பிரசன்னம் பார்க்க வந்தவரின் முகத்தில் கவலையும், தடுமாற்றமும் பிரதிபலித்தன. சில நாட்களாகத் தன்னுடைய மனைவியின் மனோநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அந்த நோய் தீருவதற்குச் செய்யவேண்டிய பரிகாரத்தை பிரசன்ன ஆரூ டத்தின்மூலம் அறிய விரும்பினார். ஸ்ரீ பகளாமுகிதேவியை வணங்கி பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்னன் நம்பூதிரி.
பிரசன்ன லக்னத்திற்கு ஆறு, பன்னிரண்டு மற்றும் நான்காம் பாவத்தொடர்பு வலுத்திருப்ப தாலும், மனோகாரகனாகிய சந்திரன் பாதகத்தில் ஏறியதாலும் மனநோயின் தீவிரம் புரிந்தது. சர்ப்ப கிரகங்களின் மூன்றாவது சுற்றில், பெண்களுக்கு ஏற்படும் உடல்சார்ந்த மாற்றமே இந்த தொல்லைக்குக் காரணமானது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை அஷ்டமியில் துர்க்கையம்மனை வழிபட்டால் மனநோய் தீரு மென்பதே பரிகாரம். மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்த பூஜையால் கைமேல் பலன் கிடைத்தது. பிரசன்னம் பார்க்க வந்தவர் கிருஷ்ணன் நம்பூதிரியை வணங்கி நிம்மதி பெருமூச்சு விட்டார்.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு பிரசன்னம் கேட்பவரின் வாக்கும் மனமும் ஒரே விஷயத் தைக் குறிக்கிறதா என்பதை அறிந்த பின் ஆரூடம் பார்ப்பதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. சில நேரங்களில் பிரசன்னம் கேட்பவர் மனதில் நினைப்பது ஒன்றாகவும், கேட்கும் கேள்வி தொடர்பில் லாததாகவும் அமையும். மேஷம் பிரசன்ன ராசி- நவாம்சமாக அமைந்தால், இருகால் உள்ளவற் றைப் பற்றியதும், ரிஷப ராசி- நவாம்சமானால் நாற்கால் ஜந்துவைப் பற்றியதும், மிதுனமானால் கேட்கும் பிரசன்னம் கர்ப்பிணிப் பெண் குறித்தும், கடக ராசியில் பிரசன்னம் கேட்கும்போது வியாபார விவகாரங்களைப் பற்றியும், சிம்ம ராசியில் பிரசன்னம் கேட்கப்படும்போது அரசாங்க உத்தியோகம் குறித்தும், கன்னி ராசியில் என்றால் திருமணம் சம்பந்தமான கேள்வி எனவும், துலா ராசியில் கேட்கப்படும்போது தாது சம்பந்தமான விஷயங்கள் எனவும், விருச்சிக ராசியில் கேட்கப்படும்போது நோய் தொடர்பான விஷயம் எனவும், தனுசு ராசியில் பிரசன்னமாகில் தன லாபம் குறித்த விஷயம் எனவும், மகர ராசியில் கேட்பின் சத்ரு தொல்லை குறித்த பிரசன்னம் எனவும், கும்ப ராசியில் பிரசன்னமானால் மூதாதையர் சொத்து குறித்தது எனவும், மீன ராசியில் கேட்கப்பட்டால் முத லீடு மற்றும் அதனால் வரும் ஆதாயம், விரயம் பற்றியது எனவும் பொருள் கொள்ளலாம்.
பிரசன்ன லக்னம் மேஷ ராசியாக அமைந் தால் தங்கம் சம்பந்தப் பட்ட விஷயமெனவும், ரிஷப ராசியில் பிரசன்னமெனில் வெள்ளி குறித்த விஷயமெனவும், மிதுனமானால் செம்பு குறித்து விஷயமெனவும், கடக ராசியானால் வெண்கலம் குறித்தது எனவும், சிம்ம ராசியானால் அது இரும்பு சம்பந்தமான வினா என்றும், கன்னி ராசியா னால் வஸ்திரம் சம்பந்தப்பட்டது எனவும், துலா ராசியெனில் அது தானியம் சம்பந்தப் பட்டது எனவும், விருச்சிக ராசியெனில் புதையல் குறித்த வினா எனவும், தனுசு ராசியெனில் தனம் சார்ந்த பிரச்சினை எனவும், மகர ராசியெனில் நீரில்வாழும் உயிர் பற்றியது எனவும், கும்ப ராசியெனில் பழுது பார்த்தல் மற்றும் புனர மைப்பு குறித்த வினா எனவும், மீன ராசியெனில் கனவு பற்றியது எனவும் புரிந்துகொள்ளலாம்.
பிரசன்னம் கேட்கப்படும் கேள்வியின் நம்பகத் தன்மையைப் பரிசோதித்த பின்னரே ஆரூடம் பார்ப்பதால், கேரள ஜோதிடர்களின் கணிப்பு சிறப்பாக அமைகிறது.
வாழ்க்கையில் நிம்மதி கிடைக்குமா?
கேள்வி: நான் முப்பது ஆண்டுகளாக அரசுப் பணி யிலிருக்கிறேன். எனக்கு பணி யிடத்திலும் குடும்பத்திலும் நிம்மதியில்லை. இந்த நிலை மாறு வதற்குப் பரிகாரம் உண்டா?
-நிர்மலா, செங்குன்றம்.
(ஆரூட எண்- 55; சித்திரை மூன்றாம் பாதம்) ப் சோழி லக்னமும், பிரசன்ன லக்னமும், சந்திரனும் துலா ராசியில் அமைந்து சனி பகவானின் பத்தாம் பார்வையைப் பெறுவது, மனக்கலக்கத்தைக் காட்டுகிறது.
ப் சர ராசியாகிய துலா ராசிக்கு பாதக ஸ்தானமாகிய சிம்மத்தின் அதிபதி சூரியன் கடகத்தில் அமர்வது, அலுவலகத்திலும் வீட்டிலும் நிம்மதி யில்லாத அமைப்பை உறுதிப்படுத்துகிறது.
ப் கடக ராசி பிரசன்ன லக்னத்திற்கு பத்தாமிடமாகி, அதில் சூரியன் அமர்வது அரசாங்கப் பதவியையும் மாமி யாரையும் குறித்தாலும், சூரியன் துலாத்திற்கு பாதகாதிபதியாவதால் பாதகம் வந்தது.
ப் ஐந்தாமிடத்தில் குரு இருப்பதால் பிள்ளையாலும் தொல்லை.
ப் குரு இந்த மாதம் மகர ராசியில் உள்ளதால், ஓரளவு அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
ப் ஆறாம் வீட்டின் அதிபதி ஐந்தில் சஞ்சரித்ததால், ஜாதகருக்கு ஆரோக்கியத்தில் பாதிப்புண்டாகும்.
ப் பிரசன்ன லக்னத்தின் அறுபத்து நான்காவது நவாம்சம் கார்த்திகை இரண்டாம் பாதத்தில் அமைவதால், ராகு அந்த பாதத்தை கோட்சாரத்தில் கடக்கும்வரை இந்த பிரச்சினை நீடிக்கும்.
ப் சனிபகவானின் பார்வையில் பிரசன்ன லக்னம் அமைவதால், மனக்கலக்கமும் விரக்தியும் ஏற்படும். என்றாலும் முடிவில் நல்ல பலன் உண்டாகும்.
ப் சனிபகவானின் பார்வை சூரியனின்மீது பதிவதாலும், அது பிரசன்ன லனத்திற்கு பத்தாமிடமாக அமைவதா லும், அலுவலகத்தில் பிரச் சினையும், மேலதிகாரிகளின் அதிருப்தியும் தொல்லை தரும்.
ப் மனதில் ஏற்படும் கவலை நீங்க பரிகாரம் செய்ய வேண்டும்.
பரிகாரம்
ப் திங்கட்கிழமை சிவன் கோவிலுக்கு தாரா பாத்திரம் வாங்கி தானமாகத் தந்தால் தொல்லைகள் குறையும்; மனக்கலக்கம் தீரும்.
(தொடரும்)
செல்: 63819 58636