பிரசன்னம் பார்க்கவந்த பெண்ணின் சோகம் முகத்தில் பிரதிபலித்தது. தன்னுடைய மகன் விஞ்ஞான ஆராய்ச்சித்துறையில் உயர்கல்வி பயின்றுவருவதாகவும், அதில் தடையும் தாமதமும் ஏற்பட்டுவருவதாகவும் தெரிவித்தார். கல்வி நல்லமுறையில் தொடர செய்யவேண்டிய பரிகாரத்தை பிரசன்ன ஆரூடத்தின்மூலம் அறிய விரும்பினார். ஸ்ரீவித்யா தேவியை வணங்கி பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்னன் நம்பூதிரி.

பிரசன்ன லக்னத்திற்கு ஒன்பது, பதினொன்று மற்றும் நான்காம் பாவத்தொடர்பு வலுத்திருப்பதால், உயர்கல்வியும் ஆராய்ச்சியும் வெற்றிபெறும் என்பது உறுதியானது. மனோ காரகனாகிய சந்திரன் புனர்பூ தோஷத்தில் அகப்பட்டதால் ஏற்பட்ட தற்காலிகப் பின்னடைவே இந்தப் பிரச்சினைக் குக் காரணமானது. ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத் திரத்தில் ஹயக்ரீவரை வழிபட் டால் வெற்றி கிடைக்கும் என்பதே பரிகாரம். மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்த பூஜையால் கைமேல் பலன் கிடைத்தது. பிரசன்னம் பார்க்க வந்தவர் கிருஷ்ணன் நம்பூதிரியை வணங்கி, நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

dd

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

Advertisment

கர்ம பிரஸ்னம் எனும் தெய்வானுகூலம் பற்றி ஆராயும் முறையில் கேரள ஜோதிடர் களின் கணிதம் சிறப்பானது. தேவகோபம், நாகதோஷம், பூத, பிரேத சாபங்கள், செய்வினை பாதிப்பு போன்றவற்றின் காரணங்களைக் கண்டறிவதே, கர்ம பிரஸ்னம்.

ஒரு ஜாதகத்தில் குரு சாதகமாக இருந் தாலே அவருக்கு முழுமையான தெய்வானு கூலம் உண்டு என்ற முடிவுக்கு வரலாம்.

தேவகோப லட்சணம்: சூரியனுக்கோ அல்லது பிற கிரகங்களுக்கோ பன்னிரண்டா மிடத்தில் அசுப கிரகம் இருந்தால் தெய்வத் தின் சிலையை சேதப்படுத்தியதால் வந்த தோஷமென்று அறியலாம்.

Advertisment

ஆறு, எட்டு, பன்னிரண்டாம் வீட்டு அதிபதிகள் இரண்டாம் வீட்டிலோ, பன்னிரண்டாம் வீட்டிலோ இருந்தால் கோவில் சொத்தை அபகரித்த பாவத்தால் தேவகோபம் உண்டாகும்.

நாக தோஷம்: குரு பாதகாதிபதியாகி ஆறு, எட்டு, பன்னிரண்டில் அமர்ந்து, அது ராகுவுக்கு கேந்திரமாக அமையுமானால் சர்பங்களின் கோபத்தால் வந்த தோஷம்.

பிரேத சாபம்: குளிகன், செவ்வாயின் ராசி, நவாம்சத்திலிருந்தாலும், சேர்க்கை, பார்வை பெற்றாலும் பிரேத சாபம் உண்டென்று கருதவேண்டும். இயற்கைக்கு மாறாக இறந்தவருக்கு சரியான முறையில் ஈமச்சடங்குகள் செய்யாதவருக்கு இந்த சாபத்தால் தொல்லையுண்டாகும்.

விபரீதக்கனவு பலிக்குமா?

(ஸ்வப்னப் பிரசன்னம்)

dd

கேள்வி: நான் சில நாட்களாக அச்சம் தரும் கனவைக்கண்டு பதட்டத்திலிருக்கிறேன். ஒரு நாகப்பாம்பு என் வலக் கையைக் கடிப்பதாகவும், அதனால் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு இறந்துபோவதாகவும் கனவு வருகிறது. இந்தக் கனவு பலித்துவிடுமா? இந்தக் கனவு வராமலிருக்க பரிகாரம் உண்டா?

-சுகுமாரன், தக்கலை.

(ஆரூட எண்- 27; புனர்பூசம் மூன்றாம் பாதம்)

* சோழி லக்னமும், பிரசன்ன லக்னமும் திரிகோணத்தில் அமைவது சுபப் பலனையே காட்டுகிறது.

* பன்னிரண்டாம் வீடு, உறக்கம், கனவு போன்றவற்றைக் குறிப்பது. சோழி லக்னத்திற்கு பன்னிரண்டில் ராகு இருப்பதால், நாகம் கனவில் வருவதை முக்கிய அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம்.

* செவ்வாயும் புதனும் சூரியனுக்கு முன்னால் அமைவதால், இதஸல யோகம் பெறுகிறது. இது ஒரு நல்ல அமைப்பு.

* சோழி லக்னம், திரி கோணத் தொடர்புடன், தசம கேந்திரத் தொடர்பும் பெறுவதால் தீர்க்காயுள் உண்டு; ஆபத்து இல்லை.

* சனிபகவான் இருக்குமிடத்தை விருத்தி செய்வார் என்பதால், எட்டாமிடத்து ஆட்சி நீண்ட ஆயுள் தரும்.

* ஆறாம் வீட்டில் கேது அமர்வதால், கடன், ரோகம் நீங்கும்.

* சோழி லக்னம் உபய ராசியிலும், பிரசன்ன லக்னம் சர ராசியிலும் அமைவதால், பிறர் உதவியால் பிரச்சினை தீரும்.

* சனிபகவானின் பார்வையால் மனக்கலக்கமும் அச்சமும் உண்டாகும் என்றாலும், முடிவில் நல்ல பலன் உண்டாகும்.

* கனவு சாஸ்திரத் தின்படி, இதுபோன்ற கனவு திடீர் பண வரவையும், புகழ் பெருகுவதையும் காட்டும் நல்ல அறிகுறியாகவே கருதப்படும்.

* மனதில் ஏற்படும் அச்சம் நீங்க பரிகாரம் செய்யவேண்டும்.

பரிகாரம்

காளஹஸ்தி சென்று, ஞாயிற்றுக்கிழமை ராகுகால பூஜைசெய்தால், கனவினால் வரும் மனக்கலக்கம் தீரும்.

(தொடரும்)

செல்: 63819 58636