பிரசன்னம் பார்க்கவந்தவரின் பெரு மூச்சும், கவலை படர்ந்த முகமும் அவருடைய பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்தியது. தன்னுடைய மகள், சமீபகாலமாக மனகுழப்பத்தில் இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சை பயனளிக்கவில்லையென்றும் தெரிவித்தார். அதர்வணக் காளியை வணங்கி, பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.
பிரசன்ன லக்னத்தின் எட்டாம் வீட்டிலமர்ந்த மாந்தி, ஒன்பதாம் வீட்டோனுடன் தொடர்பிலிருந்தது. சூரியனுக்கு பன்னிரண்டில் அசுப கிரகச் சேர்க்கை, தேவகோபத்தைக் காட்டியது. செவ்வாய் அபபரணியில் இருப்பதால், அக்னி பகவானின் கோபத் தால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது என்பது உறுதியாகிறது. ஹோமங்களைச் செய்துவிட்டு, முறையான அக்னி சாந்திப்பூஜை செய்யாமல் போனால், இதுபோன்ற விளைவுகள் உண்டா கும். சிவனுக்கு சங்கால் அபிஷேகம் செய்து பிரதிமா தானம் செய்தால், நோய் குணமாகும். பிரசன்ன ஆரூடத்தில் சொல்லப்பட்ட பரிகாரம் பயனளித்தது. பிரசன்னம் கேட்க வந்தவரின் மனம் நிம்மதியடைந்தது. பிரசன்ன ஜோதிடத்தின் பெருமை புரிந்தது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
மழைபற்றிய பிரசன்னமாகிய "வர்ஷ பிரச்னம்' காண்பதில் நூதன முறைகளைக் கையாள்வதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. மழையின் அறிகுறியைக் காணும் பிரதேச லக்னம் ஜல ராசியிலிருப்பதே அடிபடையாக அமையும்.
1. சூரியன் மிதுனத்திலிருக்க, சந்திரன் ஜல ராசி நவாம்சத்திலிருந்து, குரு- சுக்கிரன், சூரியனுக்கு இரண்டு, பன்னிரண்டி லிருக்க மழை பொழியும்.
2. கற்போட்டம் (கர்ப்போட்டம்)- இதுவொரு மழைக்குறி. கர்ப்போட்ட காலங்களில் வானத்தில் இந்திர வில், மேகம், பரிவேடம் என்பவற்றுள் ஒன்றிருப்பின் அந்த மாதங்களில் மழையுண்டு.
3. வைகாசியில் கேட்டை நட்சத்திரத்தில் சந்திரன் இருக்க பௌர்ணமி அமையுமானால், அந்த வருடம் கார்த்திகை மாதத்தில் அடை மழையால் வெள்ளம் உண்டாகும்.
கடன் தீருமா?
கேள்வி: நான் பல ஆண்டுகளாக கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறேன். என் சகோதரர்கள் வெளிநாட்டில் வளமாக இருக்கிறார்கள். அவர்களை உதவிகேட்டும் இன்றுவரை கிடைக்கவில்லை. கடன்தீர பரிகாரம் உண்டா?
-ராதாகிருஷ்ணன், சேலம்.
(ஆருட எண்- 54; சித்திரை இரண்டாம் பாதம்)
* சோழி லக்னமும், பிரசன்ன லக்னமும் இரண்டு, பன்னிரண்டாக அமைவது பிரச்சினையின் தீவிரத்தைக் காட்டுகிறது.
* சோழி லக்னம் செவ்வா யின் நட்சத்திரத்தில் அமைவது பணத் தட்டுப் பாட்டைக் காட்டுகிறது.
* செவ்வாய் சூரியனுக்கு முன்னால் அமைவ தால், இதஸல யோகம் பெறுகிறது. இது ஒரு நல்ல அமைப்பு.
* சோழி லக்னமும், நாளின் அதிபதியாகிய சுக்கிரனும் சித்திரை இரண்டாம் பாதத்திலிருக்க, சுக்கிரன் நீசம்பெறுவது வருமானத் தில் தடை உள்ளதைத் தெரிவிக்கிறது.
* மூன்றாம் அதிபதியாகிய செவ்வாய் பன்னிரண்டாம் வீட்டில் அமர்வதால், இளைய சகோதரர்களால் அனு கூலமில்லை.
*மூன்றாம் வீடு வெற்றி ஸ்தானம். அதில் கேது அமர்வ தால், தடையும் தாமதமும் ஏற்பட்டாலும், முடிவில் வெற்றியடைவது உறுதி.
* சோழி லக்னம் உபய ராசியிலும், பிரசன்ன லக்னம் சர ராசியிலும் அமைவதால், ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்தாலும், பிறர் உதவியால் பிரச்சினை தீரும்.
ப் சோழி லக்னத்தில் குரு ருண ஸ்தான மாகிய ஆறில் அமர்ந்து, ஒன்பதாம் பார்வை யால் தன ஸ்தானமாகிய இரண்டாம் வீட்டைப் பார்ப்பது ஆதாயம் தரும்.
* சோழி லக்னத்திற்கு பன்னிரண்டாம் வீட்டில் சூரியன் அமைவது, அரசாங்கத்தின் அபராதம் மற்றும் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்பதைத் தெரிவிக்கிறது.
பரிகாரம்
* விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோவிலில் திங்கட்கிழமை வழிபடவேண்டும்.
* வெள்ளிக்கிழமை ராகு காலத்தில், திருப்பதி அலர்மேல் மங்கைத் தாயாரை வழிபாடு செய்தால் கடன் தீரும்.