மனதின் எண்ணத்திற்குக் காரகனாகிய சந்திரன் சனி நட்சத்திரத்திலும், சனியின் உப நட்சத்திரத்திலும் இருந்து, சனி பிரசன்ன லக்னத்திற்கு அஷ்டம மாதிபதியாக அஷ்டம ஸ்தானத் தில் ஆட்சி பெறுவது, ஜாதகரின் மனம், மலைப் பாம்பிடம் மாட்டிக் கொண்டவரைப்போல், துஷ்ட மந்திரத்தில் சிக்கித்தவிப்பது தெரிகிறது.
=பிரசன்ன லக்னம் திருவாதிரையில் அமைய, சந்திரன், விபத்துத்தாரை யாகிய உத்திரட்டாதியில் சஞ்சரிப்பது மனதின் குழப்பத்தைக் காட்டும்.
=பிரசன்ன லக்னம் உபய ராசியாகிய மிதுனத்தில் இருப்பது, பிறர் செய்த ஏவலால் வரும் உபாதையைக் காட்டுகிறது. செய்வினை, பிரச்சினையுண்டா என்று அறிந்துகொள்ள, மாந்தி அமரும் பாவத்தையும் கணக்கிடவேண்டும். மரணபயத்தைத் தரும் மாந்தி, பிரசன்ன லக்னத்திற்கு பன்னிரண்டில் அமர்வது துஷ்ட ஆவிகளின் தொல்லையைச் சுட்டிக்காட்டுகிறது. தீயசக்திகள் ஜாதகரின் உடலில், ஏவல்மூலம் புகுத்தப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.
=மாந்தி பிரசன்ன லக்னத் திற்கு பன்னிரண்டாமிடத்தில், அமானுஷ்ய நட்சத்திரமாகிய ரோகிணியிலிருப்பதும், செய்வினைப் பிரச்சினையைக் கோடிட்டுக் காட்டுகிறது.
=பிரசன்ன லக்னத்திற்கு 6, 8, 12-ல் மாந்திரீக கிரகமாகிய ராகு அமர்ந்து, ஆவியுலகத் தலைவனாகிய மாந்தி சேர்க்கை பெற்றால் ஜாதகர் துர்ஆவிகளினால் பீடிக்கப்பட்டு மரணவேதனை அடைவார் என்பது பொதுவிதி.
=பாதுகாப்பைத்தரும், பிரசன்ன லக்னத் தின் ஒன்பதாம் பாவாதிபதி எட்டாமிடத்தில் ஆட்சிபலம் பெறுவது, ஜாதகருக்கு தெய்வத்தின் அருள் குன்றியிருப்பதையும் காட்டுகிறது.
=பொதுவாக பிரசன்ன லக்னத்திற்கு எட்டா மிடத்தில், முக்கியமான நான்கு கிரகங்கள் சேர்ந்து கிரக யுத்தத்திலிருப்பது கெடுதலையே காட்டும்.
=பிரசன்ன லக்னத்திற்கு ஐந்து பன்னிரண்டுக் குடையவன், ஏழாமிடத்தில் இருப்பதால், இந்த ஜாதகர் ஒரு திருமண சம்பந்தத்தை நிராகரித்த தால் பழிவாங்கப்படுகிறார் என்பது புலனாகிறது.
=குரு பகவான் அதிசாரத்தில் கும்பத்தில் சஞ்சரிப்பதற்குள் பரிகாரங்களைச் செய்தால் பயனுண்டு.
பரிகாரம்
=பிரதி வியாழன், ஸ்ரீஆஞ்சனேயரை வழிபட்டால் துஷ்ட சக்திகள் விலகும்.
=தேய்பிறை அஷ்டமியில் காலபைரவரை வழிபட்டால், செய்வினையால் வரும் தொல்லை குறையும்.
=மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில், அமாவாசையன்று, பரிகாரபூஜைகளைச் செய்தால் செய்வினை விலகும்.
=ஸ்ரீ மகாசண்டி யாகத்தில் கலந்து கொள்வதால் ஜாதகர் பூரணநலம் பெறுவார்.
(தொடரும்)
செல்: 63819 58636